தலைப்பு

வியாழன், 2 ஜூலை, 2020

இரண்டாம் உலகப் போரிலிருந்து ஓர் இன்னுயிரை மீட்ட இறைவன் சாயி!


சாயி என்றாலோ.. பாபா என்றாலோ... சாயி ராம் என்றாலோ அந்தப் பெயரை சொல்லி முடிப்பதற்குள்ளாகவே பக்தரை ஆபத்திலிருந்து மீட்கும் ஒரே இறைவன் சத்ய சாயி என்பதை உணர்த்தும் மெய் சிலிர்க்கும் ஒரு அனுபவப் பதிவு... 

ஷிலாங்- கௌஹாத்தி சாலையில் பயங்கரமான கார் விபத்தில் இருந்து தப்பிய ஜோஹ்னேஸ்வர் கோகியும் அவரது மனைவியும் ஒரு டவுனுக்கு வர நேர்ந்தது.  அங்கு ஸத்ய ஸாயி விஜயம் செய்திருந்தார்,  அவர்கள் பாபாவை தரிசனம் செய்துவிட்டு வரலாமென வந்து அமர்ந்தனர். பாபா வந்து அவரை பார்த்து “அச்சா, நீ வந்திருக்கிறாயா? நீ உன் மனைவிக்கு நன்றி சொல்ல வேண்டும்.  ஒவ்வொரு முறையும் அவள் என்னை அழைப்பதால் ஆபத்துக்களில் இருந்து உன்னை காப்பாற்றுகிறேன். ஆனால் நீ என்னை ஒரு முறை கூட நினைத்ததில்லை!.  ஏர் ரெய்டு வார்டன் ஞாபகம் இருக்கிறதா?"

வெகு நாட்கள் முன்பு நடந்த – இரண்டாவது உலகப் போர் சமயத்தில்(The Blitz) நடந்த விஷயங்களை நினைவு படுத்திக் கொண்டார்.  அப்பொழுது அவர் லண்டனில் மாணவனாக இருந்த நினைவு வந்தது.   பகல் முழுவதும் காலேஜிலிருந்து களைத்து வந்தால் தூங்க முடியாத படி ஏர் ரெய்டு ஹாரன் பலமாக ஒலித்துக் கொண்டே போகும். ஜெர்மானியர்கள் குண்டு போட விமானத்தில் வரக்கூடும் என்பதால், நம் விமான வார்டன்களின் எச்சரிக்கை விமானம் ஒலி எழுப்பும்,  ஆனால் குண்டு என்றுமே போடப் படவில்லை ஆனால் சைரன் ஒலி கேட்டதும் மேல் தளத்தில் தங்கியிருயப்பவர்கள் கீழே இறங்கி ஓடி விட வேண்டும்.


அன்று மிகவும் களைப்பாக இருந்ததால் இழுத்துப் போர்த்திக் கொண்டு கோகி தூங்க ஆரம்பித்து விட்டான்.  அவன் அறை மேல் தளத்தில் இருந்தது. சைரன் ஒலித்து அடங்கிவிட்டது, ஆனால் சிறிது நேரம் கழித்து கதவைத் தட்டும் ஒலி கேட்டது.  கட்டிட சொந்தக்காரரைத் தவிர வேறு யாருக்கும் அவன் அங்கு தங்கி இருப்பது தெரியாது!.  எனவே அவன் கதவை திறக்கவில்லை!  ஆனால், “நீ உள்ளே  இருப்பது தெரியும் கதவை திற! என்று குரல் கேட்டது. மெதுவாக தூக்க கலக்கத்துடன் கதவைத் திறந்தான்.   அங்கே ஹெல்மெட் அணிந்த பழுப்பு நிற முகத்துடன் ஒரு ஆங்கிலேயன் நின்றிருந்தான், மிகவும் கடுமையான, எரிச்சலூட்டும் தோற்றத்துடன் இருந்தான். அவன் டார்ச்சை கோகாய் மீது அடித்து வெளிச்சத்தில் பைஜாமாவுடன் இருப்பதைப் பார்த்து “பரவாயில்லை! இப்பொழுது உன் முழு ஆடைகளை அணிய நேரம் இல்லை! சைரன் ஒலி கேட்டதல்லவா?   உடனே கீழே இறங்கு” என அதட்டினான் கோகாவும்  வேகமாக அவனோடு இறங்கினான்.  பாதுகாப்பான இடத்திற்குச் சென்று, ஏற்கனவே இருந்த மக்களோடு சேர்ந்து கொண்டார், ஆனால் தான் மட்டும் பைஜாமாவோடு நிற்பது சங்கடமாக இருந்தது.  அதே நேரம் பயங்கரமான வெடி சத்தத்துடன் மேல் தளம் இடிந்து விழுந்தது! இவர்களை வெளியேற்றிய பிறகு பார்த்தால், கட்டடத்தின் வெறும் கம்பிகளும் தூண்களும் மிஞ்சி, கூடு போல் காட்சி அளித்தது.   தன்னை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி கூறியதோடு தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டது போல் இருந்தவர் தான் உயிரைக் காப்பாற்றிய வார்டன் என்றும் உணர்ந்தார். 

பாபா, “அந்த ஏர் ரெய்டு வார்டன் உனக்கு ஞாபகம் இருக்கிறதா? நான் தான் அது! குண்டடியிலிருந்து உன்னை காப்பாற்ற நான் தான் வந்தேன்.  பல முறை உன்னை உன் வாழ்வில் ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றி இருக்கிறேன் .  இப்பொழுது என்னுடன் வந்து இரு" என்றார். இங்கிலாந்தில் 1940 இந்த சம்பவம் நடந்த பொழுது 13 வயது சத்ய நாராயணா, தனது சில சிஷ்யர்களுடன் தான் ஸாயி பாபா என்று பிரகடனம் செய்தார்!.  பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தனக்கு சிஷ்யர்களாக வரக்கூடியவர்களை முன் கூட்டியே பாதுகாத்திருக்கிறார்.  அப்பொழுதே தன்னுடன் பக்தர்களை சேர்த்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்.
                                                                                                   
ஆதாரம்: Golden  Age 1980 , P 142
திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 

🌻 இறைவன் சத்ய சாயி அவதரிப்பதற்கு முன்பான அந்த எட்டு ஆண்டுகளின் இடைவெளியிலும். அதற்கும் முன்பான தன் பூர்வ ஷிர்டி சாயி அவதரிப்பதற்கு முன்பும் இறைவன் அருவ வடிவத்தில் இருந்தே.. பல மகான்களையும் கருவிகளாகப் பயன்படுத்தியுமே பக்தி உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டுதான் இருந்திருக்கிறார்.அந்தக் காவல் இன்றளவும் அனுபவப் பூர்வமான ஒன்றாக இருக்கிறது 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக