தலைப்பு

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

ராம ஜென்ம பூமியிலிருந்து கிருஷ்ண ஜென்ம பூமி வரை...

ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நகைச்சுவையும் எங்கும் நிறை தன்மையும்!

பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயிபாபா அறியாததேதும் இல்லை.. போகிற போக்கில் தான் இறைவன் என்பதை புரிய வைப்பது அவரின் திருக்கல்யாண குணம்..
விழிப்புணர்வு பெற்றவரால் மட்டும் அவர் கருணையோடு அதைப் புரிந்துணர முடியும்... அப்படி சர்வ சகஜ நிலையில் இறைவன் சாயி தன்னை உணர்த்திச் சென்ற அனுபவம் இதோ..


சுவாமி ஒரு முறை கல்லூரி மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தார். அப்போது சுவாமிக்கும் ஒரு மாணவனுக்கும் இடையே நடந்த உரையாடல்.

Swami:   உன் பெயர் என்ன ?
Student: விக்னேஷ், சுவாமி!

Swami:   என்ன படிக்கிறாய் ?
Student:  B.Sc, இரண்டாம் ஆண்டு, சுவாமி!

Swami:   உன் தந்தையார் என்ன வேலை செய்கிறார் ?
Student:  இன்ஜினியர், சுவாமி!

Swami:   இப்போது அவர் எங்கே உள்ளார் ?
Student:  He is in 'Rama Janma Bumi'. (அவர் அயோத்தியில் உள்ளார் என்பதை இவ்வாறு குறிப்பிட்டான்.)

Swami:   No, now he is in 'Krishna Janma Bumi'. ( இல்லை, அவர் இப்போது கிருஷ்ண ஜென்ம பூமியில் இருக்கிறார்.)

Student:  இல்லை,  சுவாமி!


சுவாமி சிரித்தபடி சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அந்த மாணவனுக்கு வீட்டிலிருந்து போன் வந்தது. கரசேவைக்கு சென்றிருந்த அவனது தந்தையார், கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் இருப்பதாக வீட்டில்  உள்ளவர்கள் தகவல் தெரிவித்தனர்.

சுவாமி கூறிய 'கிருஷ்ண ஜென்ம பூமி' என்பது 'சிறைச்சாலை' என்பதை அறிந்து, மாணவர்கள் சுவாமியின் எங்கும் நிறை தன்மையை எண்ணி வியந்தனர்.

ஆதாரம்: Students with Sai : Conversations.
தமிழாக்கம்: S. Ramesh, Ex-Convenor, Sai Samithi, Salem.


🌻 பக்தர்களின் பதிலிலிருந்தே.. ஹாசியத்தையும்.. அப்படியே ஆத்ம அனுபவத்தையும் வழங்குவது பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயிபாபா ஒருவரே! 
இந்த மண் இன்றளவும் பல சோதனைகளின் மத்தியில் பிளக்காமல் பொறுமையோடு இருக்கிறதென்றால் அதற்கான ஒரே காரணம் அது இறைவன் சத்யசாயியின் திருப்பாதத்தைச் சுமப்பதால் மட்டுமே! 🌻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக