இறைவனோடு எந்த பாஷையில் பேச வேண்டும் எனக் கேட்டால்.. எதுவும் பேசாமல் நினைத்த மாத்திரத்திலேயே பதில் அருளும் ஒரே பரம்பொருள் சத்ய சாயி என்பதே பூரண பதில். அவர் எந்த பாஷையில் பேசுவார் எனக் கேட்டால்.. பிரேமையே அவரின் பரிபாஷை அதனை மொழி பெயர்த்தால் உலகத்தின் எல்லா மொழியிலும் அது பதிலளிக்கும் என்பதன் மகிமையைப் பேசும் பதிவு இதோ...
ஜார்ஜ் இஸ்டட் என்பவர் மெலிந்த ஆனால் சக்தியுள்ள, ஓய்வு பெற்ற (ஆஸ்திரேலிய மாகாண ஆர்ட்கேலரி நிர்வாக அதிகாரி) 73 வயது மனிதர் ஆவார். அவர் முதன் முதலாக தனது 73வது வயதில் பாபாவைச் சந்தித்தார். ப்ருந்தாவனில் அவர் அமர்ந்திருந்த பக்கம் பாபா வந்தார், இவருக்கு அருகில் அமர்ந்திருந்த புழுதி படிந்த, மௌனமாக அமர்ந்திருந்த ஒரு மனிதரை நோக்கி பாபா வந்தார். அந்த மனிதரின் முதுகில், ஒரு குழந்தையை தட்டிக்கொடுப்பது போல பாபா தட்டிக் கொடுத்தார். ”எல்லாம் சரியாகிவிடும் கவலைப்படாதே” என்றும் கூறினார். ”நான் முழுப் பொறுப்பு ஏற்கிறேன். நீ வீட்டிற்குப் போ உன் மகள் விரைவில் சரியாவதை நீ காண்பாய், 3 நாட்களில் அவள் முழுவதும் குணமாகிவிடுவாள்” என்றார்.
பாபா கையை உயர்த்தியதும் உள்ளங்கையில் இருந்து விபூதி கொட்டியது! உண்மையில் நிறைய விபூதி கொட்டியதில் ஜார்ஜுக்கும் , அந்த மனிதருக்கும் மூச்சு திணறியது! பாபா ஜாடை காண்பித்தபடி அந்த மனிதர் கைகளை சேர்த்து கிண்ணம் போல் வைத்துக்கொண்டார். பாபாவின் ஆணைப்படி விபூதியை உண்டார். இப்பொழுது மிகவும் உணர்ச்சி மேலிட்டவர் ஆனார். பாபா தட்டிக்கொடுத்து அன்பான வார்த்தைகளைக் கூற அவர் எழுந்து சென்று விட்டார்.
இப்பொழுது மகிழ்ச்சியில் அந்த மனிதர் ஜார்ஜுக்கு புரியாத ஒரு பாஷையில் ஏதோ கூறிக் கொண்டே சென்றார். அவருக்காக தானும் மகிழ்வதாக ஜார்ஜ் கூற அவருக்கும் ஜார்ஜ் கூறியது புரியவில்லை! மற்றொருவர் மொழி பெயர்த்து ஜார்ஜுக்கு கூறினர். "அந்த வயதான கிழவனின் மகள் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும், யாரோ யோசனை கூறியதன் பேரில் பாபாவை தரிசிக்க நெடுந்தூரம், நெடு நாட்கள் நடந்து வந்துள்ளார். இன்று காலை வரை பாபா அவரை கவனிக்கவில்லை! இப்பொழுது தான் பார்த்து பேசி விபூதி அளித்தார். “ஆனால் பாபா நான் பேசும் ஆங்கிலத்தில் அல்லவா பேசினார். அது அந்த முதியவருக்குப் புரிந்திருக்குமா?” என வினவ, மொழி பெயர்ப்பாளர் சிரித்து விட்டு ”பாபா அந்த முதியவரின் பாஷையில் தான் பேசினார், ஆனால் உங்களுக்கு உங்கள் பாஷையில் கேட்டுள்ளது!, இதே போல் ரஷ்யன்,சைனீஸ் ஆகியவர்களுக்கு அவர்கள் பாஷையில் கேட்கும், என்றார். இது சாதாரண விஷயமா? ஆச்சரியமாக இல்லையா?!!.
ஆதாரம்: The Heart of Sai: Lowenberg, R / Pg–118,119
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.
🌻 இறைவன் சத்யசாயியே ஆதி மோன மூர்த்தி.. அந்த மௌனமே பல பாஷைகளாக இன்றும் மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது. கனிவும் பணிவும் கலந்த பக்தனின் மொழியே சத்யசாயி பரமனுக்கு மிகவும் பிடித்தது.. அதுவே ஆன்மிக தேடலில் நம்மை ஆழ்த்துவது! 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக