தலைப்பு

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி பலருக்கு தெரியாதவை (பகுதி1):

ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு, பெயரின் அர்த்தங்கள்

இறைவன் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் தான் துவாபர யுகத்தில் அவதரித்த போது கிருஷ்ணா எனும் அவரின் பெயருக்கான ஆழமான காரணத்தையும் .. உட் பொருளையும் விவரிக்கிறார் இதோ.. அவரை தவிர வேறு யாரால் இத்தனை ஆழமாக அவரை விளக்கிவிட முடியும்?

ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பு:

பகவான் க்ருஷ்ணர் பிறந்தது 20 ஜூலை, 3228 ஆண்டுகள் இயேசு பிறப்பதற்கு முன். (கி.மு 3228). நமது இந்து காலண்டர்படி ஸ்ரீ முக வருஷம் ஸ்ரவண மாதம் பஹுல பக்ஷம் அஷ்டமி திதி. ஸ்ரீ கிருஷ்ணரின் நக்ஷத்திரம் ரோகிணி.

பிறந்த நேரம்:

காலை 3 மணி. (நமது ஸ்வாமி இந்த உரை நிகழ்த்தியது 1976ம் ஆண்டு). அந்த நாளில் இருந்து கணக்கிட்டால் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்து 5078 ஆண்டுகள்
ஆகின்றன. (3102 + 1976 = 5078) எனபவ கலியுகம் ஆரம் பித்து 5078 ஆண்டுகள் ஆகின்றன.

ஸ்ரீ கிருஷ்ணர் பெயரின் முக்கியத்துவம்:

ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரின் அர்த்தம் நாம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
கிருஷ்ணரின் பெயருக்கு மூன்று அர்த்தங்கள் உண்டு.

1வது அர்த்தம்: 'கிருஷ்யதி இதி கிருஷ்ணா'

ஸ்ரீ கிருஷ்ணரை பயிர் இடுதல்; நாம் எதனை பயிரிட வேண்டும்? ஹ்ருதய
க்ஷேத்திரத்தில் நம்மிடம் உள்ள தீய குணங்களை அழித்து, அன்பு எனும் நீர்
ஊற்றி, சாதனை எனும் கலப்பை கொண்டு, பக்தி எனும் விதை விதைத்து பயிர் இட வேண்டும்.


2வது அர்த்தம்: 'கர்ஷ்யதி இதி கிருஷ்ணா':

நம்மை கவர்ந்து கொள்பவர் (ஈர்பவர்) கிருஷ்ணர். கிருஷ் ணர் தனது
கண்களாலும், பேச்சினாலும், விளயாட்டுக்களாலும், தனது ஒவ்வொரு செய்கைகளாலும் நம்மை கவரூபவர் ஸ்ரீ கிருஷ்ணர். நம்முடைய மனங்களில் உள்ள வெறுப்பை நீக்கி, மிருதுவாக்கி, அமைதிப் படுத்தி நம்மை இன்ப நிலைக்கு கொண்டு செல்பவர்.

3வது அர்த்தம்: 'குஷ்யதி இதி கிருஷ்ணா':

எப்போதும் பேரின்ப நிலை தருபவர். ஸ்ரீ கிருஷ்ணர் எப்போதும் பேரின்ப நிலையில் இருப்பதால், கர்க முனிவர் அவருக்கு கிருஷ்ணா எனப் பெயரிட்டார்.

சாதாரணமாக கிருஷ்ணா என்றால் கறுப்பு. ஆனால் அவரது பெயரின்
உள்ளார்ந்த பொருள் புரிந்து கொள்ளவில்லை. உலகிற்கு உண்மையை
கூறுதல், நித்தியமான (eternal) மதிப்புகள் (values) உலகிற்கு எடுத்து  செல்லுதல், அவரது லீலைகள் மூலம் எல்லோருக்கும் இன்பம் தருதல் - இவைதான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கையின் பொருள் ஆகும்.

ஆதாரம்: Sathya Sai with Students

3 கருத்துகள்: