தலைப்பு

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

இறை நம்பிக்கையும்.. புலனடக்கமுமே முழுமையான ஆரோக்கியம்!


இறைவன் சத்ய சாயி மீது ஏற்படுகிற விடாப்பிடியான அர்ஜூன நம்பிக்கை.. அதாவது சர்வமும் அவரே ... சகலமும் அவர் செயலே எனும் நம்பிக்கையே முழுமையான ஆரோக்கியம் தரும் வைட்டனமின் S ... என்பதை உணர்த்துகிறார் இறைவன் சத்ய சாயி 

செல்வந்தனாகவும், நன்னெறியாளராகவும் மட்டும் ஆவதால் மனிதன் முழுமையானவன் ஆவதில்லை, ஆன்மீக வளர்ச்சியும் தேவை. உடல், மனம் (பொருள்), ஆவி ஆகிய மூன்றும் கலந்ததுதான் மனிதன். விலங்குகள் உடலைப்பற்றியே கவலை கொள்ளும், மனம் படைத்ததால்தான் மனிதன் உருவாகியுள்ளான். ஆவியை(ஆன்மாவை) வளர்த்தால் தெய்வீகத்தன்மை பெறலாம். இந்த மூன்றும் ஒன்றோடொன்று கலந்ததும், தொடர்புடையதும் ஆகும். ஒன்று இன்னொன்றை வளர்க்கும். மனம் இன்றி உடல் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது. மனமும் உடலும் உயிருக்குப் பணிந்தால்தான் தெய்வீக ஆன்மாவை உணர இயலும்.

ஒழுங்கான வாழ்வு நிகழ்த்த ஆரோக்கியம் தேவை.

ஆரோக்கியம் என்பது முழுமை அல்லது நிறைவு என்பதாம்.
மனிதன் வாழ்வு எனும் போரில் வெற்றிபெற மனதையும், புலன்களையும் வென்றாக வேண்டும். சுயகட்டுப்பாடு என்பது புலனடக்கம் அல்லது மன அடக்கம். இதை வேறு வழியில் சொன்னால் 'சம்ஸ்கிருதி' (பண்பாடு). பண்பாடு வாழ்வின் ஒவ்வொரு விஷயத்திலும் புலப்பட வேண்டும். படிப்பதில், உண்பதில், உறங்குவதில், விளையாட்டில் என்று பண்பாடு பண்பாய் பரிணமிக்கும்.

உயிர்வாழ்வதில் பயனுள்ளதாய் இருக்க வேண்டும். அந்த நம்பிக்கை இல்லையென்றால் வாழ்வு கட்டுக்கோப்பற்றதாய் வீணாகும். அது இருந்தால் தெய்வீகத்தன்மை அடையலாம். இறைநம்பிக்கைதான் நம்மை நெறியுடைய நல்வாழ்வை நடத்தத்தூண்டும்.


கிரேக்க நாட்டில் ஒருமுறை ஒரு பால்காரர் மீது, பாலில் நீர் கலந்ததாக நீதிமன்றத்தில் புகார் கொடுக்கப்பட்டது. நீதிபதி ஆராய்ந்து அறிந்ததில் பாலில் கலப்படம் செய்யப்பட்டதை உணர்ந்து உத்தரவு செய்ய எத்தனித்தார். ஆனாலும் அந்த பால்காரர் மன்றாடிக் கேட்டுக் கொண்டதில் ஏதோ உண்மை ஒளிந்திருப்பதை உணர்ந்து, அதை கண்டறிய முனைந்தார். அதன் காரணமாய் அந்த பால்காரரின் நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்தார். அப்போதுதான் பால்காரர் தனது பசுக்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரம் கறப்பது தெரிந்தது. காலை 6 மணி, 4 மணி. இன்னும் தூக்கம் வராத நாட்களில் காலை 3 மணி என்று மாறி மாறி பால் கறந்ததால் பாலின் குணம் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பால்காரர் கண்டனத்துடனும் இனிமேல் சீரான நேரத்தில் பால்கறக்க வேண்டும் என்ற உத்தரவுடனும் தப்பித்துக் கொண்டார்.

ஆதாரம்: ஸ்ரீ சத்ய சாயி பாபா - -23.3.1984

🌻 சீரான குணம் சீரான வாழ்க்கையால் ஏற்படுகிறது.. ஒழுங்கான சப்தமே தாளம்.. ஒழுங்கான ஓசையே இசை.. ஒழுங்கான மனக் குவிப்பே பக்தி.‌ அந்த பக்தியானது இறைவன் சத்ய சாயி மீது ஏற்படுவதை விட மனித வாழ்க்கையில் நாம் அடையப்போகும் ஆரோக்கியம் வேறு எதுவுமில்லை... 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக