தலைப்பு

புதன், 11 மார்ச், 2020

கவின்மிகு காஷ்மீரத்தில் வியத்தகு சாயி மையம்!


குண்டுமழை பொழியும் பாக்கிஸ்தான் எல்லையிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஜம்முவில் அன்பு மழை பொழிய ஒரு அற்புத ஆலயம். அது ஐயனின் திருஉள்ளம்.... 

காஷ்மீர். இயற்கை எழில் கொஞ்சும் மலைகளும் மலர்த் தோட்டங்களும் நிறைந்த ஒரு சொர்க்க பூமி. ஜம்மு.. காஷ்மீரின் தென்பகுதியில் அமைந்து, பாக்கிஸ்தான் மற்றும் சீன எல்லைகளுக்கு அருகாமையில் உள்ளது.

எல்லா வளங்களும் அமையப்பெற்ற காஷ்மீரில் பிணக்குகள் நீங்கி அமைதியும் சகோதரத்துவமும் ஓங்கும் நேரம் வந்துவிட்டது. ஆம். அது ஜம்முவில் புதிதாக திறக்கப்பட்ட சாயி திருக்கோயில் செயல்பட ஆரம்பித்ததால்தான். 2020 -மார்ச் மாதம் 6 ஆம் நாள் வெள்ளிக்கிழமை.. காஷ்மீர விடி வெள்ளியாக.. இந்த வியத்தகு சாயி திருக்கோயில் திரு.ரத்னாகர் அவர்களால் திறக்கப்பட்டது. இந்த சாயி திருக்கோயில் அமைந்திருக்கும் இடமானது மிகவும் பிரச்சினைக்குரிய இடமாகும். இது பாகிஸ்தான் பார்டரில் இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஜம்மு சத்ய சாயி திருக்கோயில் பக்தர்களின் ப்ரேமையால் ஈர்க்கப்பட்ட பாபா அளிக்கும் ஒரு பிரசாதமாகும்.

இந்த சாயி மந்திரின் சிறப்புகள்:

இங்கு பகவான் பாபாவின் அங்கி மற்றும் பாதுகா.. வழிபாட்டுக்காக    வைக்கப்பட்டுள்ளது... நவீன வசதிகளுடன் 300 அன்பர்கள் அமரும் வண்ணம் அமைந்த ஹால்.. அதில் பஜன் மற்றும் பால விகாஸ் வகுப்புகள் செயல்படும்.... மேலும் இங்கு ஓரு திறன்மேம்பாட்டு மையமும், தற்சார்பு தொழிற்கல்வி மையமும் செயல்படும். இந்த மையம் ஜம்மு காஷ்மீருக்கு இதுவரை யாரும் கொடுக்காத, ஆனால் மிகமிக முக்கியமான ஒன்றை வழங்கும். அதுதான் அன்பு அமைதி சகோதரத்துவம் மற்றும் சேவை.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக