தலைப்பு

புதன், 29 ஜூலை, 2020

உலகின் தலைசிறந்த நீரிழிவு நிபுணர் வியக்கும் சாயி மருத்துவ மகத்துவங்கள்!


Dr V. மோகன் M. D., FRCP (london, Edinburgh,  Glasgow,  Ireland), Ph.D, D. Sc.,D. Sc(Hon.Causa), FNASc, FASc, FNA, FACP, FACE, FTWAS, MACP
Founder-Chairman, Dr. Mohan's Diabetes Healthcare group

கருணையே சாயி குணம்.. காருண்யத்தாலேயே பரவுகிறது சாயி மணம்.. அந்த தெய்வீக நறுமணத்தின் ஓரிரு வாசனை இதோ..


பத்மஸ்ரீ டாக்டர் மோகன் அவர்கள்,  உலகின் தலைசிறந்த நீரிழிவுநோய் மருத்துவராக போற்றப்படுபவரில் ஒருவர். அவர் இத்தனை ஆண்டு கால தனது மருத்துவ தொழிலில் இறைவன் சத்ய சாயி நிகழ்த்திய எண்ணற்ற மருத்துவ மகத்துவங்களை கண்ணார கண்டும்.. நெஞ்சார அனுபவித்தும்.. அகமார வியந்தும் இருக்கிறார். அதை தனது கைப்பட எழுதி புத்தகமாகவும் தந்திருக்கிறார். அதில் ஒரு சிலவற்றை நெகிழ்வுற பதிவு செய்கிறார்..


🌹முதலாவது நிகழ்ச்சி:

ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
பயாப்சி பரிசோதனைகள் புற்றுநோய் செல்கள் முற்றிய நிலையில் இருப்பதை உறுதி செய்தது. புற்றுநோய் நிபுணர், அறுவை சிகிச்சை நிபுணர், தலைமை மருத்துவர், ரேடியாலஜிஸ்ட்,  அனஸ்தீசியா நிபுணர் என அனைவரும் கூடி மார்பகத்தை அகற்றிவிட முடிவு செய்தனர்.

அறுவை சிகிச்சைக்கு முன்,  சாயி பக்தையான அவரது பெட்டில், விபூதி காணப்பட்டது. விபூதியை அவர் தடவிக் கொண்டார். அறுவை சிகிச்சை முடிந்தது. அகற்றப்பட்ட சதை துணுக்குகள், மீண்டும் பயாப்சி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

அந்த திசுக்களில் சிறிதும் புற்றுநோய் செல்கள் இல்லை என ரிசல்ட் வந்தது.
மீண்டும் விசாரித்ததில், அறுவை சிகிச்சைக்கு முன், புற்றுநோய் செல்கள் முற்றிய நிலையில் இருந்ததும்; அறுவை சிகிச்சைக்கு, பின் அதில் புற்றுநோய் செல்கள் சிறிதும் இல்லை என்பதும் உறுதியானது.

சுவாமி கேன்சரை கேன்சல் செய்துவிட்டார். உடலை, உயிரை உருக்கும் ரேடியோதெரபி, ஹீமோதெரபி அவருக்கு தேவைப்படவில்லை. இது மெடிக்கல் மிராக்கிள் ஆகும். அதன் பின் அவர் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்தார்.


🌹இரண்டாவது நிகழ்ச்சி:

நான் பணிபுரிந்த மருத்துவமனையில் Diabetics  நோயாளி ஒருவர், காலில் புண் அதிகமானதால் bedடில் சேர்ந்து இருந்தார்.

அவருடைய கால், அழுகிய நிலையில் நாற்றத்துடன் இருந்தது. அவரை குணப்படுத்த இயலவில்லை. காலை அகற்றினால் மட்டுமே அவர் உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதை அவரிடம் தெரிவிக்கும் கடினமான பணி எனக்குத் தரப்பட்டது. நான் அவரிடம் விவரங்களை மென்மையாகவும் அழுத்தமாகவும் , "உடனடியாக அறுவை சிகிச்சை செய்து காலை அகற்றி ஆக வேண்டும், வேறு வழி இல்லை." ,என்று கூறினேன்.
அவர், "கொஞ்சம் பொறுங்கள். நான் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா பக்தர். அவரிடம் பிரார்த்தனை செய்துவிட்டு, நாளை கூறுகிறேன்.", என்றார்.
மறுநாள் அவரை சந்தித்து, " என்ன முடிவு செய்தீர்கள்?" என கேட்டேன்.
அதற்கு அவர்,


" நேற்று நான் சுவாமியிடம் பிரார்த்தனை செய்தேன். விடியற்காலையில், சுவாமி இங்கு வந்தார். எனது படுக்கையில் உட்கார்ந்து காலில் விபூதி தடவி, "கவலைப்படாதே! ஆபரேஷன் தேவையில்லை. நான் இருக்கிறேன்!" என்று கூறிச் சென்றார்."என தெரிவித்தார்.

நான் நர்சை அழைத்து கட்டை பிரித்து காட்டி அவருக்கு விளக்கலாம் என நினைத்தேன். கட்டு பிரிக்கப்பட்டது. பார்த்தால் அவரது புண்கள், bad smell இன்றி, ரணம் ஆறி கொண்டிருக்கும் நிலையில் இருந்தது. அசந்து போனேன். சில நாட்களில் நோயாளி முழுவதும் குணமடைந்து சென்றுவிட்டார். அவரது நம்பிக்கையின் படி பகவான் பாபா வந்து அவரை காப்பாற்றி விட்டார்.
மருத்துவரீதியாக இதுபோல் நடக்க வாய்ப்பே இல்லை.

🌹மூன்றாவது நிகழ்ச்சி:

ஒரு முஸ்லிம் அன்பர், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்து இருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்த பின்பு வலியை தாங்க இயலவில்லை. Powerful drugs, வலி நிவாரணிகள் கொடுத்தும், அவரது வலி குறையவில்லை. அவர் அழுது கொண்டே என்னிடம்,  "ஏதாவது செய்து எனது வலியை நிறுத்துங்கள் சார்!" என மன்றாடினார்.
நான் அவர் கையைப் பிடித்து, மனதில் பாபாவிடம், "பாபா! மருந்துகள்... இவர் வலியை குறைக்க வில்லை. நீங்கள் இவரது வலியை நீக்கி இவருக்கு ஆழ்ந்த உறக்கத்தை கொடுங்கள்." என வேண்டிக்கொண்டேன்.


5 நிமிடங்களில் அவரது அறைக்குச் சென்று வந்த நர்ஸ், "அவர் அனஸ்தீசியா கொடுத்தது போன்று அயர்ந்து உறங்குகிறார்." என்றார்.
மறுநாள் ஏழு முப்பது மணிக்கு தான் அவர் எழுந்தார். அவர் என்னிடம், " சார்! என்ன மேஜிக் செய்தீர்கள் எனக்கு வலியே இல்லை." என்றார்.
நான் தயக்கத்துடன் நடந்ததைக் கூறினேன். அவர் மண்டியிட்டு நமது பகவானுக்கு நன்றி கூறினார்.

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களே மருத்துவருக்கு எல்லாம் பிரதான மருத்துவர். 

ஜெய் சாய்ராம்!

ஆதாரம்: Dr. V mohan Interview - YouTube
தமிழாக்கம்: S. Ramesh, Ex-Convenor - Salem Samithi.

🌻 மருத்துவத்தால் கூட அளக்கமுடியாத பேராற்றல் பொருந்தியது இறைவன் சத்ய சாயியின் மகத்துவம்.. அந்த மகத்துவத்தையும் கடந்து இந்த மனித குலத்தின் பால் இறைவன் சத்ய சாயி காட்டும் பெருங்கருணையும்... பரிவுமே வாழ்நாள் எல்லாம் அவரை போற்றி துதித்து கொண்டாடி அவர் பதம் விழுந்து சரணாகதி அடைய ஒவ்வொரு மனிதரும் அதற்கு அவசியமாக .. அவசரமாக.. கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள். 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக