தன்வந்திரி எனும் வைத்திய நாராயணர் சுவாமியின் விபூதி வடிவமாகவே கலியுகத்தில் அவதரித்திருக்கிறார். சுவாமியின் விபூதி என்பது சாதாரணமானதல்ல. உலகப் பற்றையும் நீக்கும்.. அது கொரோனா எனும் கிருமித் தொற்றையும் நீக்கும்.. இதோ சுவாமியே அதை விளக்குகிறார்
சுவாமி விபூதி என்பது அடையாளச் சீட்டு:
ஒரு முறை சுவாமியிடம் ஒரு மருத்துவர் "சுவாமி.. நோயாளிகளுக்கு எந்த மருந்தும் தரமுடியாத சூழல் நிலை சில சமயங்களில் ஏற்பட்டுவிடுகிறது.. அவர்கள் எல்லாம் வெகு தொலைவிலிருந்து வருகிறவர்கள்.. என்ன செய்வது?" என நியாயமான தர்மசங்கடங்களை இறைவன் சத்ய சாயியோடு மனம் திறந்து பேசினார்.
அதற்கு நம் சுவாமியோ "அவர்களுக்கு நீ விபூதி கொடுத்து அனுப்பு" என்று அருள் மொழி தெரிவிக்கிறார்.
அதற்கு மருத்துவர் உடனே ஒரு பொதுக் கேள்வியை சுவாமியிடம்
"சுவாமி பலருக்கு உங்களின் விபூதி மகிமை தெரிவதில்லையே.. அதில் அவர்களுக்கு நம்பிக்கையும் இருப்பதில்லையே.. அந்த நம்பிக்கை அற்ற நேரத்திலும் சுவாமி உங்களின் விபூதி வேலை செய்யுமா? என யாரும் கேட்கத் துணியாத கேள்வியை சுவாமியிடமே கேட்டுவிடுகிறார்...
சுவாமி அதற்கு புன்னகைத்தபடி "நீ ஒரு கண் மருத்துவன்.. உன்னிடம் இதய நோயாளிகள் வந்தால் என்ன செய்வாய்? " எனக் கேட்கிறார்..
ஒரு கணம் கூட சுவாமி மருத்துவரின் பொதுக் கேள்விக்கு கோபப்படவோ.. பதட்டப்படவோ.. வருத்தப்படவோ இல்லை...
உணர்ச்சிகளைத் தாண்டிய உயிரனங்களின் உள்ளுணர்வே நம் இறைவன் ஸத்ய ஸாயி.
சுவாமி கேட்ட கேள்விக்கு மருத்துவரோ "அப்படி நோயாளிகள் வந்தால் அவர்களுக்கு என்னவிதமான உடல் உபாதையோ.. அது தொடர்பான மருத்துவரிடம் அவர்களை ஆற்றுப்படுத்த அவர்களுக்கு ஒரு சீட்டுக் குறிப்பெழுதி அந்தந்த மருத்துவர்களிடம் அந்தந்த நோயாளிகளை அனுப்புவேன்" என மிகத் தெளிவாகத் தன் அனுபவத்தைத் தெரிவிக்கிறார்.
"எந்த நொடியில் விபூதி நோயாளிகளின் நெற்றியில் அடையாளமாக ஏறுகிறதோ.. அந்த நொடியிலிருந்தே அந்த நோயாளியைக் காப்பாற்றும் தலையாய பொறுப்பு என்னிடம் வந்துவிடுகிறது... நீ தரும் விபூதி என்பது.. நீ அவர்களுக்கு இடும் விபூதி என்பது நீ பிற மருத்துவருக்கு பரிந்துரைப்பதற்காக எழுதித் தரும் சீட்டுக் குறிப்புப் போல்.. புரிகிறதா?" என இறைவன் சத்ய சாயி கேட்க மெய் சிலிர்த்துப் போகிறார் மருத்துவர்.
பரமம் பவித்ரம் பாபா விபூதிம்
பரமம் விசித்ரம் லீலா விபூதிம்
பரமார்த்த இஷ்டார்த்த மோக்ஷ பிரதானம்
பாபா விபூதிம் இதமாஸ்ரயாமி
சகல ரோக நிவாரணி...
உடல் நோயோ.. மன நோயோ.. கிருமி தொற்றோ.. விஷக் காய்ச்சலோ... நம்மை சுவாமி விபூதி அடையாளத்தால் ஆட்கொண்டு அருள் சேர்க்கிறார்.
ஆகவே தான் சுவாமி பக்தர்கள் அந்த லீலா விபூதியை அணிந்து கொள்வதோடு அதை உட்கொள்கிறோம்.
சுவாமி விபூதி சாம்பல் என்றே நீங்கள் சில பொழுது அறியாமையால் நினைத்தாலும்.. அந்த சாம்பலிலிருந்தே நிவாரண மகிமை எனும் ஃபீனிக்ஸ் பறவை எழுந்து உயர்கிறது..
அக்ஷய அபூர்வ ஆனந்த பிரபாவம்
தீக்ஷாத் நேத்ர அதிசய சுபாவம்
சாக்ஷாத்கார ஸ்ரீ ஸ்படிக மணி ரூபம்
ஸ்ரீ ஸத்ய ஸாயி விபூதிம்
இத்தகைய சுவாமி விபூதி நம் பிறவிப் பிணியையே தீர்க்க வல்லது.
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக