தலைப்பு

வியாழன், 14 ஆகஸ்ட், 2025

"ஆறு வார காயம், பாபா விபூதி தடவியவுடன் குணம் – பிரபல கிரிக்கெட் வீரர் சுனில் காவஸ்கர் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம்!"

கிரிக்கெட் உலக ஜாம்பவான் சுனில் காவஸ்கர் பற்றி அறியாதவர் யாருமில்லை. அவர் தமது 21 வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இணைந்து, 17 ஆண்டுகள் சிறப்பாக விளையாடி, 34 முறை சதம் அடித்து, 1987ல் டெஸ்ட் கிரிக்கெட் டிலிருந்து ஓய்வு பெற்றார்.பாபாவின் அத்யந்த பக்தரான கவாஸ்கர், தமது கிரிக்கெட் சாதனைகளுக்கும், வாழ்வின் மேன்மைகளுக்கும், பாபாவின் போதனைகளே அடித்தளம் எனக் கூறியுள்ளார். 


சுனில் காவஸ்கரின் தாயார் மீனாள் மனோகர் காவஸ்கர், ஒரு முறை சீரடி பாபாவிடம் தன் மகனுக்காக மனம் உருகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, ஸ்ரீ சத்ய சாய் பாபா அவருக்கு காட்சி அளித்து சில விஷயங்களைச் சொன்னார். அதன் பின்னர் மொத்த காவஸ்கர் குடும்பமும் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பக்தர்களாக மாறினார்கள் என்ற அற்புத அனுபவக் கட்டுரையை நாம் ஏற்கனவே யுகம் பிளாகில் பகிர்ந்துள்ளோம்.

👇👇










இந்த நிகழ்வு சுனில் கவாஸ்கர் பக்தரான பிறகு, அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.

கிரிக்கெட் பிரபலங்களான கவாஸ்கர் காளிசரண் இருவரும் பகவான் பாபாவின் பக்தர்கள். பாபாவைத் தரிசிக்க அவர்கள் சென்றபோது, புட்டபர்த்தி ஹில் வியூ அரங்கில், ஒரு கிரிக்கெட் மேட்ச் நடத்துமாறு பாபா கூற, அதற்கு ஸ்ரீ சத்ய சாயி யூனிடி கப் என்று பெயரிடப்பட்டு 1997 ம் ஆண்டு, முதன் முதலாக ஒருநாள் கிரிக்கெட் மாட்ச் நடத்தப்பட்டது. இதில் வென்ற இந்திய அணியின் காப்டன் சுனில் காவஸ்கருக்கு பகவான் பாபா.... ஸ்ரீ சத்ய சாயி யூனிடி கப்..  பரிசளித்து ஆசீர்வதித்தார்.


இந்திய ஆஸ்திரேலியா டெஸ்ட் மாட்ச் 1977: 

கிரிக்கெட் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமில்லை. அதுவும் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டிகள் எப்போதும் ரசிகர்களின் உச்சகட்ட கவனத்தைப் பெற்றிருக்கும். அப்போது இந்திய அணியின் கேப்டனாக பிஷன்சிங் பேடி அவர்கள் இருந்தார். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் நடந்த அந்தப் போட்டியில் சுனில் கவாஸ்கர் இந்திய அணியில் இடம் பெற்றுஇருந்தார். பரபரப்பாக அவர் பீல்டிங் செய்து கொண்டிருந்த சமயம். கால் சறுக்கியதில் தொடையில் தசையில் கிழிவு (Torn Muscle in his thigh) ஏற்பட்டது. அது இலேசனதாக இல்லாமல், பலமான விபத்தாக அறியப்பட்டது.


ஆறு வாரங்கள் விளையாட இயலாது:

உடற்பயிற்சி வல்லுனர்கள் அவரைப் பரிசோதித்த பின் அவரது அப்போதைய நிலையக் கருத்தில் கொண்டு, அடுத்த ஆறு வாரங்களுக்கு அவர் எந்த மேட்சிலும் விளையாடஇயலாது என கூறிவிட்டனர். அடுத்த டெஸ்ட் மாட்ச் ஒருவார காலத்தில் தொடங்கவிருந்தநிலையில் இது அவருக்கு பேரிடியான செய்தியாய் இருந்தது. வலியோ பொறுக்கமுடியாமல் இருந்த நிலையில், வலது காலை கீழே ஊன்ற முடியவில்லை. ஆகவே தமது மனைவிக்கு தொலைபேசி மூலம் இந்த நிலையை தெரிவித்தார்.


பரமம் விசித்ரம் பாபா விபூதிம்:

குடும்பமே சாயி பக்தர்கள். ஆகையால், அவரது மனைவி பாபா விபூதியை அடிபட்ட இடத்தில் பூசுமாறு கூறினார். ஆனால் காவஸ்கரிடம் அப்போது பாபாவிபூதி இல்லை. கவலைப்பட வேண்டாம். நான் பாபா விபூதியை அனுப்பி வைக்கிறேன். அதைத் தடவுங்கள் நிச்சயம் குணம் தெரியும் என்றார் அவரது மனைவி. இதற்கிடையில் அவரது உடல்நிலை கருதி, அடுத்த டெஸ்ட்டில் விளையாட கவாஸ்கர் தேர்ந்தெடுக்கப் படவில்லை.


இந்நிலையில், A.I.R வர்ணனையாளர், சுசில் தோஷி மூலம், கவாஸ்கருக்கு பாபாவின் விபூதி அனுப்பி வைக்கப்பட்டது. காலைத் தரையில் ஊன்ற இயலாமல் தவித்த காவஸ்கர், பகவானின் அற்புதத்தை எதிர்பார்த்து, அரை பாக்கெட் விபூதியை அப்படியே எடுத்து தமது தொடையில் பூசினார்.


இனி நடந்தவற்றை காவஸ்கரே கூறுகிறார் (நவம்பர் 2000 சநாதன சாரதியில் வந்த பதிவு):

விபூதி தடவும் போதே, என் காலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதை உணர்ந்தேன். இதனால் இந்திய டீம் பொறுப்பாளர்களிடம், என்னை டெஸ்ட் ஆட்டத்திலிருந்து விலக்க வேண்டாம். உடல் தகுதியை சோதித்தபின் முடிவு செய்யுமாறு வேண்டினேன். இரண்டே நாட்களில் என்னால் காலை நன்கு ஊன்றி நடக்க முடிந்தது. ஆயினும் ஒரு இறுக்கான நிலையில் கால் இருப்பதாக உணர்ந்தேன். பரம ஒளஷதமான பாபா விபூதியைகாலில் தடவியபின், எனது உடல் தகுதி சான்று பெற மைதானம் சென்றேன். குயின்ஸ்லேண்ட் கிரிக்கெட் மைதானம், சில படிகளில் இறங்கிய பிறகு தான் அடைய முடியும். அந்தப் படிகளில் இறங்கும் போது எவ்வித தொந்தரவும் இன்றி இயல்பாக நடந்தேன். மைதானத்தில் இறங்கி, சிறிது ஜாகிங் செய்தேன். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும், என் காலில் இருந்த இறுக்கம் விலகுவதைக் கண்டேன். அதனால் அந்த டெஸ்ட் மேட்சில் விளையாட முடியும் என்ற மனத்திடம் வலுப்பெற்றது. அதை இந்தியக் குழுவின் நிர்வாகிகளிடம் தெரிவித்து, அவர்களின் ஒப்புதலையும் பெற்றேன். 


இந்த அற்புதத்தின் மகுடமாக, அந்த மேச்சில் சிறப்பாக விளையாடிய காவஸ்கர், தனது 11வது சதத்தை நிறைவு செய்தார். இக்கட்டில் வந்து பக்தர்கள் இடர் களையும் பாபாவின் பரம கருணையின் அறிமுகச் சீட்டே அவர் கரம் சொரியும் பவித்ர விபூதி அன்றோ. நாமும் நம்பிக்கையுடன் அதை நாடி அணிவோம். நலம் பெறுவோம்.


Reference: "Blossoms in the Eternal Spring" by Mrs. Shammi Paranjape. Page: 16-17. Published by Rupa and Co., 2004.

தமிழில் தொகுத்தளித்தவர்: 

திரு, குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக