தலைப்பு

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றி பலருக்கு தெரியாதவை: (பகுதி 4 - நிறைவு பகுதி)


பகுதி 4 | பகவானின் எல்லா செயல்களுக்கும் அர்த்தம் உண்டு:

பகவான் எப்போதும் தனது அதிகாரத்தை நிலை நாட்டுபவர்.. அதிகாரத்தை
அடையாளம் காண்பதும், ஏற்பதும் மிக கடினம். அதற்கு ஒரு சிறிய உதாரணம். ஒரு மருத்துவமனையில் கை தேர்ந்த திறமையான ஒரு மருத்துவரை  காண்கிறோம். அவருடைய துறையில் அவர் மிகவும் பிரிசித்தி பெற்றவர்.

 ஒர் குறிப்பிட்ட நபருக்கு நாளைய தினம் குறிப்பிட்ட நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என முடிவு எடுக்கிறார். இந்த விவரம் அறிவிப்பு பலகையிலும், சொந்தங்களுக்கும் தெரியப் படுத்தப்படுகிறது. இதில் எந்த
ரகசியமும் இல்லை. இது எல்லோருக்கும் தெரியும், நோயாளி ஆப்பரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லப் படுகிறார். துரதிர்ஷ் ட வசமாக நோயாளி இறந்து விடுகிறோர். இதன் காரணமாக போலீஸ் அந்த மருத்துவரை கைது செய்யாது.. அதே சூழலில், இருவர் சண்டை போட்டு, ஒரு ரேசர் பிளேடு வைத்து அடுத்தவருக்கு சிறிய காயம் ஏற்படுத்தினாலும், போலீஸ் வழக்கு பதிவு செய்து, காயம் ஏற்படுத்துபவரை கைது செய்யும், நமது இரண்டாவது உதாரணத்தில் ஒரு ரேசர் பிளேடு கொண்டு அடுத்தவருக்கு காயம் ஏற்படுத்த அவருக்கு அதிகாரம் இல்லை. முதல் உதாரணத்தில் பொது மக்கள் முன்னிலையில் ஆப்பரேஷன் செய்ய டாக்டருக்கு அதிகாரம் உண்டு.


சில நேரங்களில் இது போன்றவற்வற்றை உதவி அல்லது நல்ல செயல் என்றும்,
மற்றதை ஊறு விளைவிப்பது என்றும் கூறுகிறோம். உதாரணமாக கையில்
காயத்துடன் உள்ள ஒரு சர்க்கரை நோயாளியை எடுத்துக் கொள்வோம். அந்த
காயம் குணமாகவில்லை என்றால், அது 'காங்க்ரீன்' ஆக மாறி உடல் முழுக்க
பரவலாம். நோய் பரவாமல் இருக்க கையை துண்டிக்க வேண்டும் என்று வந்து
பார்க்கும் டாக்டர் கூறலாம். பிறகு அவர் கையை உடலில் இருந்து துண்டிக்கலாம். அது உடலுக்கு தெய்த நன்மை ஆகும்..

மற்றும் ஒரு வழக்கில், வளையல் அணிந்து செல்லும் பெண்ணிடமிருந்து ஒரு
திருடன் அவளின் கையை துண்டித்து வளையல் திருட எண்ணுகிறான்.
திருடனும் டாக்டரும் ஒரே செயலைத்தான் செய்கிறார்கள், திருடன் செய்தது தீங்கு. டாக்டர் செய்தது நன்மை.

ஒரு இளம் குழந்தை தன்னை அறியாமல் ஒரு வீட்டிற்கு தீ வைத்து விடுகிறது.
அந்த குழந்தை பெரிய தீங்கு விளைவித்ததாக கருதி, நாம் அந்த குழந்தைக்கு தண்டனை அளிக்க ஆரம்பிக்கின்றோம். ஆனால் அனுமன் சொர்க்கம் போல் இருந்த மொத்த இலங்கையையும் எரித்து விட்டார். நாம் அவரை தண்டிக்கவில்லை. ஆனால் அனுமனை புனிதமானவாராக நோக்குகின்றோம். முதல் எடுத்துக்காட்டில், நல்லது ஒன்று எரிக்கபட்டது. இரண்டாவது
எடுத்துக்காட்டில் அனுமன் பாவத்தை எரித்தார். பேய்களையும்
ராட்சதர்களையும் காயப் படுத்தினார். ஆனால் அந்த சிறிய பாலகன்
நல்லவர்களை காயப் படுத்தினான்.

பேய் குணங்களை நீக்கவும் அல்லது வளர்க்கவும் நமக்கு முழுமையான
உரிமையும் அதிகாரமும் உள்ளது. முரண்பாடான சூழ்நிலைகளை அடையாளம் கண்டு கொள்ளவும், அவற்றின் சத்தியத்தை உணரவும், நல்லவை எவை என்று அறிவிக்கவும் ஸ்ரீ கிருஷ்ணர் பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி உள்ளார். ஸ்ரீ கிருஷ்ணர் தன்னலம் அற்றவர். மனித சமுதாயம் நலமுடன் இருக்க வேண்டும்
என்பதில் தீராத விருப்பம் கொண்டவர். இந்த சூழலில் அவர் தெய்தது
அனைத்தும் நன்மை. அவர் எந்த தீமையும் எப்பொழுதும் செய்யவில்லை.
அவராகவே பல ராஜ்ஜியங்களை கைப்பற்றினார். ஆனால் எந்த
ராஜ்ஜியத்திற்கும் அவர் அரசன் ஆகவில்லை. அந்த ராஜ்ஜியங்களை பலருக்கு கொடுத்து விட்டார்.

ஸ்ரீ கிருஷ்ணர் எது செய்தாலும் அதற்கு ஒரு உள்ளர்த்தம் உண்டு. அவரின்
ஒவ்வொரு செய்கையும் ஒரு உள் அர்த்தம் போதிக்கும் நோக்குடன் இருக்கும்.ஆதாரம்: Sathya Sai with students

தமிழாக்கம் : Prof. N.P. ஹரிஹரன் (மதுரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக