எவ்வாறு இரு அவதாரங்களே உலகில் எல்லாவற்றையும் விட சிறந்தவர்கள்? இரு அவதாரங்களே விளக்குகின்றன சுவாரஸ்யமாக இதோ...!
அது துவாபர யுகம்! பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஒட்டுமொத்த பிரபஞ்ச பேருணர்வு ரகசியத்தையுமே கீதையில் சாரமாய் பொழிகிறார்! ஞானமாய் மொழிகிறார்!
மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜீமாம் நமஸ்குரு ।
மாமே வை ஷ்யஸி யுக்த்வை வமாத்மானம் மத்பராயண꞉ ॥ 65 ॥
மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சிதஸ்தி தநஞ்ஜய ।
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ ॥ 7 ॥
"ஏ அர்ஜுனா! ரகசியங்களில் எல்லாம் சிறந்த ரகசியத்தை நான் உனக்கு இப்போது வெளிப்படுத்தப் போகிறேன்! ஏனெனில் நீயே எனக்கு விருப்பமானவன்! இதை நான் உன் நன்மை கருதியே வெளிப்படுத்த இருக்கிறேன்! அது யாதெனில்...
உன் மனதை நீ என்னிடம் மட்டுமே செலுத்து! என்னை வழிபடு! ஏனெனில் நீ எனக்கு விருப்பமானவன்! நான் இதை உனக்கு வலியுறுத்தியே சொல்கிறேன்! இதுவே சத்தியம்! என்னை விட எதுவுமே இவ்வுலகில் இல்லை! எப்படி ஒரு நூலானது முத்து மணிகளை இணைத்திருக்கிறதோ எப்படி நானே இந்த பூமியை இணைத்திருக்கிறேன்!" என்று பேரிறைவன் ஸ்ரீ கிருஷ்ணர் அந்தப் பிரபஞ்ச ஆன்மீக ரகசியம் பகிர்கிறார்!
(ஆதாரம் : ஸ்ரீ மத் பகவத் கீதை - 18:65, 7:7)
அது போலவே ஸ்ரீ கிருஷ்ணர் தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் தனது இந்த கீதை கூற்றை அனுதினமும் அவரது வாழ்வாக்குகிறார்!
ஒருமுறை காசி - அயோத்தி - லக்நவ் போன்ற ஷேத்திரங்களுக்கு பாபா விஜயம் புரிகிறார்! சேவைத் திலகம் கஸ்தூரியும் இணைந்து கொள்கிறார்! கஸ்தூரிக்கு மிக நன்றாகத் தெரியும் காசியில் தான் பகவான் ஸ்ரீ இராம கிருஷ்ண பரமஹம்சர் தியான சமாதியில் ஆழ்ந்தார் என்பது... அவர் சாயி பக்தராய் ஆவதற்கு முன்பு அவர் பரமஹம்சரின் பக்தர்! காசியில் அங்கே பரமஹம்சர் தங்கி இருந்த போது சிவபெருமான் அங்குள்ள சடலங்களின் காதுகளில் மந்திரம் ஓதுவதை அவர் தனது கண்களால் காண்கிறார்!
தனக்கு ஆன்மீக முன்னேற்றம் ஏற்பட பாபாவும் அவ்வாறே தனது காதுகளில் மந்திரம் சேர்ப்பிக்க வேண்டும் என்று கஸ்தூரி விரும்புகிறார்! பாபாவும் ஆமோதிக்கிறார்!
பாபாவோ படு பிஸி! பலவிதமான சேவைப் பணிகள் பாபாவுக்கு அங்கே! பிறகு கோவில்கள் , பல்கலைக்கழகம் போன்றவற்றை தரிசித்துவிட்டு ... அனைவரும் ஒரு பக்தர் வீட்டில் மதிய உணவுக்கு ஒன்று சேர்கிறார்கள்! அப்போது விரதம் இருந்த சேவைத் திலகத்தை பாபா சாப்பிட அழைக்கிறார்! "சாப்பிடு!" என்று பாபா மிகவும் அழுத்திச் சொல்ல கஸ்தூரியும் அதை மதித்து உடனே சாப்பிட அமர்ந்துவிடுகிறார்! சில வாரங்களில் அனைவரும் புட்டபர்த்தி வந்துவிடுகிறார்கள்!
பாபாவோ கஸ்தூரியை பேச அழைக்கிறார்! அந்த ஆன்மீகப் பயண அனுபவத்தை பாபா பேசச் சொல்கையில்... அவரும் பேசி முடித்துவிட.. பாபாவும் மைக் முன் வந்து
"கஸ்தூரி ஒரு முக்கியமான விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள மறந்துவிட்டார்! அது என்னவெனில்... தனக்கொரு மந்திரம் வேண்டும் என்று விரதம் இருந்தார், அழுதார்! என்னால் அவரின் அறியாமையை எண்ணி சிரிக்க முடியாமல் இருக்க முடியவில்லை! எல்லா மந்திரங்களின் ஒன்றிணைந்த இறைவனே அவர் அருகே இதோ இருக்கிற போது.. அவர் மந்திரம் கேட்கிறார்! இது எப்படி இருக்கிறது!!!"
என்று பாபா மொழிய.. சேவைத் திலகமோ உண்மை உணர... அது முதல் ஞானத் திலகமாய் சேவைத் திலகம் பரிணமிக்கிறது!
அது போல் ஒருமுறை சென்னையில் இருந்து ஒரு செல்வந்த பக்தர்கள் மிக விலை உயர்ந்த ஜாக்வார் கார் ஒன்றை பாபாவுக்கு பரிசளிக்க வருகிறார்கள்!
"பாபா! இந்தியாவிலேயே மிகச் சிறந்த கார் இது ஒன்று தான்!" என்கிறார் அந்த பக்தர்! அதற்கு உடனே பாபா தனது ஸ்ரீ கிருஷ்ண மர்மப் புன்னகையுடன்
"சாரே! துனியா மே ஐசா "சாயிபாபா" ஏக் ஹி ஹை பங்காரு!" (இந்த உலகத்திலேயே சாயிபாபாவே அப்படி ஒரே ஒருவர்! பங்காரு!)
(Source : Sri Krishna Sri Sathya Sai | page : 194 - 196 | Author : Dr. J. Suman Babu )
"என்னை விட சிறந்தது" என்று தான் சொல்கிறார். சிறந்தவர் என்று சொல்லவில்லை.. காரணம் :- பேரிறைவனே பரம்பொருள்! பொருளுக்கு சிறந்தது என்ற சொற்பதமே சரி! உலகில் ஆனந்தம் தரக் கூடியது என ஒன்றுமே இல்லை! அதற்காகவே இறைவன் யுகந்தோறும் அவதாரம் எடுக்கிறார்!
எந்த மனிதரும் பாசத்தோடு இருக்கிறார்களே தவிர அன்போடு இல்லை!
சுயநலம் சார்ந்தது பாசம்! பொதுநலம் சார்ந்தது அன்பு! எதிர்பார்ப்பது பாசம்! எதிர்ப்பார்ப்பில்லாதது அன்பு! ஆகையால் அன்பை உணர்த்தவே இறைவன் அவதாரம் எடுக்கிறார்!
உலகில் ஏழு அதிசயங்கள் என அதிசயம் எது என்றே தெரியாத மனிதன் குறித்த அழிந்து போகிற இடங்கள் அல்ல உண்மையான அதிசயம் என்பது...!
உலகில் ஒரே ஒரு அதிசயமே உண்மையில் தொடர்கிறது.. அந்தப் பேரதிசயமே பேரிறைவன் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக