தலைப்பு

செவ்வாய், 3 மார்ச், 2020

கீதாவின் வெள்ளி குங்குமச்சிமிழ் திடீரென எதிர்பாராமல் கிடைத்தது!


ப்ருந்தாவன், பெங்களூருவில் நன்கு அறிமுகமான டாக்டர் பத்மநாபனுடைய மகள் தான் கீதா மோகன்ராம்... 

கீதா USAக்கு வந்து இறங்கிய புதிதில், ஒரு வயதான பெண்மணி அவர் வீட்டிற்கு வந்தார்கள். கீதா லக்கேஜையே இன்னும் பிரிக்கவில்லை. கீதா அந்தப் பெண்மணிக்கு, இந்தியர்களின் சம்பிரதாயப்படி பழமும், குங்குமமும் கொடுக்க விரும்பினார்.

எப்பொழுதும் குங்குமத்தை வெள்ளிச்சிமிழில் போட்டு வைத்திருப்பார். சுலபமாக வைத்த இடத்தை ஞாபகம் வைத்து எடுத்துக் கொள்ளலாம் என்று!! சிறு வயதில் இருந்தே, பெரியவர்கள் வந்தால் குங்குமம் கொடுக்கும் பழக்கத்தை, அவளது பெற்றோர் கற்றுக் கொடுத்திருந்தனர். இச்சமயத்தில் அவள் தேடிக் கண்டுபிடித்தே ஆக வேண்டும். அவளது எரிச்சல் அதிகரித்து கொண்டே போயிற்று. சுவாமி தான் இப்படி சின்னச்சின்ன சோதனைகளை செய்கிறார் என்று நினைத்தார். வேறு ஏதாவது நல்ல சோதனையாக வைக்கக் கூடாதா என்று நினைத்தாள். மறுநாள் பெட்டியைத் திறந்து அனைத்தையும் சரிசெய்து வைக்கும் போதும் அதைக் காணவில்லை. களைப்பில் சுவாமியைக் குற்றம் சொல்ல ஆரம்பித்தார். "எப்பொழுதும்
மாணவர்களுடனேயே நேரம் செலவிடுகிறார். என்னைப் பற்றி கவனிக்க நேரம் இல்லையா", என்று  வருந்தினார்.


அரைமணி நேரம் கழித்து, கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. கதவைத் திறந்தால், ஒரு இந்தியப் பெண்மணி நின்று கொண்டு, 'டாக்டர். பத்மநாபனின் மகள் நீங்கள் தானா?, எனக் கேட்டாள். தனது அடையாளங்களைக்
காட்டி, கீதா நிரூபித்தபின், தான் விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும்போது கீதாவின் பெற்றோர் சின்னப் பொட்டலம் ஒன்றைக்
கொடுத்து, சுவாமி இதைத் தனது பிறந்தநாள் பரிசாகக் கொடுத்ததாகக் கூறினார்கள்., என்றாராம்.

கீதா அதைப் பிரித்து  பார்த்தால், உள்ளே அழகிய குங்குமச்சிமிழ், குங்குமம் வைக்கப்பட்டு இருந்தது!!

ஆதாரம்: Geetha Mohanram, Personal Narration 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக