தலைப்பு

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

ராணுவ அதிகாரியை வாட்ச்மேன் வடிவில் காப்பாற்றிய சாயி!

இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றிய Col. S. K. போஸ்  அவர்களின் சத்ய சாயி அனுபவம்..

கவனித்துக் கொள்வது என்பது இரண்டு வகை .. மனிதரின் நடவடிக்கையை கவனிப்பது மற்றும் மனிதரின் தேவையை கவனிப்பது.. கல்லுக்குள் மறைந்திருக்கும் தேரைக்கும் இறைவனே உணவளிக்கிறான். அப்பேர்ப்பட்ட இறைவன் சத்யசாயியின் கவனிப்பில் மீண்டும் புறப்பட்ட ஒரு வாழக்கை பயணம் இதோ...

ஒரு முறை ராணுவ குழு கேப்டன் Col. S. K. போஸ் அவர்கள், தனது மனைவி, மாமனாருடன் அம்பாலாவிலிருந்து, கௌஹாத்திக்கு ஒரு நல்ல தரமான காரில் பயணித்துக் கொண்டிருந்தார். ஹரிஹர்கன்ஜுக்கு அருகே கார் வரும் பொழுது சொத சொதப்பான பாதையில் மாட்டிக்கொண்டது. இரவு 11.30 க்கு எந்த உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை. மொத்த பகுதியும் கனத்த மழையால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. பின் சக்கரங்கள் இரண்டும் நன்கு சேற்றில் மாட்டிக் கொண்டுவிட்டன. அதை வெளியே எடுக்க முயன்றால் இன்னும் ஆழமாக புதைந்தது தான் பலன்!.

அருகிலிருந்த பள்ளியில் மற்றவர் சென்று வெறும் பெஞ்சுகளில் படுத்து உறங்க ஆரம்பித்தனர். ஆனால் அந்த அதிகாரி எப்படியாவது கௌஹாத்தியை சென்று அடைந்து, ஒரு அரசாங்க ராணுவ குழுவிற்கு உரையாற்ற வேண்டி இருந்தது. ”கடமையே கடவுள், வேலைதான் வேண்டுதல்”- Duty is God, Work is worship என்று பாபாவின் வரிகளை வேறு கூறினார்.


பொழுது விடிந்த பின்பும், கடந்து செல்லும் எந்த வாகனமும் உதவி செய்ய முன் வரவில்லை! வேடிக்கை பார்த்த கிராமத்தினர் விரலைக்கூட அசைக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக குழு கேப்டன் போஸ் கொஞ்சம் ’தான்’ என்ற தன்மையுடன் இருந்தார். அவர் ஸாயி பவரைவிட ஹார்ஸ் பவரையை (horse power) நம்பினார். கயிறுகள் போட்டு இழுத்தும் பயனில்லை! ஓ சத்ய சாயி உமது திருவடியே சரணம் – என்று கூறி போஸ் விழுந்து விட்டார்.

உடனே நல்ல திடகாத்திரமான உடலோடு ஒருவர் வந்தார். யாருக்குமே அவரை அடையாளம் தெரியவில்லை!  தான் பிடித்திருந்த குடையை திருமதி. போஸிடம் கொடுத்துவிட்டு, போஸ் காரில் ஏறி உட்காரச் சொல்லி கூறப்பட்டார். ஒரு இனிய மணம் வீசலாயிற்று இஞ்ஜின் ஸ்விட்ச் ஆன் செய்யப்படும் முன்பே, கூட்டம் வந்து உதவிக் கரம் நீட்மும் முன்பே, அந்த புது மனிதர் தனது வலது கையில் பம்பரை ஒரே முயற்சியில் தூக்கி, காரை மேலே ரோடு பக்கம் கொண்டு வந்து விட்டார். 4 சக்கரங்களும் பத்திரமாக இருந்தன.

எல்லோரும் காரில் ஏறிக்கொண்டனர். அந்த புது மனிதரை பார்த்து நன்றி கூற முற்பட்டு, ”நீங்கள் யார் என்ன” என்று கேட்ட பொழுது, ”நான் ஒரு வாட்ச் மேன்” என்று கூறி நடந்து சென்று விட்டார். வேகமாக காரை ஓட்டிச் சென்று அவரை நெருங்கி, சுறுசுறுப்பாக நடந்து சென்று கொண்டிருந்தவரை ” நீங்கள் ஏதாவது வாங்கிகொள்ளவேண்டும்” என வற்புறுத்தி கெஞ்ச, அவர் மறுத்துவிட்டார். ஒரே ஒரு வாக்கியம் மட்டும் பேசினார்- ”ஏன் நேற்று இரவே என்னை அழைக்கவில்லை?”. அப்படி அவர் சொன்னது இவருக்கு ஆச்சர்யத்தை அளித்தது. 

அந்நொடியிலேயே தான் மனமுருகி நினைத்த சத்ய சாயி பாதகமலங்கள் தான் நேரில் வந்துள்ளன என உணர்ந்து புளகாங்கிதம் அடைந்தார்!!! 🙏

ஆதாரம்: Sathyam Shivam Sundaram. The Life of Bhagavan Sri Sathya Sai Baba - Part III
Written by N. Kasturi M.A., B.L.
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

🌻 சர்வ சாதாரணமாக தன்னை வாட்ச் மேன் என்கிறார். மனிதர்கள் என்னவோ முதலாளிகள் போல.. இல்லை.. அது அப்படி இல்லை.. எந்த செயல் செய்தபோதும் எந்தவிதமான பெருமிதமும் .. பெருமையும் மனிதர்கள் அடையக் கூடாது என்பதை எளிமையாய் புரியவைக்கவே தானே அதை வாழ்ந்து காண்பிக்கிறார் பிரபஞ்ச வாட்ச்மேனான இறைவன் சத்ய சாயி .. வார்த்தையை காண்பிப்பது மனிதரின் இயல்பு .. வாழ்ந்து காண்பிப்பதே இறைவனின் இயல்பு. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக