தலைப்பு

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

நன்றிக் கடனை தண்ணீரில் சேர்த்த சாயி பக்தை!


இறைவன் ஸ்ரீ சத்ய சாயி எனும் பிரபஞ்சப் பெருங்கங்கையே நம் புற தாகத்தையும்.. அக தாகத்தையும் தீர்க்கிறது. வேறெவருக்கும்.... வேறெதற்கும் அந்த பேராற்றல் இல்லை.. இப்படி அவர் தீர்த்த தாகத்திற்கு நன்றிக் கடனாய் பக்தை அளித்த பொதுநல அன்பளிப்பு இதோ... 

ஸ்ரீ  V விஜயக்ருஷ்ணன்  MFM (1993-94) பிரிவு (batch) மாணவர் – ஸ்ரீ சத்யசாயி இன்ஸ்டிட்யூட்டில் மேல் நிலை கல்வி நிலையத்தில் படித்தவர்- இச்சம்வத்தை விவரிக்கிறார். இந்நிகழ்வு இவருக்குத் தெரிந்து நடந்தது.... 

ஒரு முறை சென்னையில் தமிழ்நாடு- State president (சத்ய சாயி ஆர்கனிஸேஷன் ) உடன் இருந்தார். அப்பொழுது ஒரு வயதான பெண்மணி கம்பு ஊன்றியவாறு நடந்து வந்தார். அங்கு கடந்து சென்று கொண்டிருந்த ஒரு  பக்தரிடம், தான் நிதியுதவி வழங்குவதானால் எங்கே சென்று கொடுக்க வேண்டும் என வினவினார். அவர் கையில் ஒரு பை வைத்திருந்தார். விஜய் அமர்ந்திருந்த அலுவலகத்திற்கு அவரை வழிகாட்டி அனுப்பினர். உள்ளே வந்து தன் பையில் இருந்து பணத்தை எடுத்து  மேஜை மேல் பரப்பினார். அந்த பணத்தை சாயி பாபாவிடம் கொடுத்து விடுமாறும், ஏனெனில் அவர் தான் தங்களுக்கு தண்ணீர் கொடுத்து அருளுவதாகவும் கூறினார். தண்ணீர் இல்லாமல் தாங்கள் பல ஆண்டுகள் தவித்து வந்ததாகவும், இப்பொழுது அவர் தான் தண்ணீர் கொடுத்ததாகவும் கூறினார்.


தனது உடைமைகளை எல்லாம் விற்று அந்த பணத்தை கொண்டு வந்துள்ளதாகவும், பாபாவிடம் கொடுத்து தண்ணீர் வழங்கும் திட்டப் பணிகளுக்கு ( water supply Project ) உபயோகிக்குமாறும் கூறினார்! ஏதோ செய்தித் தாளில் அதைப் பற்றிப்  படித்தாகவும், அந்த தண்ணீர் அனைவருக்கும் பயன்படுவதால், இந்த தொகையை கொடுக்க வந்ததாகவும் கூறினார்!  பகவானின் அன்பினால் நேர்ந்த அற்புதமே இது! அவருடைய ”எல்லோரையும் அன்பு செய், எல்லோருக்கும் சேவை செய் ”- Love all Serve all என்னும் செய்தி, ஒவ்வொருவரையும் சென்றடைந்து நடைமுறைப் படுத்தவும் வைத்திருக்கிறது!!!.

ஆதாரம்: Fragrance- P – 257.
தமிழாக்கம்:திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 

பஞ்ச பூதங்களால் ஆன மனித உடம்பு பஞ்சபூதங்களைப் படைத்து ஆள்பவரான இறைவன் சத்ய சாயி இடமே இறுதியில் அடைக்கலமாகிறது.
ஆகவே நன்றிக் கடனை வெறும் கண்ணீரில் காட்டாமல் பெரும் தண்ணீரில் காட்டிய இந்த பக்தை போல நம் வாழ்நாள் எல்லாம் இறைவன் சத்ய சாயியின்  காலடியில் விழுந்து நம் சுவாசத்தையே அவருக்காக இயங்குகிற நன்றிக் கடனாக்குவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக