எவ்வாறு ஒரு சாயி பக்தரை பாபா எந்த விதத்தில் எல்லாம் வழிகாட்டுகிறார் - அதுவும் பிரத்யட்சமாக முன் தோன்றி எவ்வாறு முன்னேற்றம் அளிக்கிறார் - ஆச்சர்யப் பதிவுகள் சுவாரஸ்யமாக இதோ...!
ஆர்.டி. அவ்லே அந்த அனுபவத்தை ஒரு ஆர்டிக்கலில் பதிவும் செய்திருக்கிறார்!
அப்படி 50 தடவை பாபா நேரில் தோன்றியதில் ஒருமுறை - நள்ளிரவு அந்தப் பெண்மணி வீட்டில் தோன்றி - தூங்கிக் கொண்டிருந்த அவரை தோளில் தட்டி எழுப்பி - பக்கத்தில் இருக்கும் சாயி சென்டரில் தலைமை ஏற்கும்படிச் சொல்கிறார்! ஆனால் அந்தப் பெண்மணியோ அந்த உத்தரவை மறுக்கிறார்! ஏனெனில் அந்த சென்டரில் இருக்கும் பெரும்பாலான சாயி பக்தர்கள் இந்தியர்கள் - அதில் இந்தியர் அல்லாத அமெரிக்கர் தலைமைக்கு வருவது சரிவராது என்கிறார்! பாபா விடவில்லை - மறுநாளும் அவ்வாறே நேரில் தோன்றி அதையே சொல்கிறார் - அந்தப் பெண்மணியும் மறுக்கிறார்! மூன்றாவது நாளும் அவ்வாறே நேரில் தோன்றி அதையே சொல்ல - சரி என்று சம்மதிக்கிறார்! சம்மதித்து இப்போது இருக்கும் சாயி வட்டத்து தலைமை நபரிடம் நடந்ததைத் தெரிவிக்க - அவர் ஆச்சர்யப்படுகிறார்! ஏனெனில் அதே மூன்றும் நாளும் அவரின் இருப்பிடத்தில் தோன்றி கோனி ஷாவே தலைமை ஏற்க வேண்டும் என்று பேசி இருப்பதை நினைத்துப் பார்க்க அவருக்குப் புல்லரிக்கிறது!
இவர்களாவது சாயி பக்தர்கள்!
சாயிபாபா என்ற பெயரே கேள்விப்படாத ஜேம்ஸ் சின்க்லயர் - அவர் அமெரிக்காவில் ஒரு வியாபாரி! அவர் வீட்டுக்கும் நேரில் தோன்றி இருக்கிறார்! பூட்டிய வீட்டிற்குள் அந்தக் காவி உடையில் நடந்து போகிறவர் யார் என்று குழம்புகிறார்! பிறகு புத்தகக் கடையில் எதேர்ச்சையாக பாபா பற்றிய புத்தகம் காண - வந்தவர் ஸ்ரீ சத்ய சாயிபாபா - புட்டபர்த்தி என்பதை அறிந்து கொள்கிறார்!
பிறகு ஒருமுறை புட்டபர்த்திக்கு செல்கிற போது - தரிசன வரிசையில் நேராக இவர் முன் வந்த பாபா எடுத்த எடுப்பில்
"நான் உன் வீட்டுக்கு இருமுறை வந்திருக்கிறேன்!" என்றாரே பார்க்கலாம்! அப்போது அந்த ஆங்கிலேயரின் சின்னஞ்சிறு கண்களில் சித்ராவதியே பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது!
(Source : Beyond Borders | page : 26, 27 | author : k.karthikeyan | publication year : 2015)
எல்லா தேசமும் சாயி வீடே! எல்லா இடமும் பிரசாந்தி நிலையமே! எல்லா நகரமும் சாயி அறையே! எல்லா ஜீவராசியும் சாயி குலமே! எல்லோரும் சாயி குடும்பமே - ஆகவே தான் பாபா சகஜமாய் தனது உயரிய ஆன்மிகத்தை பேரன்பே இறைவன் என மிக எளிமையாக பரப்பிக் கொண்டு வருகிறார்! பாபா தோன்றி மறைவது ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை - ஏனெனில் வானத்து மின்னலை தோன்றி மறைய வைக்கும் அந்த இயற்கைப் பேராற்றலின் உருவப் பெயரே பாபா!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக