சாய்ராம்! சுவாமியின் அன்பிற்குரிய பக்தரும், நாடக உலகின் பிதாமகரும் சிறந்த நடிகருமான திரு S.V. சகஸ்ரநாமம் அவர்களின் குமாரரும், ஹிந்துஸ்தானி கஜல் பாடல்களில் அபார திறன் பெற்றவரான சாய் சகோதரர் திரு S.V.S குமார் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்!
சாய்ராம்.... திரு S.V.S குமார் அவர்கள் சுவாமி சென்னையில் காரில் வெளியே செல்லும்போது இரண்டு முறை காரின் கண்ணாடியை இறக்கிவிட்டு தன்னை பார்த்ததாக ஆனந்தத்துடன் கூறுகிறார். அந்த நிகழ்வைப் பற்றி இவர் கூறுவதை தெரிந்து கொள்ளவும்
மேலும் இவர் புட்டபர்த்தியில் சேவைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இவருடன் சேர்ந்து இன்னொரு சேவாதள தொண்டர் ஒருவர் சாதாரண பணிகளை செய்து வருகிறார். இவர் அவரிடம் நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள் என்று விசாரிக்க அவர் மென்மையாக ஒரு விசிட்டிங் கார்டை எடுத்துக் கொடுக்கிறார். அதைப் பார்த்ததும் இவருக்கு மயக்கமே வருவது போல் இருக்கிறது. ஏன்? அந்த விசிட்டிங் கார்டில் அப்படி என்ன இருந்தது? என்பதை தெரிந்து கொள்ளவும்
இவருக்கு வாழ்க்கையில் சில பிரச்சனைகளும் சோதனைகளும் ஏற்படுகின்றன அந்த சங்கடத்தில் சுவாமியை விட்டு விலகுகிறார் அப்புறம் என்ன நடந்தது? என்பதை தெரிந்து கொள்ளவும்
மேலும் அற்புதமான குரல் வளம் கொண்ட இவர் கஜல் சார்ந்த பஜன் ஒன்றை மிகவும் இனிமையாக நமக்காக பாடுகிறார். அந்தப் பாடலைக் கேட்டு சுவைக்கவும்
வாருங்கள் உள்ளே!
📝 ஒரே பாகம் (RST 206)
Source: ரேடியோ சாய்
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: ஏப்ரல் 2014
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக