தலைப்பு

ஞாயிறு, 29 மார்ச், 2020

யூகிக்க முடியா ரூபம் எடுக்கும் பாதுகாவலர் பகவான் சாயி!

மனதால் வேண்டி... நினைவால் உருகினால்... எந்த கணத்திலும்... எந்த இடத்திலும்... எந்த ரூபம் எடுத்தும் நமைக் காக்க ஓடோடி வரும் ஒரே கடவுள் சத்ய சாயி. 

ஹௌராவிலிருந்து மெட்ராஸ் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸில் 3வயது மகன், 8வயது மகளுடன் ஒரு ஸ்வாமியின் பக்தை பயணப்படுகிறாள். அது 1980ஆம் ஆண்டு மே மாதம்!!. ரயில் விஜயவாடாவில் நின்றது.

இந்த சிறு பையன் குடிக்க ஏதாவது வாங்கித் தருமாறு தன் அன்னையை தொண தொணத்தான். ஆகவே இளநீரும், படிக்க சில பத்திரிக்கைகளும் வாங்கிவர இந்த குழந்தையை  மட்டும் அழைத்துக்கொண்டு, பெண் குழந்தையை ரயிலிலேயே அமர வைத்துவிட்டு சென்றாள். பிறகு ஒரு கையில் குழந்தை மறு கையில் பத்திரிக்கைகள் என்று வேகமாக வந்து கொண்டிருக்கும் பொழுதே  ரயில் நகரத் தொடங்கி விட்டது. ரயிலில் ஏற முற்படும் நோக்கத்தில் வேகமாக ஓடி வர, இந்த அமர்க்களத்தில் கைப்பையை கடையிலேயே  வைத்துவிட்டு வந்து விட்டாள். வேகமாக வந்து கொண்டிருக்கும் பொழுது பலத்த கைதட்டல் சப்தம் கேட்டது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஒரு விரைவு ரயில். கிளம்பியதும் வேகம் எடுத்து விடும். நல்ல வேளை ஸ்டேஷனிலே ரயில் நின்று கொண்டிருந்தது. கைதட்டல் சப்தம் கேட்ட திசையை நோக்கி திரும்பினால்,ஒரு அழகிய கை இவளது கைப்பையை நீட்டியது. அதுவரை தான் பையை வைத்துவிட்டு வந்தது கூட அவளுக்கு தெரியவில்லை. அவள் பையை வாங்கிக் கொண்டு தன் இடத்தில் போய் உட்கார்ந்த பிறகுதான்,  பையை கொண்டு வந்து கொடுத்தவருக்கு நன்றி சொல்ல மறந்து விட்டதை உணர்ந்தாள். ஆனால் பிளாட்பார்ம் இல்லாத மறுபுறத்திலிருந்து அந்தக் கை நீண்டது என்பதையும் உணர்ந்தாள். ஒருவரையும் காணவில்லை!  நிச்சயம் பாபாதான் அதைக் கொடுத்தார் என்று உணர்ந்தாள்.  கைப்பையில்தான் மொத்த பணமும் , டிக்கெட்டுகளும் இருந்தன!.

இதை விவரித்தவர் தான் அந்தப் பெண்மணி! பகவான் எப்படி, எந்த ரூபத்தில் வந்து பாதுகாவலனாக வருவார் என்பதை நாம் யூகிக்கவே  முடியாது!!.

ஆதாரம்: Gems of Sai Story No 74
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக