தலைப்பு

வியாழன், 5 மார்ச், 2020

இனி சத்ய சாயி பகவானின் வெண்கல விக்ரஹம் பஜன் ஹாலின் உள்ளே!


ஜூலை 24, 2002 காலை குரு பூர்ணிமா அன்று இந்த அழகிய லைஃப் சைஸ் வெண்கல விக்ரஹம் சாய் குல்வந்த் மண்டபத்தில் சத்யசாயி பகவானின் திருக்கரங்களால் திறக்கப்பட்டது.

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் மிக அரிய வீடியோ:

160 கிலோ எடையுள்ள இந்த வெண்கல விக்ரஹம், திரு. மிம்மோ ஆல்பர்கோ என்ற ஒரு இத்தாலிய பக்தரால் செய்யப்பட்டது. இந்த விக்ரஹத்தை பகவானின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்க அவர் தொடர்ந்து மூன்று வருடங்கள் கடுமையாக உழைத்து இருக்கிறார். இந்த வீடியோவில் பகவான் விக்ரஹத்தை திறந்து வைத்து சிற்பியை ஆசீர்வதிக்கிறார், மேலும் அவருக்கு ஒரு தங்கச் சங்கிலியையும் வரவழைத்து அணிவிக்கிறார்.

அதே விக்ரஹம் இன்று (05-03-2020) முதல் மீண்டும் பஜன் ஹாலின் உள்ளே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இனி புட்டபர்த்தி செல்லும் அன்பர்கள் பகவானின் தெய்வீக விக்ரஹத்தை தரிசிக்கலாம்.

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக