தலைப்பு

வியாழன், 19 மார்ச், 2020

சிலை வழிபாட்டின் பின் இருக்கும் தத்துவம் என்ன?


"இந்த பிரபஞ்சத்தில் பிறப்பெடுக்கும் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு உருவம் உண்டு. சிலைகள் இயற்கையில் உயிரற்றவை, அவைகள் கருணை, அன்பு, சகிப்புத்தன்மை ஆகியவைகளை கொண்டிருக்காது. இதன் காரணமாகத்தான் சிலர் சிலை வழிபாட்டிற்கு எதிராக உள்ளனர். இது அறியாமையே.

நீங்கள் உங்கள் ஆள்காட்டி விரலை குறிப்பிட்ட பொருளை சுட்டிக்காட்ட உபயோகிக்கிறீர்கள், உதாரணமாக, ஒரு மலர் அல்லது ஒரு டம்ளர். அதே போன்று சிலைகள் தெய்வீகத்தைச் சுட்டிக் காட்டுபவை. தெய்வீகத்தை உணர்ந்த பின், சுட்டும் கருவி, அதாவது விக்ரகம் தேவை இல்லை. விஷயம் இவ்வாறு இருக்க, சிலை வழிபாட்டை எதிர்ப்பது முட்டாள்தனம் அல்லவா?

உங்கள் பெற்றோர் மற்றும் பாட்டனார் படங்களை நீங்கள் வழிபடுவதில்லை? அப்படங்கள் தன்னில் உயிர் கொண்டவையா? இல்லை. கருணை, அன்பு, தியாகம் இப்படி எந்த குணங்களும் அதற்கு கிடையாது. அவ்வாறு இருக்க அதனை வழிபடுவதன் நோக்கம் என்ன? இந்த படங்களின் மூலம் நாம் அவர்களது மேன்மையை, அவர்களது உதாரணமான வாழ்வை நினைவு கூறுகிறோம்.

6க்கு 4 இன்ச் கொண்ட நூறு ரூபாய் நோட்டினை எடுத்துக்கொள்வோம். அந்த கரன்சி நோட்டில் உயிரோ அல்லது மேன்மையான குணங்களான அன்பு, கருணை ஆகியவை இல்லை. இருப்பினும் மக்கள் அதனை நேசித்து தங்கள் வசம் வைத்திருக்க விரும்புகிறார்கள். இவ்வுலகில் எவரேனும் பணத்தை விரும்பாதவர்கள் இருக்கிறார்களா? நாடு, மதம் கடந்து அனைவரும் பணத்தை விரும்புகிறார்கள். பணத்திற்காக மக்கள் தங்கள் உயிரை விட்ட பல நிகழ்வுகள் உண்டு. அரசின் முத்திரை இருப்பதால் பணத்திற்கு மதிப்பு உள்ளது. அதே போன்று, ஒரு சின்ன உயிரற்ற துணியாக இருந்தாலும், தேசிய கொடிக்கு, அதன் மதிப்பினை உணர்ந்து, நாம் மரியாதை செலுத்துகிறோம்.

விக்கிரக வழிபாடு முட்டாள்தனமாக கருத்தப்பட்டால், அவ்வாறே பணத்தின் மீது கொண்ட விருப்பத்தையும் கொடியின் மீது கொண்ட மரியாதையையும் கருத வேண்டும். இவைகள் இரண்டும் கூட உயிரற்றவைகள் தானே. மனிதனின் நம்பிக்கைகள் அவனது விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டது."
   
- ஸ்ரீ சத்ய சாயிபாபா, 12.03.2002.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக