தலைப்பு

சனி, 29 ஆகஸ்ட், 2020

பாபாவால் காப்பாற்றப்பட்ட சுதா ரகுநாதன்!

Sudha Ragunathan. One of the brightest stars of Carnatic music in India

திரையிசையிலும் கர்னாடக சங்கீத உலகிலும் தனக்கெனத் தனி இடத்தைத் தக்கவைத்துக்கொண்டு புகழ்பெற்று விளங்குபவர், சங்கீத கலாநிதி கலைமாமணி சுதா ரகுநாதன். இவர் பத்மஸ்ரீ, பத்மபூஷண் ஆகிய பட்டங்களுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளுக்கும் சொந்தக்காரர். 

1958 நவம்பர் 26ம் தேதி பெங்களூரைச் சேர்ந்த ஆடிட்டர் S.R. வெங்கட்ராமன், பகவானின் பிறந்தநாள் விழாவில் தன் குடும்பத்தினருடன் பங்கேற்றபின் காரில் பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பாகேபள்ளிக்கு அருகில் சென்று கொண்டிருந்த சமயம், அவரது இரண்டு வயதுப் பெண் குழந்தைக்கு இழுப்பு வந்துவிட்டது. குழந்தை மூச்சுத்திணறி மயங்கியும் விட்டது.

எல்லாமறிந்த பாபா, கிராமத்து கிழவன் உருவம் கொண்டு, தன்னுடன் இரு கிராமத்து ஜனங்களையும் சிருஷ்டித்து அழைத்துக் கொண்டு அங்கு தோன்றினார். குழந்தையைத் தன் கையில் கொடுக்குமாறு அவர்களை வற்புறுத்தினார். கூட வந்தவர்களும் “அவரிடம் கொடுங்கள். அவர் அந்தக் குழந்தையை நலமாக்கித் தருவார்" என்று கூறினார்கள். அந்தக் கிழவர் கூறினார், “மூன்று நாட்களாக எனக்கு அதிகமான வேலைகள் இருந்தன. இப்பொழுதுதான் கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம் என்று படுத்தேன். ஆனால் ஒரு குழந்தை சாலையில் மிக ஆபத்தான நிலையில் இருப்பது தெரிந்து உடனே ஓடிவந்தேன்” எனக் கூறிக் குழந்தையை வாங்கித் தனது மடியில் படுக்கவைத்துக் கொண்டார். 

அவர் கை பட்ட சில நொடிகளில் குழந்தை குணமாகிவிட்டது. குழந்தையைப் பெற்றோர்களிடம் கொடுத்தார். அவர்களது சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை! அவர்கள் அவருக்கு ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தார்கள். ஆனால் அந்தக் கிழவர் அதை வாங்கிக்கொள்ளவில்லை. பாபா கொடுத்தனுப்பி இருந்த பழத்திலிருந்து ஒரு பழத்தை எடுத்து அவரிடம் அளித்தார்கள்! “உனது பெயர் என்ன?” என்று கேட்ட அவர்களுக்கு, “ஜோடி ஆதிபள்ளி ஸோமப்பா” என்று கூறிச் சென்றார் அந்தக் கிழவர். பின்னால், அவர்கள் பிரசாந்தி நிலையத்திற்குச் சென்றபோது பாபா அவர்களிடம் பேசினார். அச்சமயம் பெற்றோர்கள் பாபாவிடம் கேட்டனர் “ஏன் அந்தப் பெயரை தேர்ந்து எடுத்தீர்கள் சுவாமி” என்று! ஸோமப்பா – சிவன், உமா- சிவசக்தி, ஆதிபள்ளி – கைலாசம் என்று சிரித்துக் கொண்டே கூறினார் பாபா.


ஆதாரம்: Sri Sathya Sai Digvijayam Part 1 (1926 to 1985)

பகவானால் காப்பாற்றப்பட்ட அக்குழந்தை வேறு யாருமில்லை...மேலே உள்ள படத்தில் காணப்படும் திருமதி சுதா ரகுநாதன் அவர்கள்தான்!

பாபா தன் வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்களை பற்றி திருமதி  சுதா ரகுநாதன் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் ஆடியோ


(19-11-2010 புட்டபர்த்தியில் சுவாமியின் முன்னிலையில் திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பாடிய வீடியோ) 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக