இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அப்போதிருந்த உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் நாட்டிலிருந்த அநேக பல சிறு சமஸ்தானங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒன்றுபட்ட குடியரசாக்க செயலாற்றினார்.
காலத்தின் கட்டாயத்தில் அரசுக்கு தலை வணங்கி அனைத்து மன்னர்கள் மற்றும் நவாபுகள் தங்களது சமாதானத்தை இழந்தாலும் அதற்குரிய நஷ்டஈடு பெற்றனர். இருப்பினும் அவர்கள் தங்களது ராஜபோகத்தையும் சலுகைகளையும் பெறவேண்டும் என விரும்பினர். அதிலும் சிலர் இந்த விஷயம் நடைபெற வேண்டும் எனில் ஆன்மீகத் தலைவர் ஒருவரின் தலையீடு அவசியம் என்று கருதி புட்டபர்த்தி வந்தனர். அனைவரும் தங்களது காரியதரிசிகள் மற்றும் பணியாளர்கள் இவர்களோடு சேர்ந்து மிகப்பெரிய கூடாரங்களில் தங்கியிருந்தனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் பாபாவிடம் தங்களது ராஜ்ஜியாதிகாரத்தை திரும்பப் பெற அனுக்ரஹம் செய்ய வேண்டினார்கள்.
இச்சமயத்தில் நானும் புட்டபர்த்தி சென்றேன். இவ்வாறு அடிக்கடி நான் சென்றபோது, ஒரு நாள் "எங்கள் ராஜ்ஜியத்தை நாங்கள் எப்போது திரும்பப் பெறுவோம்" என்ற அரசர் ஒருவரின் கேள்விக்கு பாபா சிரித்துக் கொண்டே "எல்லாம் வரும்" என்று கூறினார்.
அரசர்கள் அனைவரும் தங்களது ஆவல் பூர்த்தி ஆகும் என்று திட்டவட்டமாக நம்பினர். எனவே தத்தம் இடத்திற்கு திரும்ப பாபாவிடம் அனுமதி வேண்டினர். பாபா அவர்களிடம் "உங்களுக்கெல்லாம் திரும்பிப் போகும் முன்பு மிகச் சிறந்த விருந்து வைக்க வேண்டாமா?? " எனக் கேட்டார். அரசர்களுக்கெல்லாம் பாபா அவர்களுக்கு கொடுத்த இத்தகைய கௌரவம் மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. பாபாவின் இத்தகைய உபசாரத்தின் மூலம் அவரது தெய்வீக ஆசிகளும்
உத்திரவாதமும் கிடைக்கப் பெற்றதாக தீர்மானித்து மகிழ்ச்சியுடன் அங்கே தங்க சம்மதித்தனர்.
பிரம்மாண்டமான விருந்து ஏற்பாடு செய்யப் பட்டு மைசூரிலிருந்து பலசரக்குகளும், சமையல் செய்பவர்களும் வரவழைக்கப்பட்டனர். அரசர்கள் தங்கியிருந்த கூடாரம் சாப்பாட்டு அறை ஆனது. வந்திருந்த 16 அரசர்களுக்கும் 16 விசேஷமான சாப்பாட்டு மேசைகளும் அதன் மீது சிறப்பான உணவுக் கலன்களும் வைக்கப்பட்டிருந்தன. அடுத்தபடியாக கீழ் வரிசையில் அவர்களது காரியதரிசிகள் உணவு உண்ண வாழையிலை போடப்பட்டிருந்தது.
விருந்து தொடங்கும் சமயத்தில், பாபா திடீரென்று அரசர்களுக்காக போடப்பட்டிருந்த சாப்பாட்டு மேசையில் இருந்த அத்தனை உணவுகளையும் அவர்களுக்கு பரிமாறுவதற்க்குப் பதிலாக அவற்றை அரசர்களை விட்டே பரிமாறச் சொல்லி உத்தரவிட்டார். நம்மைப் போன்ற சாதாரண மக்கள் அரசர்களுக்கான மேசையில் அமர்த்தப் பட்டதோடு தற்போதைய பிரசாந்தி நிலையம் மந்திர் அடிக்கல் நட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அரசர்களின் காரியதரிசிகளுக்காக போடப்பட்டிருந்த வாழையிலை முன்பு உணவருந்த அமர்த்தப் பட்டனர்!!
ஜனநாயகம் என்பது முடியாட்சிக்கு மாற்றாக வந்தது...
ஆதாரம்: Nectarine Leelas of Bhagawan Sri Sathya Sai Baba, By R. Balapattabi
மொழிமாற்றம்: R. வரலட்சுமி, குரோம்பேட்டை, சென்னை.
முடியாட்சி வேண்டுமானால் முடிந்து போய் மக்களாட்சி ஆரம்பித்திருக்கலாம். ஆனால் முடிவே இல்லாத ஒரே ஆட்சி பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயியின் அருளாட்சி மட்டுமே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக