தலைப்பு

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

இறைவன் கிருஷ்ணரை பற்றி பலருக்கு தெரியாதவை (பகுதி 3):


ஸ்ரீ கிருஷ்ணர் போர் விரும்பியா அல்லது தெய்வீக மருத்துவரா? 

(பகுதி 3): 

அதர்ம தீ பரவி விட்டது. இந்த தீயை நீக்க ஒரே வழி பலத்த மழை. மழைத்
துளிகளின் சாரல் அல்ல. இந்த மழை கணைகளின் மழையாக (அம்புகளின்
மழையாக) இருக்க வேண்டும். உலகனைத்தும் பரவும் அதர்ம தீயை நிறுத்த போரும் கணைகளின் மழையும் அவசியம் என்பதை ஸ்ரீ கிருஷ்ணர் நம்பினார். இன்றைய இளைய வயதினருக்கு ஒரு சந்தேகம் எழலாம். கிருஷ்ணர் உலக சமாதானத்தை வேண்டினார். ஆனால் 42 லக்ஷ மக்கள் இறந்த ஒரு பெரிய போரை ஆதரித்தார். இதற்கு பெயர் ஹிம்சையா அஹிம்சையா? எனினும் ஸ்ரீ கிருஷ்ணர் இதற்கு தகுந்த விடை அளித்துள்ளார்.

அர்ஜுனனிடம் கிருஷ்ணர் கூறுகிறார்: அர்ஜுனா, உடலில் புற்று நோயை
ஏற்படுத்தும் கிருமிகள் உள்ளன. அவை மொத்த மனித உடலிலும் வலியை
ஏற்படுத்துகிறது. ஆனால் புற்று நோய் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே உள்ளது. காயத்தை சுற்றி பல நோய் நுண்மங்கள் (germs) உள்ளன. புற்று நோயை வளர விடாமல் தடுக்க மருத்துவர் ஒரு அறுவை சிகிச்சை செய்கிறார். அவர் லக்ஷக் கணக்கான நோய் நுண்மங்களயும் கொல்லப் போகிறார் என்பதில் அவருக்கு சிறிதளவும் சந்தேகம் இல்லை. மருத்துவர் எண்ணற்ற நுண்மங்களை கொல்ல போகிறேன் என்று நினைத்து, அறுவை சிகிச்சையை நிறுத்த போவதில்லை. அவர் அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால், நுண்மங்கள் காப்பாற்றப்படும். ஆனால் நோயாளி அவதிப்படுவார். மருத்துவர் உறுதியாக நோயை ஏற்படுத்தும் நுண்மங்களை கொன்று, நோயாளியை காப்பாற்றுவார்.


கிருஷ்ணர் மேலும் கூறுகிறார், இந்த உடலான உலகத்தில், நிலமை
இதுவே. அரசாட்சி செய்யும் கௌரவர்கள் வடிவில் புற்று நோய் வந்துள்ளது.
இதனால் மொத்த உலகமும் மன வருத்தத்தில் உள்ளது. உலகில் அராஜகம் நிலவுகிறது. தர்மம் குறைந்து உள்ளது. அமைதியாக வாழ்ந்து வந்த குடும்பங்கள் உடைந்து விட்டன. எனவே நான் (ஸ்ரீ கிருஷ்ணர்) டாக்டர் ஆகவும், அர்ஜுனன் கம்பெளண்டராகவும் இருபோம். மஹா பாரத போரில் புற்று நோய்க்கான அறுவை சிகிச்சையை நான் செய்வேன். இந்த அறுவை சிகிச்சை போரில், 4,000,000 நோய் விளைவிக்கும் நுண்மங்கள் உலக நன்மைக்காக் கொல்லப்படும்.
இது உலகிற்கு நன்மையா, தீமையா?..
(தொடரும்..)

ஆதாரம்:Sathya Sai with students


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக