(உணவு, தங்குமிடம், தண்ணீர், பார்க்கிங் போன்ற எல்லா LIVE விபரங்களும் ஒரே appல்)
ஆந்திரப் பிரதேச அரசாங்கத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட SAI 100 App, இந்த நூற்றாண்டு விழாவில் உங்களுக்கு முழு வழிகாட்டியாக இருக்கும். விழாவுக்கு தேவையான முக்கியமான தகவல்களை எளிதாக பார்க்க உதவும்:
🔴 சுற்றுலா இடங்கள்
🔴 தங்கும் இட விவரங்கள்
🔴 வாகன நிறுத்த தகவல்கள்
🔴 உணவு வழங்கும் இடங்கள்
🔴 முதலுதவி மற்றும் மருத்துவ உதவி
🔴 குடிநீர் கிடைக்கும் இடங்கள்
🔴 விழா தொடர்பான அறிவிப்புகள் & அட்டவணைகள்
🔴 அவசர உதவிக்கு – கண்ட்ரோல் ரூம் தொடர்பு எண்
இந்த ஆப்பை நீங்கள் இன்ஸ்டால் செய்தவுடன் லொகேஷனை (Location) ஆன் செய்ய வேண்டும். லொகேஷன் ஆன் செய்த பிறகு நீங்கள் புட்டபர்த்தியில் இருப்பது கண்டறியப்பட வேண்டும். நீங்கள் புட்டபர்த்தியில் இருந்தபடியே இந்த ஆப்பை பயன்படுத்தினால் மட்டுமே, இந்த App உங்களுக்கு 100% அனைத்து தகவல்களையும் சரியாகக் காட்டும்.
இப்போதைக்கு இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டுக்கு மட்டுமே உள்ளது. ஆப்பிள் போன் பயன்படுத்தும் ios வாடிக்கையாளர்களுக்கு இந்த அப்ளிகேஷன் இருக்கிறதா என்ற விபரம் தேடிப் பார்த்தவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. ஒருவேளை கிடைத்தால் அதற்கான டவுன்லோட் லிங்க் பிளாகில் அப்டேட் செய்கிறோம்)
SAI 100 App இருக்கும் போது, ஒவ்வொரு பக்தரும் சிரமமில்லாத, பாதுகாப்பான, ஆன்மீக நிறைவான அனுபவத்தை பெற முடியும் — இது பகவான் காட்டிய அன்பும் சேவையும் நிறைந்த உணர்வை உண்மையிலேயே எடுத்துச் சொல்லும். பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் தொடர்பான அனைத்து அப்டேட்டுகளையும் தொடர்ந்து பெற, ஸ்ரீ சத்யசாய் யுகம் WhatsApp குழுவில் இணைந்திருக்கவும். முக்கிய அறிவிப்புகள் அவ்வப்போது பகிரப்படும். குழுவில் சேருவதற்கான இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.
👇🏻👇🏻
பின்குறிப்பு: ஸ்ரீ சத்ய சாயி யுகம் WhatsApp-ல் மொத்தம் 14 குழுக்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒரு குழுவில் (1 to 14) நீங்கள் ஏற்கனவே இருந்தால், இந்த குழுவில் சேர அனுமதி வழங்கப்படாது. புதிய உறுப்பினர்களுக்கு மட்டுமே சேர்க்கை வழங்கப்படும்.









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக