அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே
கண்டமின்று கண்டமாக
துண்டம் செய்யும் போதிலும்...
சத்ய சாயி கடவுளுண்டு அச்சமென்பதில்லையே
இருமுகின்ற அகத்திலே
கிருமி பீதி தோன்றினும்
சத்ய சாயி பஸ்பமுண்டு அச்சமென்பதில்லையே
ஊழியாட்ட நோயுமின்று சோழியாட்டம் போடினும்
ஆட்டி வைக்கும் சுவாமி உண்டு
அச்சமென்பதில்லையே
அத்திரிக்கு பிறந்த தத்தன்
சத்ய சாயி தந்த
காயத்திரிக்கு ஆற்றலுண்டு அச்சமென்பதில்லையே
உச்சமென்ற தஞ்சம் கொண்டு
இச்சை என்றும் சுவாமியென்று
நச்சரிக்கும் நாசம் தன்னை
எச்சரித்து உச்சரி
சத்ய சாயி பஜனையுண்டு
அச்சமென்பதில்லையே!
வைரபாரதி✍🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக