தலைப்பு

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

இறைவன் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி பலருக்கு தெரியாதவை (பகுதி 2):


சுவாமியின் ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை குறித்து பலருக்கான அடிப்படை சந்தேகங்கள்... சில விஷமிகள் எழுப்பும் சர்ச்சைக் குறிய வினாக்களுக்கான தெளிவான மற்றும் ஆழமான பதிலையும் ஐயம் தீர விளக்குகிறார்.. சுவாமிக்கு 16,000 மனைவியரா? ராசலீலை ?? போன்றவற்றுக்கான விடை இதோ...

🌹ஸ்ரீ கிருஷ்ணரும் கோபியரும்:

ஸ்ரீ கிருஷ்ணர் ராஸ லீலை நடந்த பிருந்தாவனத்தில் விட்டு புறப்படும் போது அவரின் வயது 11 ஆகும். அதன் பின் ஸ்ரீ கிருஷ்ணர் மதுரா மற்றும் துவாரகைக்கு செல்கிறார். இதை பலர் மறந்து விடுகின்றனர். இது பாகவதத்திலும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.


ஆனால் மக்களின் மனதில் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன், சில
கவிஞர்கள் ராஸ லீலையை உடல் ரீதியாக விவரிக்கின்றனர். (விஷய வாஸனை அடிபடையில்) ஸ்ரீ கிருஷ்ணர் 16,000 கோபிகைகளை மணம் முடித்ததாக கூறுகின்றனர். இந்த கோபியர் யார்? அவர்கள் மனித வடிவில் உள்ள இடையர்கள் அல்ல. மனிதனின் சிரஸில் (தலையில்) 1000 இதழ்கள் உடைய தாமரை உள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் 16 கலைகளில் (காலங்களின்) வடிவம். அவர் 'ஸஹஸ்ராரர்'. ஆயிரம் இதழ்கள் கொண்டவர். முதுகு தண்டின் முடிவில் தொடங்கும் குண்டலினி சக்தி (மூலாதாரத்தில்  தொடங்குகிறது) உயர்ந்து, ஸஹஸ்ராரத்தில் உள்ள 16,000 ஆக உள்ளவற்றுடன் (entities) கலக்கின்றன. இதுவே ஸ்ரீ கிருஷ்ணரின் ஆச்சரியத்திற்குறிய முக்கியத்துவம் ஆகும். இதுவே ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீக உடலின் பங்கும் பொருளும் ஆகும். இதன் உள்ளார்ந்த அர்த்தம் புரியாமல், பலர்தவறான, மூர்க்கத்தனமான விளக்கங்கள் தருகின்றனர்.


🌹ஸ்ரீ கிருஷ்ணர் முதன்மை நடிகர் மற்றும் இயக்குனர்:

சாதாரண மனிதர்களால் ஒரே நேரத்தில் பல இடங்களில் காட்சி தர முடியுமா? அவர் வெகு தொலைவில் இருந்தாலும் கோபியர்களின் ஹ்ருதயத்தில் கிருஷ்ணரின் உருவம் தோன்றிக் கொண்டே இருக்கும். ஹ்ருதயத்தை
தூய்மையாக வைத்திருக்க எது வேண்டும்?

தெய்வ உருவம் தூய்மை அற்ற ஹ்ருதயத்தில் தோன்றாது. இறைவனின் சக்திக்கு அளவு கிடையாது. குறுகிய மனம் கொண்டவர்க்கு சக்தி குறைவு. யாருக்கு, எந்த சூழ்நிலையில், எந்த நேரத்தில், எவ்வளவு , எந்த வடிவில் கொடுக்க வேண்டும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும். உதாரணமாக த்ரௌபதியை எடுத்துக் கொள்வோம். பெரிய சபையில் துரியோதனன் த்ரௌபதியை அவமானப் படுத்தினான். யாருக்கும் தெரியாமல், யார் கண்ணிற்கும் தெரியாமல் எண்ணிலடங்கா புடவைகள் த்ரௌபதிக்கு ஸ்ரீ  கிருஷ்ணர் அருளினார். இதை சாதாரண மனிதர்கள் எப்படி பார்ப்பார்கள்? 
அவர்கள் கேட்டார்கள், "த்ரௌபதி அவமானப்படும் போது, ஸ்ரீ கிருஷ்ணர்
எதற்காக பொறுத்துக் கொண்டார்? அந்த  நொடியே துரியோதனனை சாம்பல் ஆக்கி இருக்க வேண்டாமா? அவனுடைய வாழ்க்கையை உடனே முடித்து இருக்க வேண்டாமா? பக்தர்கள் துன்பத்தில் உள்ள போது, இறைவன்  அதை சும்மா பார்த்துக்கொண்டு இருக்கலாமா?

அறிவில்லாதவர்கள் இது போன்று நடந்து கொள்ளலாம். ஆனால் இறைவன் சமாதானம், அன்பு, சத்தியம் இவற்றின் வடிவம். அவர் 'காரணம், கார்யம், கர்த்தவ்யம்' (காரணம், தீர்வு, செய்ய வேண்டிய பணி) இவற்றை கணக்கில் கொண்டு செயல்படுவார். இந்த பிரபஞ்ச நாடகத்தில் (cosmic drama) இறைவனும் ஒரு நடிகர். அவருடைய வேடத்திற்கு தக்கவாறு அவருடைய செயல்கள் இருக்க வேண்டும். அவரால் வேறு எப்படியும் செயலாற்ற முடியாது.

உதாரணமாக த்ரௌபதியை அவமானப் படுத்தியவுடன் துரியோதனனை கொன்று இருந்தால், ஸ்ரீ கிருஷ்ணர் தனக்கு நாடகத்தில் அளிக்கப் பட்ட பங்கை சரியாக செய்யாததாகிவிடும். துரியோதனின் முடிவு பீமரின் கரங்களால், தனது கையால் அல்ல என்பது அவருக்கு தெரியும். பீமன் செய்ய வேண்டியதை தான் செய்வது தர்மத்திற்கு புறம்பானது. பீமனால் மட்டுமே துரியோதனனின் மரணம் சம்பவிக்கும். இது படைப்பின் நியதி. ஸ்ரீ கிருஷ்ணர் அதற்காக காத்திருந்தார்.

ஆதாரம்: Sathya Sai with students

தமிழாக்கம் : Prof. N.P. ஹரிஹரன் (மதுரை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக