தலைப்பு

சனி, 18 ஜூலை, 2020

அகவிடுதலையே வாழ்வின் லட்சியமாக இருக்க வேண்டும்!


பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் இதழிலிருந்து மலர்ந்தவை எல்லாம் இதிகாசம். பேசியவை புராணம்.. சொன்னவை சூரிய ஞானம்... பகிர்ந்தவை பேரானுபூதிக்கான பிரகாசம்.. அதில் ஓர் சூரியத் துளி இதோ...

மனிதனின் மனம் முழு மாறுபாட்டிற்குட்படவேண்டும். அது கட்டுத்தளைகளை உருவாக்காமல், விடுதலையை உருவாக்க வேண்டும். அது இறைவனிடத்தும், அகம் நோக்கி செல்ல வேண்டும். உலகு சார்ந்து புறம் நோக்கி அல்ல. அப்போதுதான் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்கள் மனிதனின் விதியை மேம்படுத்த முடியும்.

உங்களையே குஷிப்படுத்தி ஏமாற்றும் தந்திரங்களை செய்ய வல்லது மனம். அது ஏமாற்று வேலையிலும் ஒரே நேரம் இரு குதிரை சவாரி செய்யும் வித்தையிலும் வல்லது. நீங்கள் சுவாமி முன் நெடுஞ்சாண் கடையாய் விழுந்து சரணடைந்தாகக் கூறுவீர்கள். ஆனால் வெளியே சென்ற மறுகணம் வேறு விதமாய் நடந்து கொண்டு நம்பிக்கை குறைந்து போக அனுமதிப்பீர்கள். நீங்கள் செய்யும் ஜபமோ, பூஜையோ பலனளிக்கவில்லை என்ற எண்ணம் கூட உங்கள் நம்பிக்கையை கறைப்படுத்தக்கூடாது. சாதனை செய்வது உங்கள் கடமை. உங்கள் உள் உந்துதல், உங்கள் உண்மையான நடவடிக்கை, மற்றவற்றை இறைவனின் முடிவுக்கு விட்டு விடுங்கள். புனிதமான சிவராத்திரி அன்று இதுவே உங்கள் தீர்மானமாக இருக்க வேண்டும்.

- ஸ்ரீ சத்ய சாயிபாபா | 29.2.84, பிரசாந்தி நிலையம்

🌻 ஆத்ம சாதனைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் கடவுள் சத்ய சாயி. அவர் ஆத்மாவை பிறவிக் கடலிலிருந்து கரையேற்றவே வந்தவர். அதை உள்ளுணர்ந்து ஆத்ம சாதனையாற்றி உய்வோமாக! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக