தலைப்பு

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

மூன்றாம் தலைமுறை பக்தருக்கு பிறந்து நான்கரை வருடங்களுக்கு பின் பெயர் வைத்த சாயி!


தாத்தா நாகராஜன் சத்ய சாயி மருத்துவமனை பணி மற்றும் சாயி நிறுவனப் பணிகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்பவர். தந்தை ரமணி அவர்களும் தாத்தா வழியில் சாயி சேவைகளில் பங்கு கொள்பவர். தனக்கு முன் பிறந்த இரண்டு மூத்த சகோதரிகளுக்கு பகவான்தான் பெயர் சூட்டுகிறார், சுமனா, சுஜனா என்று. சிறிது காலங்களுக்குப் பின் பிறந்த தனக்கு பெயர் வைப்பதில் பகவான் காலம் தாழ்த்துகிறார்..வார கணக்கில், மாத கணக்கில் அல்ல..வருடக் கணக்கில்.

ஆம், நான்கரை வருடங்கள் ஆகிவிட்டது. பல முறை பகவானை அணுகியும் பலனில்லை. நான்கரை வருடம் நிறைவுற்ற ஓர் நாள் பகவான் தாத்தா திரு. நகராஜனிடம் கேட்கிறார், "உன் பேரன் பெயர் என்ன?" என்று. அவர் பதில் கூறுகிறார், "ஸ்வாமி பெயர் சூட்ட வேண்டும் என்று காத்திருக்கிறோம், இன்னமும் பெயர் வைக்கவில்லை" என்று!

"இன்னமுமா பெயர் வைக்கவில்லை" என்று கேட்ட பகவான் "சரி, 'சாயி ஸ்ரவணம்' என பெயர் வைக்கிறேன்" என ஆசீர்வதிக்கிறார். திரு. நாகராஜன் அவர்கள் 'சரவணனா' ஸ்வாமி என வினவ, இல்லை 'ஸ்ரவணம்' என உறுதி செய்கிறார் ஸ்வாமி.

இப்படி நான்கரை வருடம் கழித்து பெயர் வைக்கப்பட்ட குழந்தை வேறு யாருமல்ல, தமிழ்நாடு முன்னாள் மாநிலத் தலைவரும், இந்நாள் அகில இந்திய துணைத் தலைவருமான திரு. ரமணி அவர்களின் புதல்வன் திரு. சாயி ஸ்ரவணம் ஆவார்.

ஆதாரம்: ஆங்கில சனாதன சாரதி ஜூலை 2020


திரு. சாயி ஸ்ரவணத்தின் மகனும், சாயி குழந்தையாக, நான்காம் தலைமுறை பக்தனாக விளங்குகிறான் என்பது குறிப்பிடத்தக்கது!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக