உடலுக்கான உணவை பட்டியலிடும் நாம் ஆன்மாவுக்கான உணவை நினைத்துப் பார்க்கிறோமா.. இதோ இறைவன் சத்ய சாயி காலகிரமமாய் உட்கொள்ள வேண்டிய பட்டியலைக் கட்டளையிடுகிறார்.. கடவுளே கட்டளையிடும் போது கண்களை மூடி கடைபிடிப்பதே நம் கடமை.
"தினமும் காலையில் டிபன், நண்பகல் உணவு, பிற்பகல் சிற்றுண்டி, இரவு உணவு, படுக்குமுன் பழமும் பாலும் உண்கிறீர்கள் அல்லவா?
ஆத்மாவுக்கு இப்படி ஓர் அன்றாட விதிமுறை தருகிறேன். எழுந்ததும் வைகறையில் செய்யும் ஞானமயமான ஓம்கார, காயத்ரீ ஜப-தியானமே இட்லி-சாம்பாராகட்டும். நாம ஜபமோ நகர கீர்தனமோ இட்லிக்கு பின் குடிக்கும் காபியாகட்டும். பிறகு, பலவித வியஞ்ஜனங்களுடன் (காய்கறிகளுடன்) போஜனம் செய்வது போல அபிஷேக, அர்சனாதிகளுடன் பூஜை செய்யுங்கள். இதுவே உங்கள் மதிய போஜனம்.
அதன்பின் எப்போது ஒழிந்தாலும் (நேரம் கிடைத்தாலும்) அலுவலகத்தில் இருந்தாலும்கூட இடைவேளையிலாகிலும், சிறிது லிகித ஜபம் வைத்துக் கொள்ளுங்கள். ஸத்-விஷயங்களைக் கொஞ்சமேனும் படியுங்கள். இவையே பிற்பகலில் உங்கள் சிற்றுண்டியான மிக்ஸ்சரும் டீயும் ஆகட்டும்.
அஸ்தமனத்துக்குப் பின் குடும்பத்தினருடனோ, பக்தர் குடும்பத்தினருடனோ சற்று விரிவான பஜனை என்ற இரவு சாப்பாட்டை உண்ணுங்கள்.
நித்திரைக்கு முன் கனியும், பாலுமாக ரூபத் தியானமும், அரூபத் தியானமும் செய்து ‘ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:’ என்று சாந்தமயமான பரமாத்மாவில் ஒடுங்குங்கள்”
- பகவான் பாபா (ஆதாரம் – அறிவு அறுபது, அத்யாயம் – 14)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக