தலைப்பு

செவ்வாய், 21 ஜூலை, 2020

சாஸ்த்ரிகளுக்கு லலிதா தேவியின் தங்க விக்ரஹம் அளித்த சாயி!

ஸ்ரீ சத்யசாயி மாதாவே உலகில் பேரன்பு கருணை பொழிபவள் என்பதற்கான உதாரணப் பதிவு இதோ... 

ஹைத்ராபாத்தின் வடக்கு பகுதியில் ஸ்ரீ புல்லூரி ராஜேஸம் சாஸ்த்ரி அவர்கள் வசித்து வந்தார் ஒரு பெரிய ஸ்ரீ வித்யா உபாஸகரால் தேவி பூஜை எடுத்து வைக்கப்பட்டு, பூஜை செய்து வந்தார். அற்புதமான ஸ்ரீ சக்ரத்தை வைத்து பூஜை நடத்தி வந்தார். 

ஒரு முறை சாஸ்த்ரி அவர்கள் புட்டபர்த்திக்கு பாபாவைத் தரிசனம் செய்யச் சென்ற போது, நேர்காணல் (interview)  ஸ்வாமியின் அனுக்ரஹத்தால் கிடைத்தது. பாபா ஆசிர்வாதம் செய்து தனக்கொரு லலிதாம்பிகை விக்ரஹம் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார், பாபாவிடம் சொல்லவும் செய்தார். ஸ்வாமியும் தருவதாக உடனே கூறினார், ஆனால் இன்டர்வ்யூ முடியும் வரை எதுவும் நிகழவில்லை. 

மேலும் இரண்டு நாட்கள் பர்த்தியிலேயே தங்கப் பார்த்தார், ஸ்வாமியின் கவனத்தைத் தன்பக்கம் இழுக்க என்ன செய்தும் பலனளிக்கவில்லை, ஊருக்கும் கிளம்பிச் சென்று விட்டார்.  வீட்டிற்குச் சென்று குளித்து முடித்து, பூஜையில் அமர்ந்து ஸ்ரீ சக்ரம் இருக்கும் பெட்டியை எடுத்தார். வழக்கத்தை விட கனமாக இருந்தது. திறந்து பார்த்தால் கண்ணைப் பறிக்கும் தங்க ஜொலிப்புடன் அழகிய லலிதாம்பிகை விக்ரஹம் உள்ளே இருந்தது!.
       
சாஷ்டாங்கமாக விழுந்து, ஸ்வாமியை இதயத்தில் நினைத்து வணங்கினார். விக்ரஹத்தின் அடிப்புறம் “ஸ்ரீ ஸாயி அம்பா” அன்று எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. முன்பை விட பக்திப் பரவசம் அதிகமாகி விட்டது. 
        
எந்தத் தருணத்தில் ஸ்வாமி தன் அன்பைப் பொழிவார் என்று யாராலும் அளவிட்டுத் கூற முடியாது. 

ஆதாரம்: Baba Sathya Sai Part II - P 210
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.


🌻 கை அசைத்துத் தான் இறைவன் சத்ய சாயி ஒரு பொருளை வரவழைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை... கண் அசைவிலும் அவரால் எந்த ஒன்றையும் சிருஷ்டிக்க முடியும் .. காரணம் அவரே இப் பிரபஞ்சத்தின் பரிபூரணப் பரம்பொருள். 🌻

1 கருத்து: