எவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதும்... அதை ஸ்ரீ கிருஷ்ணரே தனது ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் வெளிப்படுத்தியதும் சுவாரஸ்யமாக இதோ...!
ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்ப⁴வந்தி யா: |
தாஸாம் ப்³ரஹ்ம மஹத்³யோநிரஹம் பீ³ஜப்ரத³: பிதா || 14- 4||
ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் "ஏ அர்ஜுனா! இந்தப் பெரும் பிரபஞ்சத்தில் உயிர்த்த எல்லா ஜீவராசிகளுக்கும் நானே தாயும்...! தந்தையும்...! ஆகையால் இந்த படைப்பில் முதிழ்த்த எல்லா உயிரினங்களும் எனது பிரதிபலிப்புகளே என்பதை நீ முதலில் உணர்வாய்!" என்று தெளிவுப் படுத்துகிறார்!
அதே ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்தில் அதனை இன்றளவும் பல சந்தர்ப்பங்களில் பல பக்தர்களுக்கு உணர்த்தியபடி இயங்கி வருகிறார்!
ஒருமுறை டைடுமன் ஜோஹான்சன் எனும் பக்தர் பம்பாயில் இருந்து பெங்களூர் வழியாக ஒரு மாலையில் புட்டபர்த்தி வருகிறார்! அவர் பிரசாந்தி நிலையத்தில் நுழைகிற போது சேவைத் திலகம் கஸ்தூரி பாபாவோடு ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார்!
பாபா டைடுமன்சனை ஒரு பார்வை பார்த்துவிட்டு "டைடுமன்! நீ மிகவும் அழகாகவும் கலையாகவும் இருக்கிறாய்?" என்று பாபா சொன்ன உடன்... டைடுமன் முகத்தில் ஜான்சன் ஒரே பளபளப்பு!
"சரி நான் எப்படி இருக்கிறேன்?" என்று பாபா கேட்க...அந்தக் கேள்வியை டைடுமன் எதிர்பார்க்கவே இல்லை! உலகாயத கேள்வி போல் இருந்தாலும் பாபாவே கேட்பதால் அதன் உள்ளே உண்மை பொதிந்திருக்கிறது என்பதை டைடுமன் அப்போது உணரவே இல்லை!
அவர் பாபாவை நோக்கி "சுவாமி! நீங்களும் அழகாகவும் கலையாகவுமே இருக்கிறீர்கள்!" என்று சொல்கிறார்!
கேள்வி முடிந்ததா? என்றால் அது தான் இல்லை!
பாபா உடனே கஸ்தூரியை காட்டி "கஸ்தூரி எப்படி இருக்கிறார்?" என்று கேட்கிறார்..
அதற்கு டைடுமன் "அவரும் அழகாகவும் கலையாகவும் இருக்கிறார்!" என்று டைடுமன் சொன்ன உடனேயே..
பாபா "ஏன் தெரியுமா?" என்று கேட்கிறார்!
அந்த இடமே கப் சிப்! என்ன விடை அளிப்பது? என்று இருவருக்கும் விளங்கவில்லை! உடனே பாபாவே "ஏனெனில்... நீங்கள் அனைவரும் எனது பிரதிமலிப்புகளே! ஆகவே தான் அழகாகவும்.. கலையாகவும் திகழ்கிறீர்கள்!" என்கிறார்!
"பஜனை ஹாலில் நீங்கள் என்னை கவனித்திருக்கலாம்! நான் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு , புன்னகைத்தபடி... கைகளை அசைத்தபடி , சில சமயங்களில் காற்றில் எனது ஆள்காட்டி நுனி விரலால் எழுதியபடி இருப்பேன்.. கவனித்திருக்கிறீர்களா? ஹும்...! ஏன்? இவை எல்லாம் நான் புரிந்து வருகிறேன் என்பதை அறிந்து கொள்ள நீங்கள் ஆர்வப்படலாம்! நான் அப்படிச் செய்யும் அந்த நேரத்தில்... உங்கள் கண்களுக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்ட பல ஜீவன்களோடு நான் தொடர்பில் இருந்து பேசிக் கொண்டும், அவர்களுடைய பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டும், எனது பல பக்தர்களுக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டும் இருப்பேன்! ஒவ்வொரு நொடியும் ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்ற வேண்டியே எனது சேவைக்கரம் நீண்டு கொண்டே இருக்கிறது! ஆனால் இவை எதனையும் நான் விளம்பரப்படுத்துவதே இல்லை! ஒரு தந்தை தனது குழந்தைகளுக்குச் செய்வதை எல்லாம் வெளியே சொல்லிக் கொண்டிருப்பதில்லை அல்லவா?!"
என்று பாபா தெளிவுப்படுத்துகிறார்!
(Source : Sri Krishna Sri Sathya Sai | page : 198 - 200 | author : Dr. J. Suman Babu )
மகன்கள் தந்தையின் பிரதிபலிப்புகளே என்பதையே பாபா உள்ளர்த்தத்தோடு உரைக்கிறார்!
பாபாவின் குழந்தைகளே நாம்! பிரேமை எனும் புல்லாங்குழலாலேயே ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணர் நம்மை உலகாயத வாழ்வில் தாலாட்டுகிறார்!
பாபாவின் பிரதிபலிப்புகளே நாம்! ஆக...! நம்மிடம் இருந்தும் நாம் நமது சொந்த வாழ்க்கையிலேயே அந்தப் பிரதிபலிப்புகளை வெளிப்படுத்த வேண்டும்!
அது என்ன ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ணரின் பிரதிபலிப்புகள் ??
"சத்ய தர்ம சாந்தி பிரேம அஹிம்சா!"
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக