தலைப்பு

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்த பச்சிளம் குழந்தையின் வடுவை நினைவூட்டி காரோட்ட வைத்த சுவாமி!

சுவாமி ஒருவரை நல்வழிப்படுத்த தனது ஆயுதமாய் அவர் பயன்படுத்துவது பேரன்பையே!! யாரும் அறியாத ஒருவரின் அந்தரங்க விஷயங்களை அவருக்கே நினைவூட்டி தன் பேரிறை ஆற்றலை வெளிப்படுத்தி இதயத்தை பக்தியால் ஒளிப்படுத்துவது இறைவன் சத்யசாயிக்கு மட்டுமே கைவந்த கலை.. அந்தக் கலையால் சுவாமி இயக்கிய இதயத்தின் வாகனமும்...வாகனத்தின் இதயமும் சுவாரஸ்ய நிகழ்வாய் இதோ...!


பாபா, MVL அவர்கள், சக்கம்மா, மற்றும் பால பட்டாபி யாவரும் கரூர் திரும்புகையில், இரவு 7 மணிக்கு ஒரு சிறு கிராமத்தை நெருங்கினர். ஓர் வாய்க்கால் ஓடிக்கொண்டிருந்தது. வண்டியை நிறுத்தி, ஒரு சிறிய பானையில் நீர் கொண்டுவரச் சொல்லி டிரைவரை அனுப்பினார். டிரைவர் நீரில் பானையை வைத்ததும் நீரே வற்றிவிட்டது. மீண்டும் பாலா பட்டாபியை அனுப்பினர். இப்பொழுது நீர் வாய்க்காலில் வந்துவிட்டது! நீர் கொண்டுவர முடிந்தது.


கார் பயணம் தொடர்ந்து சென்றது. மீண்டும் பாபா வண்டியை நிறுத்தினார். சற்று ஓய்வு எடுத்தார். பாபா இதை பயன்படுத்தி டிரைவர் புகைபிடிக்க வண்டிக்கு முன்பாகச் சென்று புகைக்க முற்பட்டான். பாபா அவன் அருகே சென்று "பெயர் என்ன?" எனக் கேட்டார். அலட்சியமாக பதில் கூறிய குமாரசாமி என்ற அவன், மேலும் பாபா கேட்ட கேள்விகளுக்கு அலட்சியமாகவே பதில் கூறினான். பாபா கண்டு கொள்ளாமல், "நீ 4 வயது குழந்தையாக இருக்கும்போது உன் தாயார் இறந்து விட்டார். நீ 2-1/2 வயது குழந்தையாக இருக்கும் பொழுது, உன் தாயார் வடை செய்து கொண்டிருக்கும்போது, நீ தாயாரின் தோளில் இருந்து தவறி எண்ணெய் சட்டியில் விழுந்து, காயம் ஏற்பட்டு இன்னும் உன் வலது தோளில் வடு இருக்கு பார்" என்றார். ஏதோ ஒரு வேகத்தில் சட்டையை கழற்றிய குமாரசாமி ஆச்சரியம் அடைந்தான் அவனது உறவினர்கள் இதை அவனுக்கு கூறியிருந்தனர். சுவாமியிடம் நம்பிக்கை வரத்தொடங்கியது. உடுமலைப்பேட்டை வரை பெட்ரோல் இல்லாமல் வண்டி ஓடியதும் நம்பிக்கை வலுப்பெற்றது.


பாபா அவனை சமாதானப்படுத்தி விபூதி வரவழைத்து கொடுத்தார். அவனது நெற்றியில் இட்டு விட்டார். இன்னும் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தான். பாபா திடீரென அவனது சட்டைப்பையில் இருந்து அவனது டிரைவிங் லைசன்ஸை எடுத்து, அவனது ஃபோட்டோவுக்கு பக்கத்தில் தன் போட்டோவை பதித்தார்! மீண்டும் அதை வெளியே எடுத்து, "நான் இதை கொடுத்த நேரமும் தேதியும் எழுதிவிட்டேன்!" என்று கூறி அப்படியே அவ்விவரங்களை அதில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதேபதிவு செய்துவிட்டார்! நாத்திகனாக இருந்த தன் மீது பாபா பொழிந்த அன்பை உணர்ந்தான் டிரைவர் குமாரசாமி!!!

ஆதாரம்: Nectarine Leelas of Bagavan Sri Sathya Sai Baba P 53 | R. Bala Pattabi


🌻நா வும் நெஞ்சமும் நல்வழியில் இயங்காதிருப்பவரே நாத்திகர். கர்மவினையால் ஒருவர் நாத்திகராய் வாழ்ந்தபோதும் கூட சுவாமியின் தனிப்பெரும் கருணையால் அந்த அந்தகார இருளிலிருந்து ஆயிரம் கரங்களால் சுவாமியே மீட்டெடுக்கிறார். இறை உணர்வற்ற இன்னலிலிருந்து மீட்பதும்... இருண்ட குகையான இதயத்தை இனிய பக்தி ஒளி எனும் ராகமிசைத்து மீட்டுவதும் இறைவன் சத்யசாயியால் மட்டுமே முடிகிற கல்யாண குணம்!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக