தலைப்பு

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

சுவாமியின் விநாயகர் சதுர்த்தி அருளுரை!


விநாயகரே அனைவருக்கும் தலைவர், அவருக்கு மேலான தலைவரோ, எஜமானரோ கிடையாது. ஒரு புதிய காரியமோ செயலோ தொடங்குவதற்கு முன், வெற்றிக்காக விநாயகரின் ஆசிகளை வேண்டுவது நமது வழக்கம். எப்போது அவரை வழிபட்டு, அவரது ஆசிகளை வேண்டுகிறீர்களோ, அப்போது உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெரும்.

விநாயகரின் யானை முகம், ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதற்கு முன் ஒன்றுக்கு இரு முறை சிந்திக்கும் யானையின் அறிவுக்கூர்மையை குறிக்கிறது. விநாயகர் ஞானத்தின் திருவடிவம். கணபதி எனும் திருநாமம், அவர்,  உலக அறிவு, ஆன்மீக அறிவு  மற்றும் ஆன்ம  அறிவின்  (விக்ஞான, சுக்ஞான, பிரக்ஞான) முழுமை  என்பதை சுட்டுகிறது. தற்போது மக்கள் கணபதியின் உள்ளுறை அர்த்தத்தை புரிந்து கொள்ளாது, வெறும் சடங்குகளில்    மட்டும் ஈடுபடுகின்றனர். சடங்குகளை செய்யாவிட்டாலும், விநாயகரை வழிபடுவதை விட்டுவிடாதீர்கள்.

-ஸ்ரீ சத்ய சாயிபாபா 
(தெய்வீக அருளுரை, செப் 18, 2004)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக