தலைப்பு

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

ரகுமாயிக்கு மங்கள சூத்திரம் சிருஷ்டித்த சாயி பாண்டுரங்கன்!


துவாபர யுக கண்ணனே அவதாரம் எடுத்து கலியில் சத்யசாயியாய் புவியில் இறங்கியது... மூலஸ்தான ரகுமாயிக்கு உற்சவ சத்ய சாயி கண்ணன் அளித்த அருள் மயமான அன்பளிப்பு... ஆம்.. அதற்கு அற்புத சான்றாக தன் பாதி இணைக்கு ஜோதி சாயி நிகழ்த்திய அற்புதம் இதோ..  

ரகுமாயிக்கு மங்கள  சூத்திரம் பண்டரிபுரத்தில் நடைபெற்ற அற்புதத்தை ஸ்ரீமதி. ஜெயக்ஷ்மி அவர்கள் விவரிக்கிறார்கள். பண்டரிபுரம் செல்லும் குழுவில் தன்னுடன் ஜெயலக்ஷ்மி, விட்டல்ராவ் ஆகியோரையும் அழைத்துச் சென்றார் ஸ்வாமி!! பம்பாயில் இருந்து மந்திரி ஸாவந்த் அவர்கள் பாபா குழுவினருக்கு விமரிசையான ஏற்பாடு செய்திருந்தார் – முழு பயணத்திற்குமாக!ஜூன் 13, 1965 அன்று பண்டரிபுரத்தில், காலை விருந்தினர் மாளிகை வந்த பாபா, பாண்டுரங்கனின் பாதம், (சிலையின் பாதம்) பக்தர்கள் கைவைத்து தொழுது தொழுது சிதிலமடைந்துள்ளது என விவரித்தார். மந்திரி ஸாவந்த் அவர்களால் ஆலய மரியாதையோடு பாபா கர்ப்பகிரஹத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.


சாயி பகவானுடன் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் ஸ்ரீ பி.கே.ஸாவந்த் மற்றும் ஸ்ரீ ஒய்.பி. சவான், இந்தியா முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர். 

பாபா தன்னோடு வந்த யாத்ரீகர்களை ருகுமாயி சன்னிதிக்குச் சென்று பஜன் பாடுமாறு கூறினார். பாபா பிறகு அரசு மரியாதையோடு வந்து சேர்ந்தவர், ஒரு பக்தரிடம் சொல்லி, அந்த சன்னதியில் இருந்த அர்ச்சகரை  ”ஏன் ரகுமாயி தாயார் எந்த அலங்காரமும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்” என்று வினவச் சொன்னார். மேலும் ருகுமாயி  விக்ரஹம் மங்கல சூத்திரம் கூட அணிவிக்காமல் விடப்பட்டிருந்தது என்பதையும் பாபா கவனித்தார். பண்டிகை நாட்களில் மட்டுமே சிலை அலங்கரிக்கப்படும் என்று தெரிவித்தார் அந்த அர்ச்சகர்! ஒரு சாதாரண நூலை மஞ்சள் பொடியில் தோய்த்த மங்கல சூத்ரமாக கருதி அணிவிக்கப்பட்டிருந்தது.
   
பாபா கொஞ்சம் தீவிர யோசனையில் இருந்ததால், சூழ்நிலை கொஞ்சம் பதட்டமாயிற்று. ரகுமாயி சரியாக அலங்கரிக்கப்படாமல் மங்கி இருப்பதால் கோவிலின் பரந்த வெளியும், பாண்டுரங்கனும் மகிழ்ச்சியற்று இருப்பதாக தெரிந்ததும், பாபாவும் பிரபஞ்ச நிலையோடு தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, தொடர்ந்து பாடும்படி செய்கை செய்தார். பஜன் உச்ச கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது திடீரென  வலது உள்ளங்கையை அசைத்து, தங்கத்தில் கோர்க்கப்பட்ட கருக மணிமாலையை வரவழைத்து அற்புதம் நிகழ்த்தினார். பாண்டுரங்கனாகிய ஸாயியே தன் கையால் ருகுமாயி தாயாருக்கு அந்த மங்கல சூத்திரமும் கருகமணியும் கோர்க்கப்பட்ட தங்க நகையை அணிவித்தார்.

அர்ச்சகர் வாயடைத்து நின்றுவிட்டார், ஒவ்வொருவரும் ஆச்சரியத்தில் வேறு நிலைக்கு மாறியிருந்த பொழுது பாபா வழக்கமான தனது அன்பு நிலையில் இருந்தார். குறிப்பிடத்தக்க இந்த நிகழ்வைக் கண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டம் செய்தவர்கள் ஆவர்!

ஆதாரம்: SAI SPARSHAN, P145
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 

🌻 பண்டரி புரமே பர்த்திபுரி.. பர்த்திபுரியே பண்டரிபுரம் எனும் மகிமையில் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி விட்டலன் நிகழ்த்திய ஒப்பற்ற மகிமையிது.. அவன் நாமம் பாடப்பாட நாமும் ஆகிடலாம் அவனின் பக்த அடியார்களாக.. சாயிராமா என மனமுருகிப் பாட துக்கா ராமர்களாக ஜொலிப்பர் சத்ய சாயி பக்தர்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக