தலைப்பு

திங்கள், 23 மார்ச், 2020

என் இருப்பை ஒருபோதும் சந்தேகிக்காதீர்கள்!

ஸ்ரீ சத்ய சாயி அருளுரைகள் 

நம் சத்தியமான தாய் ஸ்ரீ சத்ய சாயித்தாய்... ஒவ்வொரு ஜென்மத்திற்கும் ஒவ்வொரு தாய் மனிதனுக்கு... ஆனால் எல்லா ஜென்மங்களுக்கும் நமக்கு ஒரே சத்தியமான தாய் சுவாமியே!! அத்தகைய ஆயிரமாயிரம் கோடி சுயநலமற்ற தாய்ப்பாசத்தை சுவாமி எவ்வகையில் காட்டுகிறார் என்பதை சுவாமியே நமக்கு உணர்த்துகிறார் இதோ...

பாபா இங்கு இருக்கிறாரா?  நான் பேசுவதை பாபா கேட்டுக்கொண்டிருப்பாரா?  என்று நீங்கள் அடிக்கடி எண்ணிப் பார்க்கிறீர்கள்.. உண்மையில் நான்  உங்களிடமருந்து தூரமாகவோ,எங்கேயோ இல்லை. உங்களுக்கு உள்ளேயே, உங்களுடனேயே இருக்கிறேன். இருப்பினும் என்னை நீங்கள் அடையாளம் தெரிந்து கொள்வதில்லை.

தாயின் கர்ப்பத்தில் குழந்தை இருக்கிறது. அக்குழந்தை கர்ப்பத்தில் நுழைந்ததிலிருந்து பாசத்தை வளர்த்துக் கொள்கிறாள்.. ஆத்மிய பாவம் கொண்டு விளங்குகிறாள்..


குழந்தையின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முன்கூட்டியே எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறாள்.. அவ்விதமாகவே சேர்ந்தே நானும் உன்னுடனையே வந்துள்ளேன். உன்னுடனேயே இருக்கிறேன். உன்னுடைய தேவைகளை தீர்த்து வைக்கிறேன். உன் பசி தாகத்தை தணிக்கிறேன். உனக்கு சக்தியை கொடுக்கிறேன். உன்னை வழி நடத்துகிறேன். இந்த வேலைகளை தாய் வெளியில் இருந்து கொண்டு செய்கிறாள். உள்ளிருப்பவனாகிய  நான் அந்த தூண்டுதலை உண்டாக்குகிறேன். நீ வெளியுலகை பார்த்து, நான் எங்கேயோ  இருக்கிறேன் என்ற மயக்கத்தில் நீ இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?நடந்து கொண்டிருப்பதை நடத்திவைப்பது  உன் உள்ளிருக்கும் நானே என்று நீ கண்டுகொண்டால் ஒரு  க்ஷண காலத்தில் நீ  பார்க்க முடியும். நான் என்ற விஷயத்தை நீ மறந்த அதே வினாடியிலேயே  நானாகவே உன் முன்பாக இருப்பேன்.உன்னுடைய  ஆத்ம சொரூபமே நான்.

- பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா, 06.01.1996,  பிரசாந்தி நிலையம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக