தலைப்பு

சனி, 28 மார்ச், 2020

ரேடியோ சாயி!


துவக்கமும் பரிணாமமும்:

வேர்ல்ட் ஸ்பேஷ் (World Space) சாட்டலைட் ரேடியோ சேவையின் ஒரு இலவச சேனலாக, பகவான் பாபாவின் திருக்கரங்களால் நவம்பர் 23, 2001 அன்று துவக்கப்பட்டது ரேடியோ சாய். ஆண்டுகள் செல்ல செல்ல ரேடியோ சாய், 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் ஆறு விதமான (Asia, Afri, Ameri, Telugu, Discourse and Bhajan Stream) சேவைகளை வழங்கும் இணைய வானொலியாக பரிணமித்துள்ளது.

குறிப்பாக, நாள் முழுவதும் சாயி பஜன் ஒலிபரப்பாகும் Bhajan Stream, பகவானின் தெய்வீக பேருரைகளை நாள் முழுவதும் ஒலிபரப்பும் Discourse Stream ஆகியவை அனைவராலும் ரசிக்கப்படும் ஆன்மிக விருந்தாக அமைந்துள்ளது. வெப் லிங்க் : https://www.radiosai.org/Pages/Streaming_Audio.htm

வலைத்தளத்தில் இருப்பவை:

தற்போது ரேடியோ சாய் இணையதளத்தில் (radiosai.org) பல ஆழ்ந்த பொருளுடைய கட்டுரைகள், கதைகள், பக்தர்களின் அனுபவங்கள் மற்றும் பேட்டிகள், புகைப்பட தொகுப்புகள், ஆன்மிக கேள்வி பதில் பகுதி மற்றும் ரேடியோ சாய் குழுவினரால் உருவாக்கப்பட்ட பல வீடியோ தொகுப்புகள் ஆகியவை காணப்படுகிறது.

இ-மெயில் மூலம் இன்றைய சிந்தனை:

பிரசாந்தி நிலையத்தில் பக்தர்கள் பயனடையும் வகையில் தினசரி எழுதப்படும் இன்றைய சிந்தனை எனும் பகவானின் அருளுரைகளை (Sai Inspires) படிக்கவும், அதனை தினமும் மின் அஞ்சல் மூலம் பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. கீழ்க்காணும் லிங்க் மூலம் Subscribe செய்யலாம். https://script.google.com/macros/s/AKfycbwY8UZ_PRknkkQ8GRlbraveYsQGSu31Qf-nrgK1/exec?p=subscribe


நேரடி காணொளி சேவை:

பகவானின் 86ஆவது அவதார தினத்திலிருந்து, சாய் குல்வந்த் மண்டபத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்சிகளின் ஒலி-ஒளி காட்சி (Live Video) நேரடியாக பிரசாந்தியில் இருந்து ஒளிபரப்பபடுகிறது.

தினசரி நேரலை:

அதுமட்டுமல்லாது தினமும் காலையும் மாலையும் சாயி குல்வந்த் மண்டபத்தில் நடைபெறும் வேதபாராயணம் மற்றும் சாயி பஜன் ஆகியவை Asia Streamமை கிளிக் செய்து நேரடியாக கேட்கலாம், இந்த நிகழ்ச்சிகள் நம்மை பிரசாந்தியில் இருப்பதைப் போன்ற அனுபவத்தைக் கொடுக்கின்றது.

வியாழன் விருந்து:

வாரம் ஒருமுறை வியாழன் தோறும், காலை முதல் இரவு வரை பல்வேறு சுவையான நிகழ்ச்சிகளோடு 'Thursday Live' எனும் நேரடி ஒலிபரப்பு துக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு மற்றுமொரு ஆன்மிக விருந்தாகும்.



பகவானின் சிறந்த கைக்கருவி:

அனைத்து தேசத்தினருக்கும், மதத்தினருக்கும், சமூகத்தினருக்கும் பொதுவான, உயர்ந்த-சத்ய கோட்பாடுகள் மற்றும் போதனைகளை நமக்கு வழங்க வந்துள்ள கலியுக அவதாரம் பகவான் பாபாவின் பேரன்பையும், அருள் மொழிகளையும் உலகெங்கும் எடுத்துச்செல்லும் தெயவீகப்பணியில் ஈடுபடும் பல சிறந்த பணிவான கருவிகளில், ரேடியோ சாயியும் ஒரு சிறந்த கருவியாக திகழ்கிறது.

இணைய முகவரி - www.radiosai.org

ஆன்ட்ராய்ட் செயலி லிங்க்: 

https://play.google.com/store/apps/details?id=com.prapar.radiosai

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக