தலைப்பு

சனி, 14 மார்ச், 2020

எல்லோரும் ஞானம் பெறலாம்!


அந்தஸ்து, வகுப்பு, பாலினம் எதுவாக இருந்தாலும், அனைவரும் ஞானத்தைப் பெறலாம். பெண்களுக்கு ஞானம் பெறும் உரிமையில்லை என்று கூறுகிறார்கள். சிவபெருமான் பார்வதிக்கு வேதாந்தத்தை போதிக்கவில்லையா? சிறந்த யோகியான கபிலாசாரியார் தன் தாயான தேவஹூதிக்குச் சாங்க்ய சம்பிரதாயத்தை போதிக்கவில்லையா? பிரஹதாரண்யக உபநிஷதத்தில் கூறுகிறபடி, யாக்ஞவல்கியர் தன் மனைவி மைத்ரேயிக்கு வேதாந்த தத்துவங்களைப் போதிக்கவில்லையா? உபநிடதங்கள் பொய்யுரை புகலா. மேலே சொல்லப்பட்ட செய்திகளைத் தாங்கியுள்ள வேதங்கள் சத்தியத்தை உரைப்பவையே.

மதங்க முனிவர் சிறந்த தபஸ்வி என்பதில் ஐயமில்லை. அவர் சபரி என்ற பெண்ணுக்குப் பிரம்ம ரகசியத்தைப் போதித்தார் என்று ராமாயணம் கூறுகிறது. அந்தக் கூற்று பொய்யா? இந்தயுகத்திலும்கூட பிரம்மத்தைப் பற்றிய விவாதத்தில் சங்கரரே கேட்டுத் திருப்தியுறும் வகையில் அவரோடு சுரேச்வராசாரியாரின் மனைவி வாதாடவில்லையா?

ஞானத்தைத் தேடி முன்னேறுவதற்கான முதன்மைத் தகுதி சாதனா மார்க்கமும் தவமுமேயன்றி, குல, இனப் பிரிவுகளல்ல. இதுபோன்ற செய்திகளை ஒதுக்கித் தள்ளி தவத்திலும் சாதனையிலும் கவனம் செலுத்தவேண்டும்.

-ஞானவாஹினி, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக