தலைப்பு

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

வயலின் மேதை சௌடைய்யாவுக்கு வயலின் காற்றாய் மகிமை புரிந்த சத்யசாயி!


மைசூர் டி. சௌடையா (Mysore T. Chowdiah) எனப் பிரபலமாக அறியப்படும் சௌடையா இந்தியா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபலமான கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞராவார். மிகவும் வித்தியாசமான வயலின் வாசிப்பினால் தனித்துவம் பெற்றிருந்தார். இவரே ஏழு தந்திகள் கொண்ட வயிலினை அறிமுகப்படுத்தியவர். அவரைப் போற்றும் வகையில் தேசிய அளவிலான சௌடையா நினைவு விருது வயிலின் வாசிக்கும் இசைக் கலைஞர்களுக்கு வருடா வருடம் (தற்போதும்) வழங்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ சத்யசாயியை இறைவன் என அழைப்பதற்கு இந்நொடி வரை எத்தனையோ நேரலை சான்றுகளும் .. நேரடி அனுபவமும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன... அதில் ஓர் பிரத்யேக அனுபவம்.. இசையின் வடிவமல்லவா நாதமயமான நம் சுவாமி.. அந்த இசையைக் கருவியாக இசைப்பவர்க்கு  இறைவன் சத்யசாயி அளித்த கருணைப் பரிசு இதோ...


 புட்டபர்த்தியில் தசராவின் போது எப்போதுமே கோலாகலமாக இருக்கும்.  அந்த சமயத்தில் வெவ்வேறு இசைக்கலைஞர்கள் பகவானின் முன்னிலையில் வாசித்து சுவாமியின் ஆசியைப் பெறுவார்கள். அப்படி 1960-களில் ஒரு தசராவின் போது பிரபல புகழ் பெற்ற வயலின் மேதை வித்வான் T. செளடய்யா அவர்களின் வயலின் கச்சேரி மாலையில் நடைபெற்றது. நீண்ட நேர நிகழ்ச்சியான அதன் இறுதியில் பாபா, தனது உள்ளங்கையை அசைத்து தங்க மெடல் ஒன்றை அவருக்காக வரவழைத்தார் சௌடய்யா அவர்கள் அதை வாங்க எழுந்த பொழுது, அந்த மெடலை சுவாமி, வித்வானின் கையில் வைத்தார், அதைப் பிடித்தவாறே கூறினார், “நீங்கள் எவ்வளவோ மெடல்கள் வாங்கி இருப்பீர்கள், இதில் என் பெயர் இருக்க வேண்டும் அல்லவா” என்று கூறி, மெடலைப் பிடித்தவண்ணம் அதன் மீது ஊதினார்! ஆஹா என்ன அற்புதம்! “Presented to T Choudaiah by Bhagawan Sri Sathya Sai Baba” என கலை நயம் மிக்க எழுத்துக்களில் மெடலின் மேல் பொறிக்கப்பட்டிருந்தது!.

🌻 இதிலிருந்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ளலாம்.. இறைவன் சத்யசாயிக்கு இவை எல்லாம் சர்வ சாதாரணம்.. ஒரு ஊதலிலேயே பிரபஞ்சத்தை மாற்றி அமைக்க வல்லவர் அவர்.. அவரிடமிருந்து வெளி வரும் சிறு அசைவு கூட இந்த அகிலத்தை இன்றளவும் செதுக்கிக் கொண்டே இருக்கிறது.. அவரே பிரபஞ்ச சிற்பி.. நாம் சிற்பமாவதற்காக அவர் கையில் காத்திருக்கும் கற்கள்.. 

ஆதாரம்: Loving God – P204
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. பின்குறிப்பு: 1967 ஜனவரி 19ம் நாளன்று தமது 73ம் வயதில் சௌடையா காலமானார். தம் இறுதிநாள் வரை உழைத்த சௌடையா, அந்த வயதிலும் ஆறு கச்சேரிகள் செய்ய ஒப்புக் கொண்டிருந்தார் என்பது அவரது திறமைக்கும் அயராத உழைப்பிற்கும் சான்று. அவரது நினைவாக பெங்களூரில், வயலின் வடிவில் நிர்மாணிக்கப்பட்ட 'சௌடையா மெமோரியல் ஹால்' இன்றும் அவர் புகழை இசைத்துக் கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக