தலைப்பு

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

உயர்ந்த இலட்சியமே மேலான கடமை!


வாழ்க்கையின் உண்மையான லட்சியம் என்ன என்பதை ஷாஜகான் உணர்ந்த அந்த உன்னத நொடிகளை நமக்கு சுட்டிக் காட்டி உணர்த்துகிறார் மதங்களைக் கடந்த மகா கடவுள் சத்ய சாயி.. 

ஒளரங்கசீப், பேரரசர் ஷாஜகானின் மகன். அவன் அரியணை ஏறும் வாய்ப்பிற்காக காத்திருந்து சோர்ந்ததால் தகப்பனை சிறையிலடைத்து தனக்குத்தானே மகுடம் சூட்டிக் கொண்டான். அவன் அரியாசனத்தில் பத்திரமாய் இருப்பதற்காக அவனுடைய கூட்டாளிகள் ஷாஜகானை கொன்று விட எண்ணினார்கள். இதை அறிந்த ஷாஜகான், மரணம் சிறைவாழ்வை விட உயர்ந்ததென எண்ணி மகிழ்ச்சி கொண்டார். தனது தந்தையின் மகிழ்ச்சியை அறிந்த ஒளரங்கசீப், தனது தந்தை மகிழ்வதை அனுமதிக்க இயலாமல், அவரை சிறையிலேயே சாகும்வரை பூட்டி வைக்க உத்தரவிட்டான். உதவிக்கு ஒரு பயந்தாங்கொள்ளியான வேலையாளையும், ஒரு திருக்குரான் புத்தகத்தையும் மட்டும் கொடுத்தான்.

திருக்குரானை தனது வேலையாளுக்கு படித்துக் காட்டுவதில் ஷாஜகான் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான். ஆனால் வேலையாளிடம் எந்த சலனமும் இல்லாததால் படித்துக் காட்டுவதை கைவிட்டான். “கூட்டாளிகளை கொண்டு இனி நான் என்ன செய்ய? அமைதியே முதல் கூட்டாளி, அன்பின் ஆனந்தம் இரண்டாமவன், மூன்றாவது பாசம், நான்காவது பெருமை, ஐந்தாவது இன்பம். இவையெல்லாம் சேர்ந்து எனது ஆன்மாவை அறியத் தூண்டுகின்றன" என்று தனக்குத்தானே எண்ணினான். இந்த எண்ணத்தால் ஆட்கொண்டவனாய் திருக்குரானில் புதைந்து அதன் தத்துவத்தோடு ஒன்றிப்போனான். இதுதான் மேலான கடமை. உயர்ந்த இலட்சியத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அதை அடைந்து அதுவாகவே ஆக வேண்டும்.

ஆதாரம்: Sathya Sai Speaks, Volume 17

🌻 ஒரு மதப்புத்தகத்தை வெறும் மனனம் செய்து பிறரிடம் சொல்வதால் பெருமை வரலாம்.. அந்தப் பெருமை ஆத்மாவின் நிம்மதியை அறியவிடாது.. ஆகவே அதில் தோய்ந்து அதன் நன்நெறிகளைக் கடைபிடித்து அந்த ஆனந்த அமைதியை அனுபவிக்க வேண்டும். அந்த அனுபவமே நம் முன் வடிவமெடுத்து வந்திருக்கிற இறைவன் சத்யசாயி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக