தலைப்பு

சனி, 18 ஜூலை, 2020

அபய ஹஸ்தத்தால் இதய ஓட்டையை அடைத்த ஆண்டவன் சாயி!


இறைவன் சத்ய சாயியே ஒரே மருத்துவர். இதயத்தை வைத்தியம் செய்யும் இறைவன். பிற மருத்துவர்கள் அனைவரும் இறைவன் சத்ய சாயியின் கருவிகளே.. ஒரே ஒரு அபய ஹஸ்தத்தால் நோயின் தீவிரத்தை  சரிசெய்த ஆண்டவர் சாயி என்பதன் அற்புதப் பதிவு இதோ...
 
ப்ருந்தாவன் வளாகத்திலுள்ள ஸத்ய ஸாயி உயர் கல்வி  நிறுவனத்தின் முன்னாள் மாணவரான ஸ்ரீ கல்யாண் சரண் தேஜா, தனது சகோதரியை பகவானின் அன்பு காப்பாற்றிய விதத்தை விவரிக்கிறார்.

1986ல் அவரது சகோதரி, எவ்வளவு மருந்து கொடுத்தும் அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக் கொண்டிருந்தார். பெற்றோர்கள் தங்களது மகளின் ஆரோக்யம் பற்றி பதட்டம் அடைந்தனர். நிஜாம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதித்ததில், அவரது இதயத்தில் நிறைய துவாரங்கள் (ஓட்டைகள்) இருப்பதாகவும் அதுவே அடிக்கடி நோய்வாய்ப்படக் காரணம் என்றும் கூறினர். டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றனர். பெற்றோர்கள் மிகுந்த கவலையுடன் பகவானின் அருளுக்காக மிகவும் பிரார்த்தித்தனர்.

ஆபரேஷன் நடைபெறும் நாளின் முந்தைய இரவு, தந்தையின் கனவில் வந்து, ஸ்வாமி தன் முகத்தில் புன்னகை பூக்க, அபயஹஸ்தம் காண்பித்து ஆசிர்வதித்தார். அது, தந்தையின் கவலையுற்ற மனதிற்கு ஆறுதலாக இருந்தது.

மறுநாள் ஆபரேஷன் தியேட்டர் வாயிலில் பெற்றோர் பரபரப்பும் கவலையுமாய் காத்திருந்தனர்! ஆபரேஷன் சில மணி நேரங்கள் ஆகும் என ஏற்கனவே டாக்டர்கள் சொல்லியிருந்தனர், ஆனால் எப்படியோ ஒரு மணி நேரத்திலேயே வெளியே வந்து விட்டனர்!  ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து விட்டது என்பதைத் தெரிவித்தனர். தாங்கள் சீக்கிரமாக ஆபரேஷனை முடிக்கக் காரணம், இதயத்தில் நிறைய ஓட்டைகள் தாமாகவே அடைந்து விட்டன என்றும் ஒரு சில மட்டுமே அடைக்கவேண்டி இருந்தது. சற்று கடினமான அறுவை சிகிச்சை என்றுதான் நாங்கள் நினைத்தோம். ஆனால் எங்களுக்கே இது ஆச்சரியமாக இருக்கின்றது என்றனர்!.
     
சிறிது காலம் கழித்து பெற்றோர்கள் ப்ரசாந்தி நிலையத்திற்கு மகளுடன் நன்றி சொல்ல வந்தனர், தரிசன நேரத்தின் பொழுது ஸ்வாமி அவர்களுக்கு மிக அருகில் வந்து, கனவில் வந்த அதே அபயஹஸ்த பாணியில் நின்று மீண்டும் ஆசிர்வதித்தார்.

மொத்த குடும்பத்தினரும், இதயங்களுக்கெல்லாம் இதயமாக இருக்கும், தெய்வீக டாக்டரான ஸ்வாமி தான் பெண்ணைக் காப்பாற்றி இருக்கிறார் என்று அறிந்து கொண்டனர் உண்மையில், வாழ்வில் நம்பிக்கையே ஸாயி தான், ஸாயி இல்லாத வாழ்க்கை பயனற்றதாகிவிடும்!!!                                                             
ஆதாரம்: SAI SPARSHAN P 323,324.
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

🌻 இறைவன் சத்ய சாயியால் ஆற்றமுடியாத செயலேதும் இந்த அவனியில் இல்லை. பிரபஞ்சம் படைப்பதும்.. அளிப்பதும் அழிப்பதும் காப்பதும் யாவும் சுவாமியின் அலகிலா விளையாடல்களே! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக