தலைப்பு

வெள்ளி, 20 மார்ச், 2020

சுவாமியே இயக்குகின்றார்.. டாக்டர்கள் வெறும் கருவியே!

 
USAவின் கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் பிரபலமான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் ஒன்றான டாக்டர் திரு. சௌத்ரி அவர்களின் அனுபவம்! 

ஒரு வயதானவர் 25% மட்டுமே இதயம் வேலை செய்யும் நிலையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுவாமிக்கு, இது மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சை  என்று நன்கு தெரியும். இருந்தும் டாக்டர். சௌத்ரியை இந்த அறுவை சிகிச்சையை ஏற்று செய்ய முடியுமா எனக் கேட்டார். ஒரு நிமிஷம் சௌத்ரி அவர்களின் தயங்கிய முகத்தைக் கண்டு பாபாவிற்கு அதிருப்தி ஏற்பட்டது. இதைக் கவனித்த டாக்டர், உடனே  சுவாமியின் ஆசியுடன், சிகிச்சை செய்து விடுகிறேன் என்றார்.  


சுவாமியின் முகத்தில் புன்னகை தோன்றியது. நோயாளிக்கு மூன்று ரத்தக் குழாய்களில் அறுவை சிகிச்சை நடந்தது. சுலபமாக சிகிச்சை நடந்தது. ஆனால் இரவே அவருக்கு இதயத்தைச் சுற்றி ரத்தப்போக்கு ஏற்பட ஆரம்பித்து விட்டது. அது மரணத்தை சமீபித்து விட்டதாக இருந்தது. இதனால் மறுநாள் காலை மீண்டும் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதயத்தைச் சுற்றி  ரத்தக் கட்டிகள் இருப்பதை கணக்கிட்டு சிகிச்சை செய்ய வேண்டும். ஆச்சரியத்தக்க வகையில், அதிக சிக்கல் இல்லாமல் சரியாகிவிட்டது. அவருக்கு மறு உயிர் கிடைத்தது என்பது மிகத் தெளிவாயிற்று. அந்த நோயாளி மிகவும்  வறுமையான சூழலில் உள்ளவர். இவ்வளவு ஆபத்தான சிகிச்சை அவருக்குத் தருவதற்கு இந்தியாவில் வேறு எந்த ஆஸ்பத்திரியிலும் அனுமதித்திருக்க மாட்டார்கள். டாக்டர். சௌத்ரி, பகவானிடம், “ஏன் இவ்வளவு சவாலான சிகிச்சைக்கு சுவாமி தலையிட்டு நடத்தச் சொன்னீர்கள்?”  எனக் கேட்டதற்கு, பகவான் சாதாரணமாகச் சொன்னார், "ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் தரத்தை அவரது கருவியின் தரமே முடிவு செய்கிறது.. நான் உன்னையே என் கருவியாக இதற்கு தேர்வு செய்தேன்" என இறைவன் ஸ்ரீ சத்ய சாயி பகவத் வாசகமாய்ப் பகர்ந்தார்...


இதுவே மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவரான ஸ்ரீ சத்ய சாயியின் சிகிச்சை வழியாகவும் .. ஆரோக்கியத்திற்கான மகிமை வாசலாகவும் அன்றாடம்  அமைகிறது!

மனிதப் பிறவிகள் வெறும் பிறவிகளே.. சுவாமி எப்போது தன் சேவைக்காக தேர்ந்தெடுக்கிறாரோ அப்போது மனிதப்பிறவிகள் பிறவிகள் அல்ல சுவாமியின் கருவிகள்..
தானற்றுப் போய் செய்யும் சேவையிலும்.. சேவை செய்வதால் வரும் புண்ணியங்களைக் கூட கருதாமல் தன்னலமில்லாமல் ஆற்றும் சேவைப் பணி என்பதே சுவாமிப் பணி... 

அப்படி சேவையாற்றும் கருவிகள் அனைவரும் சுவாமியின் அனுமன்களே...


ஆதாரம்: My Holy Man is Avatar, P. 65
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக