தலைப்பு

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

பிரபல இசைக்கலைஞர் 'மாண்டலின்' U.ஸ்ரீனிவாஸ் அவர்களின் சாயி அனுபவங்கள்!


மாண்டலின் இசைக்கருவியில் கர்நாடக இசையை மீட்டி சாதனை படைத்த உலகப் புகழ்பெற்ற மாண்டலின் U. ஸ்ரீனிவாஸ் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்.

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் தனது 9ஆவது வயதில் மேடை ஏறியவர். கர்நாடக இசைக் கலைஞர் யாருமே அதுவரை இசைக்க முயலாத ஒரு மேற்கத்திய இசைக் கருவியைச் சின்னஞ்சிறு வயதிலேயே மேதையைப் போல இசைத்தவர்.

மாண்டலின் என்னும் இந்த மேற்கத்திய இசைக் கருவிக்குத் தவில் வாத்தியத்தைப் பக்க வாத்தியமாகக் கொண்டு கர்நாடக இசை கச்சேரி செய்து, ரசிகர்களை அசத்தியவர். 11 வயதில் தமிழக அரசின் ஆஸ்தான வித்துவான் ஆனவர்.  இசை துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்த இவர் பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா உள்பட பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார். 

சாதாரண கலைஞனாக இருந்த தன்னை உலக அளவில் கொண்டு போய் சேர்த்தது சுவாமியின் அனுகிரகம் தான் என்கிறார். மேலும் தான் சொல்லமுடியாத எத்தனையோ தனிப்பட்ட பிரச்சினைகளை சுவாமி தீர்த்திருக்கிறார்..  அவருக்கு தான் என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று தன்னுடைய ஆத்மார்த்த அனுபவங்களை மனமுருக பகிர்ந்திருக்கிறார் கேட்டு ஆனந்தம் அடையுங்கள். 🙏 





Source: ரேடியோ சாய் 
மொத்தம் இரண்டு பாகங்கள்(RST 94 & 95) 
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: பிப்ரவரி 2012




1 கருத்து: