தலைப்பு

சனி, 7 மார்ச், 2020

பகவானின் வழிகள் யூகிக்க முடியாதது!


இந்த அழகிய கதை ஒரு பக்தரால் விவரிக்கப்பட்டது. ப்ரஸாந்தி நிலையத்தில் ஸ்வாமி ஒரு முறை தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்.  ஒரு 5 வயதுப் பெண் குழந்தை கையில் ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு ஸ்வாமியிடம்  கொடுக்க முயன்று கொண்டு இருந்தாள். ஸ்வாமி அதை எடுத்து கசக்கி தூக்கி எறிந்து விட்டார்.

எல்லோரும் மிகவும்  அதிர்ச்சியுற்று ஏமாற்றம் அடைந்தனர். பிறகுதான் தெரியவந்தது - அந்தப் பெண்ணிற்கு இதயத்தில் ஒரு  ஓட்டை இருப்பதாக சென்னை, ஹைதராபாத் இரண்டு ஊரிலும் மருத்துவர்கள் சொன்னார்கள். ப்ரஸாந்தி நிலையத்தில் சூப்பர்  ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரிக்கு  அழைத்து வந்து அந்த மருத்துவர்களும் அதையே உறுதிசெய்து அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தையின் தாயார்தான் கடிதம் எழுதிக் கொடுத்து ஸ்வாமியிடம் கொடுக்கச் சொன்னார். அதை ஸ்வாமி கசக்கி எறிந்ததும், அந்த அன்னைக்கு, ஆபரேஷனுக்கு மறுப்பதாக நினைத்து குழந்தைக்காக மிகவும் துடித்தாள். ஆனால் பகவானின் வழிகள்  யூகிக்க முடியாதது.

ஆபரேஷனுக்கான தினத்தன்று அந்தப் பெண் குழந்தை, தியேட்டருக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். சிகிச்சைக்கு முன் கடைசியாக பரிசோதனை செய்த பொழுது அவர்களால் நம்ப முடியவில்லை! ஏனெனில் ஓட்டை இருந்ததற்கான அடையாளமே இல்லை. இதயம் ஆரோக்கியமாக இருந்தது. அவர்கள் மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் வீடு திரும்பினார்கள். ஸ்வாமி கடிதத்தை கசக்கியது போல், இதயத்தில் இருந்த ஓட்டையையும் சரி செய்துவிட்டார்.

ஆதாரம்: Gems of Sai Story No 62

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக