திருமதி நீடா பேனர்ஜி நாற்பதாண்டுகால இறைவன் சத்ய சாயியின் பரம பக்தை.. தனது வாழ்வின் பல்லாண்டுகளை பல்வேறு மொழிகளிலான (அஸ்ஸாமி, ராஜஸ்தானி, ஆங்கிலம்) இலக்கியங்களை ஹிந்தியில் மொழிமாற்றியவர். இந்திய இலக்கிய பல்கலைக் கழகமான சாஹித்ய அகாடமி போன்றவற்றில் பணியாற்றியவர்.
இறைவனின் அன்பும், கருணையும் பற்றி நிறைய விஷயங்கள் இருப்பினும், யாருக்கு கருணை சென்றடைய வேண்டும் என்பதை கடவுள் தான் தேர்வு செய்கிறார்.
1972 ம் ஆண்டு குரு பூர்ணிமாவிற்கு முன்பாக (காலம் சென்ற ) நீடா பேனர்ஜியின் தாயார் புட்டபர்த்திக்கு முதன் முறையாக வந்திருந்தார். அப்பொழுது அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. மருத்துவர்கள் அவரை பயணம் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியும், அவர் பிடிவாதமாக வந்ததற்கு காரணம் அந்த அம்மாள் கண்ட கனவே ஆகும். கனவில் தனக்குக் காட்சி கொடுத்த பாபாவிற்கு நேரில் நன்றி கூறவே புறப்பட்டு வந்துள்ளார் அந்த அம்மாள் தன் கணவர் மற்றும், இரு மகளுடனும் வந்திருந்தார். இதுகுறித்து அந்த பெற்றோரின் மூத்த மகளான நீடா பேனர்ஜி தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்..
மிக நீண்ட சிரமமான பயணமாக ராஜஸ்தான்- கோடா, பாம்பே, பெங்களூர், தர்மாவரம் வழியே வந்து புட்டபர்த்தியை வந்து அடையும் பொழுது, சுய நினைவே பாதிக்கப்பட்டிருந்தது. அவரது கணவரும், இளைய மகளும் கரங்களைக் கூப்பி, ஸ்வாமியின் தரிசனம் எப்படியாவது கிடைத்துவிட வேண்டும் என்று பிரார்த்தித்த வண்ணம் இருந்தனர், ஏனெனில் கோடாவை விட்டுக் கிளம்பும் பொழுது அந்த அம்மையார் அதைத் தான் எல்லோரையும் கேட்டுக் கொண்டார். தான் ஒரு முறை பாபாவை தரிசித்து, பாத நமஸ்காரம் கிடைத்து விட வேண்டும். அதற்கு தனக்காகப் பிரார்த்திக்கும்படி கேட்டுக் கொண்டார். ஒரு வேளை புட்டபர்த்தியில் பாபாவின் பாதங்களிலேயே தன் உயிர் பிரிந்து விட்டால், குடும்பத்தில் யாரும் வருந்தவோ, அழவோ கூடாது என்றார். தன் குடும்பம் தைரியமான குடும்பம் என்று தான் நம்புவதாகக் கூறினார்.
திருமதி. நீடா பேனர்ஜியின் தாயார்
முகர்ஜி குடும்பம் பாபாவின் பக்தர்களாக அதற்கு முன் இருந்ததில்லை. அவர்களுக்குப் பிரியமான சீரடி சாயி தான் சத்ய சாயியாக அவதாரம் எடுத்து வந்துள்ளார் என அறிந்து கொண்டனர். சத்ய சாயியே, தங்கள் தாயாரின் கேன்ஸர் நோய் குணமாக்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
ஸ்வாமியைப் பற்றி அதிகம் தெரியாது, அவர்களுக்கு அவரது லீலைகளைப் பற்றியும், ஒருவரை தன் வட்டத்திற்குள் கொண்டு வரும் விதம் பற்றியும் தெரியாது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், திருமதி பானர்ஜியின் தாயாருக்கு ஸ்வாமி கனவில் வந்தது! அதோடு மட்டுமின்றி நீண்ட நேரம் கனவில் தாயாருடன் பேசிய ஸ்வாமியை, தந்தையும் பார்த்திருக்கிறார். அவரும் அதே அறையில் நுழைவாயில் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தார். தந்தைக்கு பாபாவின் ஆரஞ்சு வண்ண உடையும், தலை முடியும் ஒளிவட்டமும் மட்டுமே தெரிந்து, தெளிவான முகம் தெரியவில்லை. ஒருவரது கனவில் வந்த பாபா மற்றவருக்கும் எப்படி தெரிவார்? இப்படி ஒரு காட்சியை பெற்றோர்கள் கண்டனவற்றை லீலை என்று கூறப்படுகிறது!.
எப்படியோ, பெற்றோர்கள் புட்டபர்த்தி வருவதற்கு இது ஒரு காரணமாக அமைந்தது. ஸ்வாமியின் தர்ஷன், ஸ்பரிசம், மற்றும் ஸம்பாஷனை எல்லாம் கிடைத்தது! ஸ்வாமி தினமும் அம்மாவிடம் பேசி ஆசிர்வதித்தார். சகோதரியிடம் விபூதியைக் கொடுத்து, நீரில் கலந்து, அந்த நீரையே அம்மாவிற்கு தண்ணீர் தேவைப்படும் பொழுதெல்லாம் கொடுக்கச் சொன்னார். ஒரு நாள் இருவரையும் நேர்காணலுக்கு( Interview) ஸ்வாமி அழைத்தார். ஆனால் அப்பாவை மட்டும் காணவில்லை! அவர் ஒரு செயின் ஸ்மோக்கர்(விடாது புகை பிடிப்பவர்). ஆஸ்ரமத்திற்கு வெளியே சென்று புகைபிடிப்பது வழக்கம், ஸ்வாமி ஒருவரை வெளியே அனுப்பி “முகர்ஜி வெளியே புகைபிடித்துக் கொண்டு நின்று கொண்டு இருப்பார், அவரை அழைத்து வாருங்கள்” என்று கூறினார். வெளியே சென்று அப்பாவை கிட்டத்தட்ட இழுத்து வந்து இன்டர்வ்யூ அறைக்குள் அனுப்பினர். ஸ்வாமி விபூதி கொடுத்தார். அதை அப்பா வாயில் போட்டுக் கொள்ளவில்லை. அவர் ஸ்வாமியின் மேல் அங்கியின் நீண்ட சட்டை கையையே பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்வாமி அவரிடம் அந்த விபூதியைத் தூக்கி எறிந்து விடச் சொன்னார். இப்பொழுது ஸ்வாமி தன் சட்டைக்கையை தோள் பட்டை வரை மடித்து விட்டுக் கொண்டு மீண்டும் விபூதி வரவழைத்து கொடுத்து, இப்பொழது சாப்பிடு என்றார். அப்பாவும் ஏதோ ஒரு மயக்கத்தில் வாயில் போட்டுக் கொண்டார், ஸ்வாமியை பாத நமஸ்காரம் செய்தார். பாபா அவரை அன்போடு முதுகில் தட்டி, “வெகு நாள் கழித்து என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்” என்றார். பிறகு அவர்களுடைய இளைய கால சம்பவங்களையும் அவர்களே மறந்து விட்ட சம்பவங்களைக் கூட அழகாக விவரித்தார். பிறகு ஸ்வாமி, சகோதரியின் கைகளில் இருந்த, கடித துண்டுகளில் மூன்றை மட்டும் எடுத்துக் கொண்டார், அந்துண்டு கடிதங்களில் ஸ்வாமி நிறைவேற்றி வைக்க வேண்டிய கோரிக்கைகள் எழுதப்பட்டிருந்தன! ஸ்வாமி முதல் சீட்டை எடுத்து படித்து விட்டு “அம்மாவின் சிரமம் சீக்கிரம் நீங்கி விடும்” என்றார். இரண்டாவது சீட்டைப் படித்துவிட்டு, சகோதரியின் தலையை செல்லமாக தட்டி, “ஏன் கவலைப்படுகிறாய்? நீ ஏற்கனவே இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டாய்” என்றார். மூன்றாவது சீட்டைப் படித்துவிட்டு, இம்முறை அம்மாவின் தோளில் மெல்ல தட்டி, இனிமையான வார்த்தைகளில், “பரவாயில்லை அம்மா, இவளுடைய திருமணம் அந்த பையன், நீங்கள் பார்த்த பையனுடனே தான் திருமணம் நடக்கும். அவன் நல்ல பையன், இந்தப் பெண் அவனையே மணப்பாள், அவன் நல்லவன்”என்றார்!. சகோதரியின் முகம் சிவந்து, ஸ்வாமியின் பாதங்களை நமஸ்கரித்தாள், எத்தனையோ துண்டு கடிதங்களில் இந்த மூன்றை மட்டும் எப்படி தேர்ந்தெடுத்தார்? என் சகோதரியும், தாயாரும் ஸ்வாமியின் வார்த்தைகளால் பரவசமடைந்தனர். அம்மாவின் உடல் வேதனை சரியாகப் போகிறது. சகோதரி பாஸ் பண்ணியதும் M.Sc., படிக்க விரும்பினாள், எனவே திருமணத்திற்கு அவரசம் இல்லை, இதை வீடு திரும்பிய பிறகு கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என தீர்மானித்தாள்.
மறு நாள் ஸ்வாமி தந்தையிடம், முதலில் கிடைக்கும் ரயிலில் தர்மாவரம் விட்டு சீக்கரம் கிளம்பி அம்மாவை ஊருக்கு அழைத்துச் செல்லும் படி கூறினார். தர்மாவரத்திற்கு காலை முதல் பஸ்ஸில் செல்லுமாறு வலியுறுத்தினார். பஜனுக்குப் பிறகு கிளம்பியவர்களை நிறுத்தி ஆசிர்வதித்தார், அம்மாவிடம் “உங்கள் கஷ்டம் போய் விடும் கவலை வேண்டாம்” என்றார். அம்மா, “ஸ்வாமி, உங்கள் திருவடிகளில் அடைக்கலம் கொடுங்கள்”என்றார். மனதிற்குள் தன் நேரம் முடிந்து விட்டது எனத் தோன்றி விட்டது போலும், அவர் அழ ஆரம்பித்து விட்டார், “ஸ்வாமி என் குழந்தைகள் கதி என்ன ஆகும்?” என்றார். ஸ்வாமி மீண்டும் வாக்குறுதி அளித்தார் “எல்லாம் சரியாகிவிடும் அம்மா!
பரவாயில்லை” என்று கூறி தன் இரு கரங்களையும் அன்னையின் தலையில் வைத்து ஆசிர்வதித்தார், விபூதி வரவழைத்து சகோதரியிடம் கொடுத்து அம்மா குடிக்க தண்ணீர் கேட்கும் பொழுதெல்லாம், இந்த விபூதியை நீரில் கலந்து கொடுக்கச் சொன்னார். சகோதரியையும் வாழ்த்திவிட்டு ஸ்வாமி நடந்து சென்று விட்டார்.
மறுநாள் கனத்த இதயத்துடன், கண்ணீர் மல்க ஸ்வாமியிடம் நன்றி கூறி விட்டு, பாம்பேக்கு கிளம்பினர். அங்கு கோடாவிற்கு செல்ல வேண்டிய ரயிலை தவறவிட்டு விட்டனர். அடுத்த ரயில் பிடித்து வீடு செல்லும் போது ரொம்ப நேரம் ஆகிவிட்டது. ஆகஸ்ட் 1ம் தேதி 1972 ல் தாயார் உயிரோடு இல்லை, 1 மணி நேரம் முன்பாக உயிர் பிரிந்துது!
இது எங்களுக்கு எதிர்பாராத அடி! இப்பொழுது தான் ஸ்வாமியின் வட்டத்திற்குள் வரத்தொடங்கினோம். என் சகோதரி உடைந்து விட்டார், ஏனெனில் ஸ்வாமியின் நேர் மறையான பதில்களை, நேர்மறையாக (positive) எடுத்துக் கொண்டாள், ஆனால் எல்லாம் விபரீதமாகி விட்டது! ஸ்வாமியின் சக்தி பற்றிய கேள்விகள் இவர்களை ஆட்டி படைத்தன.
திருமதி பானர்ஜி, ஸ்வாமி தன் அன்னையின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்து, கடைசி தர்ஷனுக்குப் பிறகு அவளை விட்டிற்கு அனுப்பி விட்டதை மறந்துவிட்டாள். ஸ்வாமி ஒருவரை தன் பக்தனாக ஏற்றுக் கொண்டு விட்டால் நிறைய சூடு பொறுக்க வேண்டியிருக்கும். அவர்களுக்கு சோதனை இப்பொழுது ஆரம்பித்திருக்கிறது. நிறைய விஷங்கள் அவர்கள் வாழ்க்கையில் நடந்து விட்டன. அவை எல்லாவற்றுள்ளும் மிக சுவாரஸ்யமானது, அவர்களது அன்னைக்கு ஸ்வாமி அளித்த மூன்று வாக்குறுதிகள் தான்!
சகோதரி எழுதிய 3 கேள்விகளுக்கு ஸ்வாமி அளித்த பதில்கள்! தாயாரின் கஷ்டங்கள் நீங்கிவிடும் என்றார். தாயார் இறந்து விட்டார்! கஷ்டங்கள் நீங்கிவிட்டன ஆனால் அவர்கள் எதிர் பார்த்த வகையில் அல்ல!
அவளது சகோதரி 2 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டாள் என்று கூறியும், அவள் ஃபிஸிக்ஸ்(பௌதிகம்) பாடத்தில் தோல்வி அடைந்து, மறு தேர்விலும் தோல்வியுற்றாள்! அதோடு மட்டுமின்றி அந்த வருடம் B.Sc., முடிக்க முடியாதவர்கள் மீண்டும் முதல் ஆண்டு முதல் கல்லூரி சென்று படிக்க வேண்டும் என்றும் அர்த்த மற்ற சட்டம் வேறு வந்து விட்டது! தாயை இழந்த ஒரு பெண் மறு தேர்வுக்கு படிக்க முடியாத மன நிலையில் தோல்வி அடைந்து விட்டாள்! இவள் ஏற்கனவே B.Sc.-ல் வெற்றி பெற்றுவிட்டதாக எப்படி ஸ்வாமி கூறினார்?.
திருமதி பானர்ஜிக்கு தன் தங்கை படுவேதனையைப் பார்க்க முடியவில்லை. அவளது கண்ணீர் மல்கிய கேள்விகளுக்கு விடையே இல்லை! முதலாம் ஆண்டு முதல் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்க விண்ணப்பித்தாள் பூர்த்தி செய்யும் பொழுது, மிகவும் மனமுடைந்து, மீண்டும் முதல் ஆண்டு வகுப்பில் அமர்வதை விட இறந்து விடலாம் போல இருந்தது. அந்த விண்ணப்ப படிவத்தை மடித்து, திருமதி பானர்ஜி ஸ்வாமி படத்தின் பாதங்களில் வைத்து விட்டு, ஒரு தீர்மானம் கூறினார்! ஸ்வாமி என் தங்கை இறந்தால் நானும் வாழ முடியாது. மக்கள் உங்கள் மேல் நம்பிக்கை வைக்க மாட்டார்கள், இது எங்களுக்கு சோதனை அல்ல! உங்களுக்கு! நீங்கள் தான் “பக்தவத்ஸன்” என்பதை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு கூறி ஸ்வாமி அலமாரியை மூடி, விளக்கு, ஊது பத்தி, பூஜை – இப்படி எதுவும் செய்யாமல், வெறும் பிரார்த்தனைகளை மட்டும் கூறிக் கொண்டே இருந்தால்.
ஓரு நாள் மதியம் போஸ்ட் மேன் ஒரு பதிவு தபால் கொண்டு வந்து கொடுத்தார். அது ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் இருந்து வந்திருந்தது. இவர்களுக்கு எல்லையற்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில், அந்த கல்லூரி தாங்கள் தவறான தகவல் கொடுத்தமைக்கு வருந்தி, சகோதரி B. Sc., யில் 58% சதவீதம் வாங்கி தேறியிருப்பதாகவும், அதற்கான மதிப்பெண் சான்றிதழும் அனுப்பியிருந்தனர். உடனே அலமாரியைத் திறந்து சுத்தம் செய்து, அலங்கரித்து விளக்கேற்றி ஸ்வாமியிடம் மன்னிப்பு கோரி, பூஜை நடத்தினர். சகோதரியும் M.Sc., பாட்டனியில் சேர்ந்தார், இனிப்புகளும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யப்பட்டன.
ஓரு நாள் மதியம் போஸ்ட் மேன் ஒரு பதிவு தபால் கொண்டு வந்து கொடுத்தார். அது ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் இருந்து வந்திருந்தது. இவர்களுக்கு எல்லையற்ற ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில், அந்த கல்லூரி தாங்கள் தவறான தகவல் கொடுத்தமைக்கு வருந்தி, சகோதரி B. Sc., யில் 58% சதவீதம் வாங்கி தேறியிருப்பதாகவும், அதற்கான மதிப்பெண் சான்றிதழும் அனுப்பியிருந்தனர். உடனே அலமாரியைத் திறந்து சுத்தம் செய்து, அலங்கரித்து விளக்கேற்றி ஸ்வாமியிடம் மன்னிப்பு கோரி, பூஜை நடத்தினர். சகோதரியும் M.Sc., பாட்டனியில் சேர்ந்தார், இனிப்புகளும் ஸ்வாமிக்கு நிவேதனம் செய்யப்பட்டன.
இப்பொழது மூன்றாவது குறிப்பு சீட்டைப் பற்றி பார்ப்போம். ஸ்வாமி, அம்மாவிடம் அவளது பெண், அம்மா தேர்ந்தேடுத்த நல்ல பையனையே மணப்பாள் என்று உறுதி தெரிவித்திருந்தார். இப்பொழுது அந்த பையன் யாரென்று கண்டுபிடித்து யார் சொல்லுவார்கள்?
இரு மாதங்கள் கழித்து ஒரு இளைஞன் வந்தான், தாயார் இறந்ததற்கு வருத்தம் தெரிவித்தான். தான் ஊரில் இல்லாததால் தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என வருந்தினான். சில மாதங்களுக்கு முன்பு ஒரு வசந்த பஞ்சமியில் சரஸ்வதி பூஜையன்று, தாயார் இவனை அழைத்து இருந்ததாகவும், அன்று தான் வீட்டிற்கு வந்ததாகவும் கூறினான். அப்பொழுது, இவனது வேலை, குலம், கோத்திரம் எல்லாம், இவன் உணவு அருந்தும் போது அம்மா விசாரித்தார்கள் என்றான். அம்மாவிற்கு தன்னைப் பிடித்திருந்தது என உணர்ந்ததாகச் சொன்னான். தனக்கும் என் சகோதரியைப் பிடித்திருப்பதாக ஒத்துக் கொண்டான். தங்களுடைய பெற்றோரை விட்டு வந்து பேசச் சொல்லலாம் என நினைத்திருப்பதாகக் கூறினார்! இது ஸ்வாமியின் மூன்றாவது பதில்!
இப்பொழுது அவர்களுக்கு ஒரே கேள்விதான். தாயார் படும் உடல் உபத்ரவங்களில் இருந்து விடுபட்டு விடுவார் என்றால், ஏன் நோய் குணமாகவில்லை? ஆனால் ஸ்வாமி குணமாக்குவதாக கூறவே இல்லை! ஸ்வாமி கூறியதை தவறாகப் புரிந்து கொண்டு, கடவுளைக் குறை கூறி வந்தனர். பின்னால் தங்கள் புரிதலின் தவறுகளை உணர்ந்தபின், ஸ்வாமி இவர்களையும் தனது பக்தர்களாக ஏற்றுக் கொண்டார்.
திருமதி பானர்ஜிக்கு புட்டபர்த்தி வருவதற்கு 25 வருடங்கள் கழித்துதான் சாத்தியமாயிற்று. 1997 ல் இங்கு சேவாதள் ஆக வந்தார். டில்லியிலிருந்து, இருமுறை புட்டபர்த்தியிலும், ஒரு முறை டெல்லியிலும் சேவை செய்தார். இப்பொழுது நிரந்தர சேவாதள் ஆக வந்து விட்டார்கள். 2000 டிசம்பர் முதல் ஸ்வாமியின் பாத கமலங்களுக்கு அருகிலேயே தங்கி, பற்பல அற்புதமான வழிகளில் ஆசிகள் பெற்றுத் தன்னால் இயன்ற வழிகளில் சேவை செய்து வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக