தலைப்பு

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

கிணற்றிலிருந்து இரு பிஞ்சு உயிர்களை அரூபமாக காப்பாற்றிய கடவுள் சாயி!


இறைவன் சத்யசாயியிடம் பக்தி வைப்பது சென்ற ஜென்மத்தில் ஒருவர் செய்த புண்ணியமே.. சத்ய சாயி பக்தராய் இருப்பது முக்தராவதற்கான ஆன்மீக நிலையின் முன்னால் நிற்பதே .. அவரின் பக்தராகிவிட்டால் எந்த ஆபத்து எங்கிருந்து எப்படி வரினும் அதை இருந்த இடத்திலிருந்தே போக்கி.. உயிர்களை காத்து ரட்சிக்கும் சத்ய சாயி அவதாரத்தின் அற்புதம் பதியும் படி பதிவாக இதோ... 

ஒரு முறை ராம சர்மா, தனது மனைவியுடன் பகவானை தரிசிக்க புட்டபர்த்தி வந்தார். தங்களுடன் 5 வயது பெண்ணையும் 3 வயது பையனையும் அழைத்து வந்தனர். பஜனையின் பொழுது சர்மா தம்பதியினர் உள்ளே பாடிக் கொண்டிருந்தனர். குழந்தைகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். பஜனையில் லீடிங் ஸிங்கரான (முதலில்பாடி மற்றவர்களை தொடரச் செய்தல்) ஸாயி திடீரென பாய்ந்து தரையில் விழுந்தார், எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர். அதே நேரம் சில கிராமத்தினர் ”இரண்டு குழந்தைகள் மந்திருக்கு எதிரே உள்ள கிணற்றில் விழுந்து விட்டனர்”  என்று ஓடி வந்து கூறினர்.

சர்மா தம்பதியினர் அதிகமாக அதிர்ச்சி அடைந்தனர், அவர்கள் தங்கள் குழந்தைகள், அங்கு அமைதியாய் விளையாடிக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது காணவில்லை! ”ஸாயிராம்” ”ஸாயிராம்” என கத்திக் கொண்டு எல்லோரும் கிணற்றை நோக்கி ஓடினர். குழந்தைகள் சொட்ட சொட்ட நனைந்து கிணற்றுக்கு வெளியே  நின்று கொண்டிருந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் விழுந்தவர்கள் யாராலோ காப்பாற்றப்பட்டிருக்கின்றனர். பாபா மீண்டும் உள்ளே பாட்டை தொடங்கிவிட்டார். எல்லோரும் உள்ளே சென்று தொடர்ந்து பாடினர். ஆரத்திக்குப் பிறகு தான் அருவமாகச் சென்று குழந்தைகளைக் காப்பாற்றியதைக் கூறினார்.

ஆதாரம்: Nectarine Leelas of Bhagawan Sri Sathya Sai Baba - R. Balapattabi Page 37
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 

🌻 கடவுளை நம்பினோர் கைவிடப்படார் எனும் சத்திய வாக்கிற்கு சாட்சியங்கள் தான் எத்தனை! அந்த கடவுள் கலியுகத்தில் சத்ய சாயியாய் உதித்து நிகழ்த்தும் பேரற்புதங்கள் தாம் எத்தனை! இறைவன் சத்யசாயியிடம் நன்றியாய் இருப்பதென்பது அவரின் பிரபஞ்ச பாதங்களில் சரணாகதி அடைவதே! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக