தலைப்பு

சனி, 7 பிப்ரவரி, 2026

🚂 பிரசாந்தி நிலையம்(புட்டபர்த்தி) டூ பெங்களூரு வரை புதிய ரயில் பாதை!

பிரசாந்தி நிலையம் டூ பெங்களூரு வரை புதிய ரயில் பாதை! (சிக்கபள்ளாப்பூர் வழியாக)

பட்ஜெட்: ரூ. 713 கோடி

நீளம்: 103 கி.மீ

பிரசாந்தி நிலையம் (புட்டபர்த்தி) – சிக்கபள்ளாப்பூர் ரயில் பாதை மூலம் பெங்களூருவுடன் இணைக்கப்படுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த புதிய ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு மற்றும் இந்திய ரயில்வே வாரியம் அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளன. 

புதிய ரயில் நிலையங்கள்:

கொட்டபள்ளி, பெத்தபள்ளி, கோரந்த்லா, சிலமத்தூர், பாகேபள்ளி, வரலகொண்டா, டிப்புரு ஆகிய இடங்களில் ரயில் நிறுத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அதன் பிறகு ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம் (புட்டபர்த்தி) அடையும்.


இந்த திட்டம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதோடு, ஆன்மீகப் பயணத்திற்கும் புதிய வாயிலாக அமையும். புதிய ரயில் பாதையின் மூலம் புட்டபர்த்திக்கு மேலும் பல ரயில்கள் இயக்கப்படும். இதனால் பக்தர்கள் இனி புட்டபர்த்திக்கு எளிதாக வந்து தரிசனம் செய்ய முடியும். இது அவர்களுக்கு ஒரு பெரிய வசதியாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக