பிருந்தாவனத்தில், டாக்டர்கள் நிரம்பிய அரங்கில், பகவான் ஆற்றிய தெய்வீக அருளுரை!
சாஸ்திரங்களில், "வைத்தியோ நாராயண ஹரி!" என்று கூறப்படுகிறது.
இதன் பொருள், வைத்தியன் நாராயணனுக்கு ஒப்பானவன் என்பதாகும்.
ஒரு வைத்தியன் எப்போது கடவுளுக்கு ஒப்பானவன் ஆகிறான் தெரியுமா?
மௌனம்!
சுவாமி தொடர்கிறார்.
ஒரு டாக்டர் நோயாளியை பார்க்கும்போது வேறு எதையும் நினைக்கக் கூடாது.
அதாவது, அவன் எந்த நாடு, எந்த மொழி, எந்த இனம், எந்த பிரிவு என எண்ணக்கூடாது.
மேலும் அவரது தகுதியை எண்ண கூடாது. அதாவது, அவன் ஏழையா வசதியானவனா, அந்தஸ்து உள்ளவனா என எண்ண கூடாது.
மாறாக, ஒரு நோயாளியை பார்க்கும் போது, "இறைவா! இவருக்கு வலியை நீக்கி நோயை குணப்படுத்தும் வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி.", என எண்ண வேண்டும்.
அவ்வாறு நினைக்கும் போது, ஒரு டாக்டர், Good டாக்டர் ஆகிறார்.
மேலும் சிகிச்சை முடிந்த பின்பு, "நான் கட்டுப் போட்டேன். அவன்(இறைவன்) சுகம் அளித்தான்!
நான் மருந்து கொடுத்தேன், அவன்(இறைவன்)காப்பாற்றினான்!"* என்று எண்ணி, பகவானுக்கு நன்றி கூறவேண்டும்.
இவ்வாறு எண்ணம் கொள்ளும் போது,
'GOOD' டாக்டர், ஒரு 'O' குறைந்து, GOD டாக்டர் ஆகிறார்.
இதை மனதில் கொண்டு நீங்கள், அன்புடனும், பொறுமையுடனும் சேவை செய்ய வேண்டும்."
- என்றார் நம் பகவான் ✋
தமிழாக்கம்: S. Ramesh, Ex-Convenor - Salem Samithi.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக