தலைப்பு

புதன், 4 மார்ச், 2020

எதிர்பாராமல் வந்த லாரியால் காப்பாற்றப்பட்ட வனத்துறை அதிகாரி!


வருடத்தில் சில மாதங்களாவது, ஜனசஞ்சாரமற்ற வனப்பகுதிகளில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் அந்த காட்டு இலாகா அதிகாரிக்கு இருந்தது. ஒருமுறை அவர் பாபாவின் தரிசனத்திற்காக புட்டபர்த்திக்கு வந்திருந்தார். பால்கனி வழியே அவரைப் பார்த்த பாபா, "நான் அனுப்பிய லாரி வந்ததா ?", என அந்த அதிகாரியைப் பார்த்து கேட்டார். ஸ்ரீ கஸ்தூரி நினைத்தார்; 'இவர் ஒரு தொழிலதிபர் போலும்! புட்டபர்த்திக்கு ஏதோ லாரியை அனுப்பிவிட்டு, மீண்டும் திரும்ப வருவதற்காக எதிர்பார்த்து கொண்டிருப்பார்,' என நினைத்தார். ஆனால் அந்த அதிகாரியோ, நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினார். அது பாபா அனுப்பிய லாரி பற்றியது!!
         
காட்டில்,கேம்பில் இருந்தபோது ஏற்பட்ட ஒரு காயம் தீவிரமடைந்து(septic) காய்ச்சல் வந்து ஜன்னி கண்டு விட்டது. இடியுடன் மழை வேறு பெய்து கொண்டிருந்தது. நட்டநடுகாட்டில், பாபாவை வேண்டிக்கொண்டு, செய்வதறியாது திகைத்தார். திடீரென ஒரு லாரி
கடந்து செல்வதைப் பார்த்தார். லாரி ஓட்டுனர் தனது வழியைத் தவற விட்டுவிட்டார். உடனே இந்த
அதிகாரியின் பணியாளர்கள் கூச்சலிட்டுக் கொண்டே லாரியை தொடர்ந்து ஓட, ஓட்டுனர் லாரியை நிறுத்த வேண்டியதாயிற்று.

அந்த லாரி பற்றி தான் பாபா விசாரித்தார்!
அவர் தான் லாரியை அனுப்பி, அதிகாரியை அதில் ஏற்றி 40 மைல் தொலைவில் உள்ள டாக்டரிடம் சென்று சரியான நேரத்திற்கு சிகிச்சை பெறுமாறு செய்தார்.
                                   
ஆதாரம்: Sanathana Sarathi 1961, P58

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக