தலைப்பு

திங்கள், 23 மார்ச், 2020

ஒரு நல்ல டாக்டர் இறைவனடி சேர்தல்!


1989ன் இடைப்பட்ட மாதங்களில் டாக்டர் சீதாராமையா அவர்கள் நோய்வாய்ப்பட்டு, திரவ உணவு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தார். காலை தரிசனத்தின் பொழுது 8.15 முதல் 8.30க்குள் டாக்டரின் பேத்தி நாகமணியை நோக்கி குல்வந்த் ஹாலில் வந்து மீண்டும் திரும்பி சென்றுவிட்டார்.

பேத்திக்கு தரிசனம் தரும் அதே நொடியில் சுவாமியை ஆசிரமத்தில் தனது அறையில் டாக்டரும் தரிசிக்கிறார் !!!
மாலை முன்வரிசையில் அமர்ந்து, நாகமணி தன் பாட்டனாரின் உடல்நிலை பற்றி சுவாமியிடம் கூறுகிறாள். அதற்கு சுவாமியோ மிக தீர்க்கமாய் "இத்தனை வருடங்களும் எனக்கு உற்சாகத்தோடு சேவை செய்துள்ளான். அவனது இருப்பிடத்திற்கு அவன் சென்றடையட்டும்" என்கிறார். அன்று மாலை பஜன் முடிந்த பிறகு டாக்டர் இறைவனடி சேர்ந்துவிடுகிறார்.
உத்தராயணத்திற்காக அவர்  பீஷ்மாச்சாரியரை போல் காத்திருந்ததாக ஸ்வாமி சொல்கிறார்.

ஆதாரம் : ஆரோக்கிய பிரதாயினி pg.9
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

எப்பேர்ப்பட்ட பாக்கியம் அந்த மருத்துவருக்கு..

நோய்களைத் தீர்ப்பதென்பது பரம்பொருள் சத்ய சாயிக்கு சாதாரண விஷயம்... பிறவிப் பிணியையே தீர்க்கும் கருணா மூர்த்தி இறைவன் சத்ய சாயி...

ஒரே நேரத்தில் பேத்திக்கும்.. அவளின் பாட்டனாரான டாக்டருக்கும் தனித்தனியாக தரிசனம் தந்திருப்பது இறைவன் சத்ய சாயி லீலை...

நாம் இதைப் போன்ற லீலைகளைப் படித்து பிரம்மிப்பதோடு மட்டுமன்றி ஒன்றே ஒன்று இதயப்பூர்வமாய் செய்திடல் வேண்டும்..

என்ன தெரியுமா?

இறைவன் சத்ய சாயி பாதங்களில் பரிபூரணமான சரணாகதி...

சாய் ராம்🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக