ஸ்வாமி தனது பக்தர்களுடன் 1957 ஜுலை பிற்பகுதியில் ரிஷிகேஷ் சென்றிருந்த சமயம்... ஸ்வாமி சிவானந்தா ஆசிரமத்திற்கு திரும்பிக் கொண்டிக்கும் வழியில் யாத்ரீக குழுவுடன் வசிஷ்ட குகைக்கு சென்றனர். பிறகு ஸ்வாமி திடீரென இடம் பெயர்ந்தார். அத்தகைய நிகழ்வுகளின் போது அவரது சூக்ஷ்ம சரீரம் வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டிருக்கும்; ஆகவே சுய உருவம் கட்டை போல் விழுந்து விடும். பக்தர்கள், ஸ்வாமியின் உள்ளங்கை அசைவதைக் கண்டு யாரையோ காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்று யூகித்தனர். எழுந்த பிறகு ஸ்வாமியிடம் விவரம் கேட்டனர்.
ஸ்வாமி, திரு. சுப்ரமண்யம் என்பவரை அழைத்து ”வசிஷ்ட குகைக்கு வெளியே உள்ள ஆற்றில் என்ன கண்டாய்?” என வினவினார். ஒரு உடல் அடித்துச் செல்வதைக் கண்டதாக பதில் கூறினார். அவர் ஒரு யோகி போல், உட்கார்ந்த நிலையில் இருந்தார், கங்கையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்தச் செல்லப்பட்டார். இதையும் அந்த யோகி உணரவில்லை. தியானத்திலேயே இருந்திருக்கிறார். ஸ்வாச கட்டுப்பாட்டினால் அவர் மூழ்காமலேயே தண்ணீரில் மிதந்து சென்று கொண்டிருந்தார். தனது சுய பிரக்ஞைக்கு வந்த பின்பு தான் அடித்துச் செல்லப்படுவதை உணர்ந்து ’கடவுளே’ என கத்தினார். அப்பொழுது சுவாச கட்டுப்பாட்டை இழந்தார், அவரைக் காப்பாற்றிவிடவே சென்றேன். 3 மைல் தூரம் அவரை அழைத்துச் சென்று ஒரு விவசாயியின் வீட்டு வாசலில், சிவானந்த நகருக்கு அருகே விட்டு விட்டு, ரொட்டியும், சுடு நீரும் கொடுத்து வந்தேன் என்றார்.
ஆதாரம்: Baba Sathya Sai Part I – P 161
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.
🌻 ஒரே இறை எனும் அத்வைதம் உணர்ந்தும் ஒவ்வொரு மகானும் வெவ்வேறு இறை வடிவங்களை வழிபடலாம் ஆனால் இறைவன் சத்ய சாயி எப்போதும் எல்லா மகான்களையும் தன் குழந்தைகளாகவேப் பார்க்கிறார். பரிவு காட்டுகிறார். பராமரிக்கிறார். 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக