1967ஆம் ஆண்டு.. அதாவது கந்தன் கருணை திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சமயம்.
பகவான் பாபாவின் சென்னை விஜயத்தின் போது ஆபட்ஸ்பரி எனும் இடத்திற்கு விஜயம் செய்திருந்தார். திருமதி கே.பி. சுந்தராம்பாள் மற்றும் மிருதங்க வித்வானான திரு. பிச்சாண்டி ஐயர் ஆகிய இருவரும் பகவானை தரிசிப்பதற்கு அங்கே சென்றிருந்தனர். அங்கு இருந்த சிலா், சாயி பகவானை தரிசிப்பதற்கு இப்போது இயலாது பிறகு வந்து பாருங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தனர். சில மணி நேரம் அவா்கள் வெளியே காத்து கொண்டிருந்துவிட்டு பின்னர் மீண்டும் அங்கே வந்தனா். முன்பு அங்கிருந்தவா்களே மறுபடியும் "தயவு செய்து சாயி பகவானை கொஞ்ச நேரம் ஓய்வு எடுக்க விடுங்கள்" எனக்கூறி மேலும் அவர்களை மறுபடியும் வெளியே அனுப்ப முயற்சித்தனர். ஆனால் அந்த நேரம் பார்த்து சாயி பகவானே அவா்களை நோக்கி வந்தார்.

பகவான் பாபாவை கண்டவுடன் திருமதி கே. பி. சுந்தராம்பாள் அவா்கள் "பாடல்கள் மூலமாக நான் இத்தனை வருடங்களாக தேடிய முருகப்பெருமானை இப்போது கண்டுபிடித்துவிட்டேன்"
எனக் கூறினார். பகவான் பாபாவும் அவர்களை பாடுமாறு கேட்க.. அவர்களும் பாட.. சுவாமி ஆனந்தமாக கேட்டு மகிழ்ந்தார்.
எனக் கூறினார். பகவான் பாபாவும் அவர்களை பாடுமாறு கேட்க.. அவர்களும் பாட.. சுவாமி ஆனந்தமாக கேட்டு மகிழ்ந்தார்.
அருகிலிருந்த திரு பிச்சாண்டி ஐயர் கண் எதிரே சுவாமி தனது கரங்களை அங்குமிங்குமாக அசைத்தாா். ஐயரால் எதனையும் புரிந்து கொள்ள இயலவில்லை. பகவான் அவர்கள் இருவருக்கும் விபூதி சிருஷ்டித்து கொடுத்தார். நடுத்தர வயதினருக்கு உரித்தான கண்பார்வை கோளாறு ஐயருக்கும் இருந்திருக்கலாம் என்றே அங்கே நடந்த சூழ்நிலையை அனுமானிக்க முடிகிறது! மூக்கு கண்ணாடி அணிந்தும் கண்களை சிமிட்டிக் கொண்டு பகவானை கஷ்டப்பட்டு பார்த்துக் கொண்டிருந்தார் ஐயர். உடனே பகவான் அவருடைய திருக்கரங்களால் ஐயரின் மூக்குக் கண்ணாடியை சடாரென எடுக்கிறார்! பிறகு என்ன?! பகவான் கண்ணாடியை வேகமாய் எடுத்த பிறகு ஐயருக்கு கண்கள் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. அவரின் மகனை விட கண்பார்வை தெளிவாக தெரிந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பின்குறிப்பு : திரு பிச்சாண்டி ஐயர் அவர்கள் மிகப்பெரிய மிருதங்க வித்துவான் ஆவார். இவர் திருவிதாங்கூர் அரண்மனையில் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர்.
ஆதாரம்: SRI SATHYA SAI DIGVIJAYAM - PART 1 (1926 – 1985)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக